என் மலர்
நீங்கள் தேடியது "KTM"
- அங்கீகரிக்கப்பட்ட KTM சேவை மையங்களில் மட்டுமே மாற்றம்.
- தங்கள் பைக் திரும்ப பெறுதல் பட்டியலில் உள்ளதா என்பதை கேடிஎம் அதிகாரப்பூர்வ வலைதளப்பக்கத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.
பெட்ரோல் டேங் மூடியின் சீல்தரம் குறைபாடு காரணமாக பஜாஜ் நிறுவனத்திற்கு சொந்தமான KTM அதன் 125, 250, 390 மற்றும் 990 டியூக் மாடல் பைக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. சீல் குறைபாட்டால் மூடியில் விரிசல் விழுந்து, எரிபொருள் கசிவுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்த அறிவிப்பை பைக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த மாடல் பைக்குகளை அங்கீகரிக்கப்பட்ட KTM சேவை மையத்திற்கு எடுத்துச் சென்றால், சேதத்தை தவிர்க்கும் விதமாக மூடியின் சீல் பகுதியை இலவசமாக சரிசெய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களால் மட்டுமே செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. தங்கள் பைக்குகளில் இந்த சீல் குறைபாடு இருக்கிறதா என்பதை வலைத்தளத்தில் சென்று பார்த்து அறிந்துகொள்ளலாம் என கேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது கேடிஎம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று, சேவை பிரிவில் தங்கள் VIN எண்ணை உள்ளிடுவதன்மூலம், உரிமையாளர்கள் தங்கள் பைக் திரும்ப பெறுதல் பட்டியலில் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளலாம்.
இந்தியாவில் 990 டியூக் விற்பனை செய்யப்படவில்லை. ஆகையால் 125, 250, 390 டியூக் மாடல் உரிமையாளர்கள் கூடுதல் விளக்கங்களுக்கு தங்கள் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- இந்த வீடியோவில் KTM பைக்கை அந்த இளைஞர் வாங்குகிறார்.
- அவருடன் இருந்த அம்மாவின் கழுத்திலும் நகைகள் இல்லாமல் இருந்தது இணையத்தில் பேசுபொருளானது.
புதிதாக பைக் வாங்கி அதனை ரீல்ஸ் விடியோவாக பதிவிட்ட அரியலூர் இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த வீடியோவில் KTM பைக்கை அந்த இளைஞர் வாங்குகிறார். அவருடன் அவரின் அம்மா, அப்பா தோற்றத்தில் 2 பேர் நிற்கின்றனர். குறிப்பாக அவருடன் இருந்த அம்மாவின் காதிலும் கழுத்திலும் நகைகள் இல்லாமல் இருந்தது இணையத்தில் பெரும் பேசுபொருளானது.
அம்மாவின் கழுத்தில் ஒரு நகை கூட இல்லாமல் இருக்கும் நிலையில், பையனுக்கு பைக் கேட்கிறதா? என்று பலரும் இணையத்தில் விமர்சனம் முன்வைத்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இளைஞர் விளக்கம் கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் என்னுடன் இருந்தவர் என் அத்தை என்றும் நான் சேமித்த பணம் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் கொடுத்த பணத்தில் தான் பைக் வாங்கினேன். எங்கள் பணத்தில் நாங்கள் பைக் வாங்கியதில் உங்களுக்கு என்ன பிரச்னை என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய இளைஞரின் தாயார், "பையன் ஆசைப்பட்டான் வண்டி வாங்கி கொடுத்தேன். அதுல என்ன பிரச்சினை.நான் சம்பாரிக்கிறேன். அவன் சம்பாரிக்கிறான்.`பொறுமையா போ' அப்படினு அட்வைஸ் பண்ணுங்க. வேண்டாம்னு சொல்லல... அத விட்டுட்டு தேவையில்லாம கமெண்ட் பண்ணாதீங்க. ஏழைங்கன்னா இந்த வண்டி வாங்கி ஓட்ட கூடாதுனு ரூல்ஸ் இருக்கா?'' ஏன்னு தெரிவித்தார்.
