search icon
என் மலர்tooltip icon

    பைக்

    இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டி அசத்திய டிவிஎஸ் ஐகியூப்
    X

    இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டி அசத்திய டிவிஎஸ் ஐகியூப்

    • டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐகியூப் மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    • டிவிஎஸ் ஐகியூப் ஒட்டுமொத்த விற்பனையில் 89 சதவீதம் 2023 நிதியாண்டில் நடைபெற்று இருக்கிறது.

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்ந்து இரண்டு மாதங்களாக 15 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. 2023 பிப்ரவரி மாத வாக்கில் 15 ஆயிரத்து 522 யூனிட்களும், மார்ச் மாதத்தில் 15 ஆயிரத்து 364 யூனிட்களும் விற்பனையாகி இருக்கின்றன. இதன் மூலம் ஐகியூப் மாடல் ஒட்டுமொத்தமாக இந்திய சந்தையில் ஒரு லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது.

    இந்திய சந்தையில் இதுவரை மொத்தத்தில் ஒரு லட்சத்து 08 ஆயிரத்து 550 ஐகியூப் யூனிட்களை டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 2020 ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் ஐகியூப் மாடலின் விற்பனையில் 89 சதவீதம் மார்ச் 2023 இறுதியிலேயே நடைபெற்று இருக்கிறது. முன்னதாக 2023 நிதியாண்டிலேயே ஒரு லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்ட டிவிஎஸ் இலக்கு நிர்ணயம் செய்து இருந்தது. எனினும், 3 ஆயிரத்து 346 யூனிட்கள் இடைவெளியில் இது தவறிவிட்டது.

    கடந்த 12 மாதங்களாக டிவிஎஸ் ஐகியூப் மாடலுக்கான தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏப்ரல் முதல் ஜூன் 2022 வரை 8 ஆயிரத்து 724 யூனிட்கள் விற்பனையான நிலையில், ஜூலை முதல் செப்டம்பர் 2022 வரை 15 ஆயிரத்து 645 யூனிட்களாக அதிகரித்து இருக்கிறது. பின் அக்டோபர் முதல் டிசம்பர் 2022-க்குள் 43 ஆயிரத்து 055 யூனிட்களாக உயர்ந்தது.

    ஐகியூப் மாடலின் விற்பனை எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பட்டியலில் எதிரொலித்தது. 2023 நிதியாண்டில் மட்டும் ஐகியூப் மாடலை 80 ஆயிரத்து 565 பேர் வாங்கியுள்ளனர். இதன் மூலம் டிவிஎஸ் நிறுவனம் டாப் 20 உற்பத்தியாளர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

    மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் டிவிஎஸ் ஐகியூப் மாடலின் விலை ரூ. 98 ஆயிரத்து 564 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 08 ஆயிரத்து 690 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    சமீபத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 140 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் டாப் எண்ட் ஐகியூப் ST வேரியண்டை அறிமுகம் செய்தது. எனினும், இதன் விலை விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

    Next Story
    ×