search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Duke 125"

    கே.டி.எம். நிறுவனம் இந்தியாவில் டியூக் 125 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #Duke125



    கே.டி.எம். டியூக் 125 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியானது. இந்தியாவில் கே.டி.எம். நிறுவனத்தின் விலை குறைந்த மோட்டார்சைக்கிளாக புதிய டியூக் 125 இருக்கிறது.

    புதிய டியூக் 125 மாடலுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் ஒரு மாதத்திற்கு முன் துவங்கியது. ரூ.1,000 முன்பதிவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்ட டியூக் 125 இந்திய விலை ரூ.1.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டியூக் 125 மாடலின் சர்வதேச எடிஷன் 390 டியூக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இருமாடல்களை வித்தியாசப்படுத்த புதிய டியூக் 125 மாடலின் கிராஃபிக்ஸ் மாற்றப்பட்டு இருக்கிறது. கே.டி.எம். டியூக் 125 மாடலில் 124.7சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 14.3 பி.ஹெச்.பி. பவர், 12 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.



    125சிசி பிரிவில் முதல் முறையாக டிரெலிஸ் ஃபிரேம் மற்றும் அலுமினியம் ஸ்விங் ஆர்ம் உள்ளிட்டவை புதிய கே.டி.எம். டியூக் 125 மாடலில் வழங்கப்பட்டுள்ளது. கே.டி.எம். டியூக் 125 மாடலில் முன்பக்கம் 43எம்.எம். அப்சைடு-டவுன் ஃபோர்க், பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

    பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்புறம் 300 எம்.எம். டிஸ்க், பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் மற்றும் சிங்கிள்-சேன் ஏ.பி.எஸ். யூனிட் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஏ.பி.எஸ். வசதி கொண்ட முதல் 125சிசி மோட்டார்சைக்கிளாக இது இருக்கிறது. சமீபத்தில் கே.டி.எம். நிறுவனம் தனது 200சிசி டியூக் மாடலில் ஏ.பி.எஸ். வசதியை வழங்கி இருக்கிறது.
    ×