- இரு பைக்குகளும் ஒரே 399 சிசி, எல்சி4 என்ஜினை பயன்படுத்துகின்றன.
- அதிகபட்சமாக 45.4 hp பவர் மற்றும் 39nm டார்க்கை வெளிப்படுத்துகிறது.
கேடிஎம் நிறுவனம் இந்திய சந்தையில் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை சத்தமின்றி உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக கேடிஎம் 390 அட்வென்ச்சர் மற்றும் அட்வென்ச்சர் X ஆகியவற்றின் விலை ரூ. 27,000 வரை உயர்ந்துள்ளது. அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான விலைகள் தற்போது ரூ. 3.26 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றன.
அட்வென்ச்சர் X உடன் தொடங்கி, 390 அட்வென்ச்சர் சீரிசின் என்ட்ரி லெவல் மாடலின் விலை தற்போது ரூ. 3.26 லட்சமாக உள்ளது. இது ரூ. 3.03 லட்சத்தில் இருந்து அதிகரித்துள்ளது. இது மாடலுக்கு சுமார் ரூ.23,000 அதிகம் ஆகும். கேடிஎம் 390 அட்வென்ச்சர் விலை தற்போது ரூ. 3.68 லட்சத்தில் இருந்து ரூ.27,000 அதிகரித்து ரூ.3.96 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஹார்டுவேரை மையமாக கொண்டு, இரண்டு பைக்குகளிலும் WP Apex USD ஃபோர்க் முன்புறத்திலும், WP Apex மோனோ ஷாக் பின்புறத்திலும் உள்ளது. அட்வென்ச்சர் X இன் அலாய் யூனிட்டுகளுக்கு ஸ்போக் வீல்களையும், X இன் 19-இன்ச்க்கு பெரிய 21-இன்ச் முன் சக்கரத்தையும் பெறுகிறது. இரண்டும் 17-இன்ச் பின்புற சக்கரத்தைப் பெறுகின்றன. அட்வென்ச்சர் X நிலையான அட்வென்ச்சரை விட குறைந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 5 மிமீ குறைந்த இருக்கை உயரத்தையும் பெறுகிறது.
அம்சங்களைப் பொறுத்தவரை, இரண்டு பைக்குகளும் 4.5-இன்ச் TFT டிஸ்ப்ளே, ரைடு-பை-வயர், LED லைட்டிங், ஒரு குயிக் ஷிஃப்டர் மற்றும் ஆஃப்-ரோடு ஏபிஎஸ் ஆகியவற்றைப் பெறுகின்றன. இருப்பினும், அட்வென்ச்சர், குரூயிஸ் கண்ட்ரோல், ரைடு மோட்கள், கார்னரிங் ABS மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் என கூடுதல் மின்னணுவியல் அம்சங்களைப் பெறுகிறது.
இரு பைக்குகளும் ஒரே 399 சிசி, எல்சி4 என்ஜினை பயன்படுத்துகின்றன. இது அதிகபட்சமாக 45.4 hp பவர் மற்றும் 39nm டார்க்கை வெளிப்படுத்துகிறது.
- எஞ்சின் ஒரு ஸ்டீல் டிரெலிஸ் ஃபிரேமில் மூடப்பட்டிருக்கும்.
- பைக்கில் 10.1 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.
கேடிஎம் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய என்ட்ரி லெவல் டியூக் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பைக் யமஹா எம்டி 15 உடன் ஒப்பிடத்தக்கது. கேடிஎம் முழுமையாக ஃபேர் செய்யப்பட்ட பதிப்பான ஆர்சி 160 ஐயும் தயார் செய்துள்ளது, இது வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும்.
கேடிஎம் 160 டியூக்: எஞ்சின்
கேடிஎம் 160 டியூக் மாடலில் 164.2-சிசி, ஒற்றை சிலிண்டர், லிக்விட்-கூல்டு, SOHC எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 9,500 rpm இல் 19 ஹெச்பி பவர், 7,500 rpm இல் 15.5 Nm டார்க் உற்பத்தி செய்கிறது. இந்த எஞ்சின் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்படுகிறது.
