என் மலர்
பைக்

உலகளவில் 125, 250 and 390 டியூக் பைக்குகளை திரும்பப் பெறும் கேடிஎம்!
- அங்கீகரிக்கப்பட்ட KTM சேவை மையங்களில் மட்டுமே மாற்றம்.
- தங்கள் பைக் திரும்ப பெறுதல் பட்டியலில் உள்ளதா என்பதை கேடிஎம் அதிகாரப்பூர்வ வலைதளப்பக்கத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.
பெட்ரோல் டேங் மூடியின் சீல்தரம் குறைபாடு காரணமாக பஜாஜ் நிறுவனத்திற்கு சொந்தமான KTM அதன் 125, 250, 390 மற்றும் 990 டியூக் மாடல் பைக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. சீல் குறைபாட்டால் மூடியில் விரிசல் விழுந்து, எரிபொருள் கசிவுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்த அறிவிப்பை பைக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த மாடல் பைக்குகளை அங்கீகரிக்கப்பட்ட KTM சேவை மையத்திற்கு எடுத்துச் சென்றால், சேதத்தை தவிர்க்கும் விதமாக மூடியின் சீல் பகுதியை இலவசமாக சரிசெய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களால் மட்டுமே செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. தங்கள் பைக்குகளில் இந்த சீல் குறைபாடு இருக்கிறதா என்பதை வலைத்தளத்தில் சென்று பார்த்து அறிந்துகொள்ளலாம் என கேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது கேடிஎம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று, சேவை பிரிவில் தங்கள் VIN எண்ணை உள்ளிடுவதன்மூலம், உரிமையாளர்கள் தங்கள் பைக் திரும்ப பெறுதல் பட்டியலில் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளலாம்.
இந்தியாவில் 990 டியூக் விற்பனை செய்யப்படவில்லை. ஆகையால் 125, 250, 390 டியூக் மாடல் உரிமையாளர்கள் கூடுதல் விளக்கங்களுக்கு தங்கள் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.






