என் மலர்
நீங்கள் தேடியது "கே.டி.எம். 125 டியூக்"
- அங்கீகரிக்கப்பட்ட KTM சேவை மையங்களில் மட்டுமே மாற்றம்.
- தங்கள் பைக் திரும்ப பெறுதல் பட்டியலில் உள்ளதா என்பதை கேடிஎம் அதிகாரப்பூர்வ வலைதளப்பக்கத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.
பெட்ரோல் டேங் மூடியின் சீல்தரம் குறைபாடு காரணமாக பஜாஜ் நிறுவனத்திற்கு சொந்தமான KTM அதன் 125, 250, 390 மற்றும் 990 டியூக் மாடல் பைக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. சீல் குறைபாட்டால் மூடியில் விரிசல் விழுந்து, எரிபொருள் கசிவுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்த அறிவிப்பை பைக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த மாடல் பைக்குகளை அங்கீகரிக்கப்பட்ட KTM சேவை மையத்திற்கு எடுத்துச் சென்றால், சேதத்தை தவிர்க்கும் விதமாக மூடியின் சீல் பகுதியை இலவசமாக சரிசெய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களால் மட்டுமே செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. தங்கள் பைக்குகளில் இந்த சீல் குறைபாடு இருக்கிறதா என்பதை வலைத்தளத்தில் சென்று பார்த்து அறிந்துகொள்ளலாம் என கேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது கேடிஎம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று, சேவை பிரிவில் தங்கள் VIN எண்ணை உள்ளிடுவதன்மூலம், உரிமையாளர்கள் தங்கள் பைக் திரும்ப பெறுதல் பட்டியலில் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளலாம்.
இந்தியாவில் 990 டியூக் விற்பனை செய்யப்படவில்லை. ஆகையால் 125, 250, 390 டியூக் மாடல் உரிமையாளர்கள் கூடுதல் விளக்கங்களுக்கு தங்கள் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய 125 டியூக் மாடலுக்கான முன்பதிவு கட்டணமாக ரூ.1,000 வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மோட்டார்சைக்கிள் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விலையை பொருத்த வரை டியூக் 125 விலை அதிகபட்சம் ரூ.1.60 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
கே.டி.எம். 125 டியூக் மாடல் இந்தியாவில் நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 125 டியூக் மாடல் இந்தியாவில் உள்ள பஜாஜ் நிறுவனத்தின் சக்கன் உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் கே.டி.எம். 125 டியூக் மாடலின் விலை போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கே.டி.எம். 125 டியூக் ஒட்டுமொத்த வடிவமைப்பு 1290 சூப்பர்டியூக் மாடலை தழுவி உருவாக்கப்படலாம் என்றும் இந்த மோட்டார்சைக்கிள் பார்க்க புதிய 390 டியூக் போன்றே காட்சியளிக்கிறது. சர்வதேச சந்தையில் கே.டி.எம். 125 டியூக் மாடலில் எல்.இ.டி. ஹெட்லைட், டி.எஃப்.டி. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.
கே.டி.எம். 125 டியூக் மாடலில் 124.7 சிசி லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலின்டர், ஃபியூயல் இன்ஜெக்டெட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 14.7 பி.ஹெச்.பி. பவர், 11.80 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. கே.டி.எம். 125 டியூக் இந்தியாவில் கிடைக்கும் சக்திவாய்ந்த 125 சிசி மோட்டார்சைக்கிளாக இருக்கும்.
ஏற்றுமதி செய்யப்படும் கே.டி.எம். 125 டியூக் மாடலின் முன்பக்கம் 43 எம்.எம். WP அப்சைடு டவுன் ஃபோர்க், பின்புறம் WP மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 300 எம்.எம். டிஸ்க், பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த மாடலில் போஷ் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது. #KTM #Duke