கேடிஎம் 160 டியூக்: ஹார்டுவேர்
கேடிஎம் 160 டியூக் பைக்கில் 17 இன்ச் சக்கரங்கள், டியூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் WP அப்சைடு-டவுன் ஃபோர்க்குகள், பின்புறத்தில் மோனோ-லிங்கேஜ் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் பிரெம்போ டூயல்-சேனல் ABS (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) 320 மிமீ முன்புற டிஸ்க் மற்றும் 230 மிமீ பின்புற டிஸ்க்குடன் வருகிறது.
எஞ்சின் ஒரு ஸ்டீல் டிரெலிஸ் ஃபிரேமில் மூடப்பட்டிருக்கும். இத்துடன் முழுமையாக எல்இடி லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் வீல்பேஸ் 1,357 மிமீ ஆகும். இந்த பைக்கில் 10.1 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.
கேடிஎம் 160 டியூக்: அம்சங்கள்
புதிய கேடிஎம் 160 டியூக்- எலெக்டிரானிக் ஆரஞ்சு, அட்லாண்டிக் புளூ மற்றும் சில்வர் மெட்டாலிக் மேட் என மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. இத்துடன் 5-இன்ச் எல்சிடி கன்சோல் மொபைல் கனெக்டிவிட்டி மற்றும் நேவிகேஷன் வசதியை ஆதரிக்கிறது.
இந்திய சந்தையில் கேடிஎம் 160 டியூக், டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V மற்றும் யமஹா எம்டி 15 போன்ற பிற மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக உள்ளது. புதிய கேடிஎம் 160 டியூக் மாடலின் விலை ரூ.1.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- ஃபேரிங் முழுவதும் பெரிய 'கேடிஎம்' எழுத்துக்களால், 'RC' மற்றும் 'Ready to Race' சின்னங்களுடன் சிறப்பிக்கப்படுகிறது.
- இந்த பைக்கில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
கேடிஎம் இந்தியா சமீபத்தில் இந்திய சந்தையில் விற்கப்படும் மோட்டார்சைக்கிள்களின் வரிசையில் பெரிய மாற்றத்தை செய்து விலையை உயர்த்தியது. இந்த மாற்றத்திற்கு உட்பட்ட மாடல்களில் RC 200 உள்ளது. இது சுமார் ரூ.11,000 உயர்த்தப்பட்டு, அதன் விலை ரூ.2.54 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) உயர்ந்துள்ளது.
இதனுடன், கடுமையான OBD-2B விதிமுறைகளுக்கு இணங்க பைக் அதன் பவர்டிரெயினில் மாற்றங்களைப் பெற்றது. மேலும், இந்த பைக் முன்பை விட அதிக புதிய நிறங்களில் கிடைக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிக ஆப்ஷன்களை வழங்குகிறது.
சமீபத்திய நிற மாற்றம் மெட்டாலிக் கிரே என்று அழைக்கப்படுகிறது. இது ஃபேரிங் மற்றும் டெயில் பிரிவில் ஆரஞ்சு நிறத்துடன் கூடுதலாக இரண்டு சாம்பல் நிற நிழல்களின் குறிப்பிடத்தக்க கலவையைக் கொண்டுள்ளது. இது ஃபேரிங் முழுவதும் பெரிய 'கேடிஎம்' எழுத்துக்களால், 'RC' மற்றும் 'Ready to Race' சின்னங்களுடன் சிறப்பிக்கப்படுகிறது.

மற்றப்படி இந்த பைக்கில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பைக் ஒரு ஸ்பிளிட்-ட்ரெல்லிஸ் டியூப் ஃபிரேமை அடிப்படையாகக் கொண்டது. இது முன்புறத்தில் 43 மில்லிமீட்டர் USD ஃபோர்க்குகள் மற்றும் பின்புற முனையில் 10-ஸ்டெப் சரிசெய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு ரேடியலாக பொருத்தப்பட்ட காலிப்பர்களுடன் 320 மில்லிமீட்டர் டிஸ்க் மற்றும் ஃபுளோட்டிங் காலிபருடன் பின்புற முனையில் 230 மில்லிமீட்டர் டிஸ்க் வழங்கப்படுகிறது.
