search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.டி.எம். 125 டியூக் இந்திய வெளியீட்டு விவரம்
    X

    கே.டி.எம். 125 டியூக் இந்திய வெளியீட்டு விவரம்

    ஆஸ்திரிய மோட்டார்சைக்கிள் நிறுவனமான கே.டி.எம். இந்தியாவில் 125 டியூக் மோட்டார்சைக்கிளை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #KTM



    கே.டி.எம். நிறுவனம் இந்தியாவில் புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த வகையில் இணையத்தில் வெளியாகி இருக்கும் விவரங்களின் படி கே.டி.எம். 125 டியூக் நேக்கட் மோட்டார்சைக்கிளை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கே.டி.எம். 125 டியூக் மாடல் இந்தியாவில் நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 125 டியூக் மாடல் இந்தியாவில் உள்ள பஜாஜ் நிறுவனத்தின் சக்கன் உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் கே.டி.எம். 125 டியூக் மாடலின் விலை போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய கே.டி.எம். 125 டியூக் ஒட்டுமொத்த வடிவமைப்பு 1290 சூப்பர்டியூக் மாடலை தழவி உருவாக்கப்படலாம் என்றும் இந்த மோட்டார்சைக்கிள் பார்க்க புதிய 390 டியூக் போன்றே காட்சியளிக்கிறது. சர்வதேச சந்தையில் கே.டி.எம். 125 டியூக் மாடலில் எல்.இ.டி. ஹெட்லைட், டி.எஃப்.டி. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.



    கே.டி.எம். 125 டியூக் மாடலில் 124.7 சிசி லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலின்டர், ஃபியூயல் இன்ஜெக்டெட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 14.7 பி.ஹெச்.பி. பவர், 11.80 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. கே.டி.எம். 125 டியூக் இந்தியாவில் கிடைக்கும் சக்திவாய்ந்த 125 சிசி மோட்டார்சைக்கிளாக இருக்கும்.

    ஏற்றுமதி செய்யப்படும் கே.டி.எம். 125 டியூக் மாடலின் முன்பக்கம் 43 எம்.எம். WP அப்சைடு டவுன் ஃபோர்க், பின்புறம் WP  மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 300 எம்.எம். டிஸ்க், பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த மாடலில் போஷ் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது.
    Next Story
    ×