search icon
என் மலர்tooltip icon

    பைக்

    விரைவில் வெளியீடு.. இணையத்தில் லீக் ஆன டிவிஎஸ் 300 சிசி பைக் புகைப்படங்கள்!
    X

    கோப்புப்படம் 

    விரைவில் வெளியீடு.. இணையத்தில் லீக் ஆன டிவிஎஸ் 300 சிசி பைக் புகைப்படங்கள்!

    • அபாச்சி RTR 310 மாடலிலும் 310சிசி சிங்கில் சிலின்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது.
    • இந்த மாடல் பிஎம்டபிள்யூ G 310 R மாடலில் உள்ளதை போன்ற சேசிஸ் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டது.

    டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அபாச்சி RTR 310 மோட்டார்சைக்கிள் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இவை மோட்டார்சைக்கிள் விளம்பர படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

    புகைப்படங்களில் புதிய அபாச்சி RTR 310 மாடல் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த மாடல், பிஎம்டபிள்யூ G 310 R மாடலில் உள்ளதை போன்ற சேசிஸ் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டது. எனினும், தற்போதைய ஸ்பை படங்களில் புதிய மாடலின் சேசிஸ் மாற்றப்பட்டு இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    இந்த மாடலின் ஃபிரேம் காணப்படாத நிலையில், இதன் சப் ஃபிரேம் முற்றிலும் புதிதாக இருக்கிறது. இதன் முன்புற ஃபோர்க் டியூப்கள் பிஎம்டபிள்யூ G310R மாடலில் இருப்பதை விட சற்று மெல்லியதாக காட்சியளிக்கின்றன. மற்ற பாகங்களான வீல்கள், பிரேக் டிஸ்க், சீட், எல்இடி லைட் உள்ளிட்டவை முற்றிலும் புதிதாக உள்ளன.

    புதிய அபாச்சி RTR 310 மாடலிலும் 310சிசி சிங்கில் சிலின்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 34 ஹெச்பி பவர், 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் பவர் மோட்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வழங்கப்படும் என்று தெரிகிறது.

    அடுத்த சில மாதங்களுக்குள் டிவிஎஸ் அபாச்சி RTR 310 மாடல் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. அறிமுகமாகும் பட்சத்தில் இந்த மாடல் கேடிஎம் 390 டியூக், ஹோன்டா CB300R மற்றும் பஜாஜ் டாமினர் 400 மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    Photo Courtesy: IamBikerDotcom

    Next Story
    ×