கேடிஎம் RC 200 பைக்கில் வளைந்த ரேடியேட்டருடன் கூடிய அதே 199.5 cc சிங்கிள்-சிலிண்டர் லிக்விட்-கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது, இது சிறந்த குளிரூட்டலை வழங்குகிறது என்று பிராண்ட் கூறுகிறது. இது 24 hp பவரையும் 19 Nm பீக் டார்க்கையும் வெளியிடும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
- கேடிஎம் RC 200 அதிகபட்சமாக ரூ.12,000 விலை உயர்வைப் பெற்றுள்ளது.
- இந்திய சந்தையில் பிராண்டின் பிரபலமான மாடல்களில் 250 டியூக் ஒன்றாகும்.
இந்திய சந்தையில் விற்கப்படும் தனது பைக்குகளின் விலையை கேடிஎம் நிறுவனம் மாற்றி அமைத்துள்ளது. இந்த விலை மாற்றங்கள் மூலம், பைக்குகளின் விலை ரூ.12,000 வரை அதிகமாகிறது. மாடல்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 வரை உயர்ந்துள்ளது. உள்ளீட்டு செலவுகள் அதிகரித்து வருவதாலும், பணவீக்கம் காரணமாக ஏற்படும் வேறுபாட்டை சரிசெய்யவும், தங்கள் மாடல்களின் விலையை உயர்த்திய பிற நிறுவனங்களுடன் கேஎடிஎம் இணைந்து உள்ளது.
ஆஸ்திரிய பிராண்டின் விலை உயர்வில் கேடிஎம் 390 டியூக் மாடல் விலை குறைந்தபட்சமாக ரூ.1,000 அதிகரித்துள்ளது. இதன் மூலம் பைக்கின் விலை ரூ.2.96 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) மாறியுள்ளது. முன்னதாக, இந்த நிறுவனம் பைக்கின் விலையை ரூ.18,000 குறைத்திருந்தது. இதனால் பைக்கின் விலை ரூ.3.13 லட்சத்திலிருந்து ரூ.2.95 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) குறைந்தது.
இதற்கிடையில், கேடிஎம் 250 டியூக் மற்றும் RC 390 இப்போது ரூ.5,000 விலை உயர்ந்துள்ளன. இதன் மூலம் 250 டியூக்கின் விலை ரூ.2.30 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் RC 390 இப்போது ரூ.3.23 லட்சமாக (இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள்) உள்ளது. பஜாஜ் பல்சர் N250, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R மற்றும் சுசுகி ஜிக்ஸர் 250 போன்ற இந்திய சந்தையில் பிராண்டின் பிரபலமான மாடல்களில் 250 டியூக் ஒன்றாகும்.
கேடிஎம் RC 200 அதிகபட்சமாக ரூ.12,000 விலை உயர்வைப் பெற்றுள்ளது. இந்த மாற்றத்துடன், பைக் இப்போது ரூ.2.33 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்கப்படும், முந்தைய ரூ.2.21 லட்சத்துடன் ஒப்பிடும்போது இந்த பைக் ஹீரோ கரிஸ்மா எக்ஸ்.எம்.ஆர்., பஜாஜ் பல்சர் ஆர்.எஸ். 200, சுசுகி எஸ்.எஃப். 250, மற்றும் யமஹா ஆர்15 வி4 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- கேடிஎம் நிறுவனத்தின் புதிய 2023 RC 8C மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- இது லிமிடெட் எடிஷன் டிராக் சூப்பர் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் ஆகும்.
கேடிஎம் நிறுவனம் 2023 RC 8C லிமிடெட் எடிஷன் டிராக்-ஒன்லி சூப்பர் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் ஆகும். சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இருக்கும் லிமிடெட் எடிஷன் மாடல் காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்களை பெற்று இருக்கிறது. 2023 கேடிஎம் RC 8C மாடல் முற்றிலும் புதிய நிறம், ஏரோ பேக்கேஜில் மாற்றம், மேம்பட்ட எலெக்ட்ரிக் அம்சங்கள், உயர் ரக உபகரணங்களை கொண்டிருக்கிறது.
செயல்திறனை பொருத்தவரை 2023 கேடிஎம் RC 8C மாடல் 133 ஹெச்பி பவர், 98 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய மாட்கள், குறைந்த எடை கொண்ட டைட்டானியம் வால்வுகள், காண்ராட், இரு பிஸ்டன் ரிங், அதிக கம்ப்ரெஷன் ரேட், பெரிய திராட்டில் பாடி, போல்ஸ்டர் செய்யப்பட்ட பியூவல் பம்ப் / பிரெஷர் காரணமாக இந்த மாடலின் திறன் 6.9 ஹெச்பி வரை அதிகரித்து இருக்கிறது.

மேலும் இந்த மோட்டார்சைக்கிளின் கிளட்ச் பிரீலோடு அதிகரிக்கப்பட்டு, டாப் பேலன்சர் நீக்கப்பட்டு, கிரான்க்-கேஸ் பேலன்சர் அட்ஜஸ்ட் செய்யப்பட்டு இருப்பதாக கேடிஎம் தெரிவித்து உள்ளது. மேலும் இதன் தெர்மல் ஸ்டேபிலிட்டியை உறுதிப்படுத்த PANK ஆயில் கூலர் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது. 2023 கேடிஎம் RC 8C மாடலின் ஒட்டுமொத்த எடை 142 கிலோ ஆகும். இதில் உள்ள முற்றிலும் புது டைட்டானியம் அக்ரபோவிக் எக்சாஸ்ட் சிஸ்டம் எடை குறைய உதவுகிறது.
புதிய லிமிடெட் எடிஷன் RC 8C மாடலின் டிராக்ஷன் கண்ட்ரோல், மேப்பிங் மற்றும் என்ஜின் பிரேக்கிங் உள்ளிட்டவைகளை ரைடர்கள் கஸ்டமைஸ் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்டீரிங் ஹெட், திராட்டில் ரெஸ்பான்ஸ், பிரெம்போ ஸ்டைல்மா கேலிப்பர், RCS 19 கோர்சா கோர்சா மாஸ்டர் சிலிண்டர் உள்ளிட்டவைகளில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் காக்பிட் பகுதியில் மேம்பட்ட டேஷ்போர்டு, ஜிபிஎஸ் டேட்டா லாகர், கேடிஎம் RC16 சார்ந்து உருவாக்கப்பட்ட ஹேண்டில்பார் ஸ்விட்ச்கள் உள்ளன. 2023 கேடிஎம் RC 8C மாடல் மொத்தத்தில் 200 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட உள்ளன. இவை ஒவ்வொன்றின் ட்ரிபில் கிளாம்பில் பிரத்யேக சீரியல் நம்பர் இடம்பெற்று இருக்கும்.
- கேடிஎம் நிறுவனம் தனது 1290 சூப்பர் டியூக் மாடலை அப்டேட் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- இது கேடிஎம் நிறுவனத்தின் பிளாக்ஷிப் நேக்கட் ஸ்டிரீட் மோட்டார்சைக்கிள் மாடல் ஆகும்.
கேடிஎம் நிறுவனம் 2023 கேடிஎம் 1290 சூப்பர் டியூக் மோட்டார்சைக்கிளை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது கேடிஎம் நிறுவனத்தின் பிளாக்ஷிப் நேக்கட் ஸ்டிரீட் பைக் ஆகும். இந்த ஆண்டு மே மாதம் முதல் 1290 சூப்பர் டியூக் மாடல் டெஸ்டிங் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 2023 கேடிஎம் 1290 சூப்பர் டியூக் மாடலின் புது ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. முந்தைய ஸ்பை படங்களை போன்றே, தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களிலும் புது பைக்கின் டிசைன் தெளிவாக தெரிகிறது. வழக்கமான ஹெட்லேம்ப் மற்றும் கிளாஸ் ஸ்கிரீனுக்கு பதில் இந்த மோட்டார்சைக்கிளில் ஆங்குலர் காண்டர் செய்யப்பட்ட முன்புற கௌல், எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப் வழங்கப்பட்டு உள்ளது.

இதன் பியூவல் டேன்க் பகுதியில் கூர்மையான மற்றும் மஸ்குலர் எக்ஸ்டென்ஷன்கள் உள்ளன. இந்த பைக்கின் பின்புறமும் அதிகளவு மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த மாற்றங்கள் மட்டுமின்றி தொழில்நுட்ப ரீதியில் அதிக அம்சங்களை புதிய 1290 சூப்பர் டியூக் பெறும் என கூறப்படுகிறது. புதிய சூப்பர் டியூக் மாடலின் என்ஜின் கேசிங்கில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
டெஸ்டிங் செய்யப்படும் யூனிட்களில் எக்சாஸ்ட் ஹெடரில் சென்சார்கள் பொருத்தப்பட்டு இருந்தன. இதன் காரணமாக 1308சிசி, LC8, வி ட்வின் என்ஜினில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம். 2023 கேடிஎம் சூப்பர் டியூக் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
Photo Courtesy: carspymedia
- விசேஷ அம்சங்களுடன் டிராக் பயன்பாட்டிற்கான 2023 RC 8C லிமிடெட் எடிஷனை கேடிஎம் அறிமுகம் செய்து இருந்தது.
- புதிய 2023 மாடலில் அதிக செயல்திறன் கொண்ட என்ஜின், எடை குறைந்த பாகங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
கேடிஎம் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த 2023 RC 8C லிமிடெட் எடிஷன் மாடல் விற்பனை துவங்கிய 2 நிமிடம் 38 நொடிகளில் முழுமையாக விற்றுத் தீர்ந்தது. டிராக் பயன்பாட்டிற்காகவே உருவாக்கப்பட்டு இருக்கும் லிமிடெட் எடிஷன் மாடல் மொத்தத்திலேயே 200 யூனிட்கள் தான் உற்பத்தி செய்யப்பட்டன.
மிக குறுகிய காலக்கட்டத்திற்குள் விற்பனையாகி போன 200 யூனிட்களில், 30 பேர் தங்களின் 2023 கேடிஎம் RC 8C மாடலை ஸ்பெயின் நாட்டில் உள்ள வலென்சியாவில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் டெலிவரி எடுத்துக் கொள்வதாக தெரிவித்து உள்ளனர். முன்பதிவுகள் எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படும் பட்சத்தில் மறு விற்பனைக்காக ஆன்லைன் காத்திருப்போர் பட்டியலை கேடிஎம் உருவாக்கி இருக்கிறது.

2023 கேடிஎம் RC 8C மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட ஏராளமான மாற்றங்களை பெற்று இருக்கிறது. இதில் புதிய பெயிண்ட், ஏரோ பேக்கேஜ் ட்வீக், மேம்பட்ட எலெக்ட்ரிக் அம்சங்கள், எடையை குறைக்கும் புதிய பாகங்கள், உயர் ரக பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள என்ஜின் ட்வீக் செய்யப்பட்டு அதிக செயல்திறன் வழங்கும் வகையில் ரி-டியூன் செய்யப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக 2023 கேடிஎம் RC 8C மாடலில் உள்ள என்ஜின் 133 ஹெச்பி பவர், 98 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இது முந்தைய மாடலில் இருப்பதை விட 6.9 ஹெச்பி அதிகம் ஆகும். அதிக செயல்திறன் கிடைக்கச் செய்வதற்காக புதிதாக டைட்டானியம் வால்வுகள், கான்ராட்கள், இரு பிஸ்டன் ரிங்குகள், அதிக கம்ப்ரெஷன் ரேஷியோ, பெரிய திராடிள் பாடி, ஃபியூவல் பம்ப் / பிரெஷர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
எலெக்ட்ரிக் அம்சங்களை பொருத்தவரை 2023 கேடிஎம் RC 8C மாடலில் டிராக்ஷன் கண்ட்ரோல், மேப்பிங், என்ஜின் பிரேக்கிங் போன்ற வசதிகள் உள்ளன. இத்துடன் ஸ்டீரிங் ஹெட், திராடிள் ரெஸ்பான்ஸ் -ஐ அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காக்பிட்-இல் மேம்பட்ட டேஷ்போர்டு, ஜிபிஎஸ், கேடிஎம் RC16 மாடலில் உள்ளதை போன்ற டிரைவ்டு ஹேண்டில்பார் ஸ்விட்ச்கள் வழங்கப்பட்டுள்ளன.
- கேடிஎம் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளின் புது மாடல் ஏராளமான மாற்றங்களை பெற்று இருக்கிறது.
- எல்இடி ஹெட்லைட்களின் மேல்புறமாக 2023 கேடிஎம் 890 அட்வென்ச்சர் மாடலில் புதிதாக விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.
கேடிஎம் நிறுவனம் முற்றிலும் புதிய 890 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2023 மாடலின் அம்சங்கள் மற்றும் மெக்கானிக்கல் பாகங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்கின் பெரும்பாலன டிசைன் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி அட்வென்ச்சர் ஸ்டைலிங் மற்றும் உயரமான ஸ்டான்ஸ் 2023 மாடலிலும் பின்பற்றப்பட்டு உள்ளது.
புதிய மாடலின் ஹெட்லைட் மற்றும் ஸ்கிரீன் டிசைன் ஆல்டர் செய்யப்பட்டுள்ளது. முன்புறம் மற்றும் பக்கவாட்டு ஃபேரிங் அதிகளவு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த மாடலில் செங்குத்தாக பொருத்தப்பட்ட எல்இடி ஹெட்லைட்கள் உள்ளன. இத்துடன் புதிய விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் என்ஜின் மற்றும் ஃபியூவல் டேன்க் உள்ளிட்டவைகளை பாதுகாக்க புதிதாக அலாய் கார்டு பொருத்தப்பட்டுள்ளது.

2023 கேடிஎம் 890 அட்வென்ச்சர் மாடலில் 889சிசி, LC8c பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்பி பவர், 100 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஸ்டீல் டியூப் ஆல்டர் செய்யப்படாமல், ரிவேம்ப்டு 43mm WP அபெக்ஸ் USD ஃபோர்க்குகளை கொண்டிருக்கிறது. பின்புறம் WP அபெக்ஸ் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதன் பிரேக்கிங் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் முன்புறம் 21 இன்ச், பின்புறத்தில் 18 இன்ச் ஸ்போக்டு வீல்கள், பைரெளி ரேலி STR டயர்களை கொண்டிருக்கின்றன. அம்சங்களை பொருத்தவரை 2023 கேடிஎம் 890 அட்வென்ச்சர் மாடலில் மேம்பட்ட 5-இன்ச் TFT ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, குயிக்ஷிஃப்டர், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் செட்டிங்ஸ் உள்ளது.
கேடிஎம் நிறுவனம் 2023 மாடலின் விலை விவரங்களை இதுவரை அறிவிக்கவில்லை. எனினும், முந்தைய மாடலின் விலை GBP 10 ஆயிரத்து 449, இந்திய மதிப்பில் ரூ. 10 லட்சத்து 19 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில் புது மாடலின் விலை இதைவிட சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
- கேடிஎம் நிறுவனத்தின் புதிய 890 அட்வென்ச்சர் ஆர் மோட்டார்சைக்கிள் WP முன்புறம் மற்றும் பின்புற சஸ்பென்ஷன் கொண்டுள்ளது.
- புதிய 890 அட்வென்ச்சர் ஆர் மோட்டார்சைக்கிள் இந்திய பைக் வாரம் 2022 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
கேடிஎம் இந்தியா நிறுவனம் தனது 890 அட்வென்ச்சர் ஆர் மோட்டார்சைக்கிளை இந்தியா பைக் வாரம் 2022 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. கேடிஎம் நிறுவன மாடல்களுடன் இந்த மோட்டார்சைக்கிளும் காட்சிக்கு வைக்கப்பட்டது. முழுமையான ஆஃப் ரோடிங் தோற்றம் கொண்டிருக்கிறது.
புதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் மாடலில் செங்குத்தாக பொருத்தப்பட்ட ஸ்ப்லிட் எல்இடி ஹெட்லைட், ஸ்மோக்டு விண்ட்ஸ்கிரீன் உள்ளது. இத்துடன் ஹேண்டில்பார் கார்டுகள், பெல்லி பேன் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. 890 அட்வென்ச்சர் ஆர் மாடலில் 889சிசி, LC8c பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்பி பவர், 100 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்டீல் டியூப் ஃபிரேம் WP முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் WP மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் TFT ஸ்கிரீன், டிராக்ஷன் கண்ட்ரோல், ABS, ரைடு மோட்கள் மற்றும் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய 2023 மாடலில் மேம்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மற்றும் இதுவரை இல்லாத அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. தற்போது இந்த மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் இந்திய அறிமுகம் பற்றி கேடிஎம் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
- கேடிஎம் நிறுவனத்தின் புதிய 1290 சூப்பர் அட்வென்ச்சர் எஸ் மோட்டார்சைக்கிள் இரண்டு விதமான புது நிறங்களில் கிடைக்கிறது.
- மற்ற அம்சங்களுடன், புதிய 2023 மாடலில் கேடிஎம் கனெக்ட் ஆப் வசதி கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது.
கேடிஎம் நிறுவனம் 2023 சூப்பர் அட்வென்ச்சர் எஸ் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2023 கேடிஎம் 1290 சூப்பர் அட்வென்ச்சர் எஸ் மாடல்- ஆரஞ்சு மற்றும் பிளாக், கிரே என இரண்டு விதமான புதிய நிறங்களில் கிடைக்கிறது.
முந்தைய மாடலை போன்றே புது மாடலிலும் ஸ்ப்லிட்-ஸ்டைல் ஹெட்லைட், செமி ஃபேரிங் டிசைன், 23 லிட்டர், 3-பார்ட் ஃபியூவல் டேன்க், ஸ்ப்லிட் ஸ்டைல் சீட்கள், டூயல் பாரெல் எக்சாஸ்ட், அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் ஃபுல் எல்இடி லைட்டிங், 7 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே, புதிய நேவிகேஷன் மென்பொருள், செலக்டபில் ரைடு மோட்கள், WP செமி ஆக்டிவ் சஸ்பென்ஷன், ஏபிஎஸ் மற்றும் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் உள்ளன.

இத்துடன் கேடிஎம் கனெக்ட் ஆப் வசதி உள்ளது. இது டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன்+ கைடன்ஸ், வேபாயிண்ட் மார்க்கர், மியூசிக் மற்றும் போன் அழைப்புகளை இயக்கும் வசதிகளை வழங்குகிறது. புதிய 2023 மாடலில் வி-ட்வின் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 158 ஹெச்பி பவர், 138 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
பை-டைரெக்ஷனல் குயிக்ஷிப்டர், WP சஸ்பென்ஷன் ப்ரோ உள்ளிட்டவை ஆப்ஷனல் அக்சஸரீயாக வழங்கப்படுகிறது. இத்துடன் ஆட்-ஆன் மற்றும் அக்சஸரீக்கள் பட்டியலில் கேடிஎம் பவர்பார்ட்ஸ் கலெக்ஷன் வழங்கப்படுகிறது. இதில் கூடுதல் பாதுகாப்பு, டீடெயிலிங், அதிக செயல்திறன், லக்கேஜ், ரேக் மற்றும் பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
2023 கேடிஎம் 1290 சூப்பர் அட்வென்ச்சர் எஸ் மோட்டார்சைக்கிள் அடுத்த மாதம் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும். இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.






