search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்கூட்டர்"

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனை 85 சதவீதம் அதிகரிப்பு. சமீபத்தில் டி.வி.எஸ். நிறுவனம் புதிய ஐகியூப் இ ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் மே மாத விற்பனையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இந்திய சந்தையில் கடந்த மாதத்தில் மட்டும் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 2 லட்சத்து 87 ஆயிரம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்து உள்ளது. 

    கடந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 1 லட்சத்து 54 ஆயிரம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் விற்பனையில் 85 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. 

    டி.வி.எஸ். நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 1 லட்சத்து 91 ஆயிரம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு மே மாதத்தில் டி.வி.எஸ். நிறுவனம் 52 ஆயிரத்து 084 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

     டி.வி.எஸ். ஐகியூப்

    உள்நாட்டு விற்பனையில் அமோக வளர்ச்சி ஏற்பட்ட நிலையில் ஏற்றுமதியில் சரிவை சந்தித்து இருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் டி.வி.எஸ். நிறுவனம் 1 லட்சத்து 02 ஆயிரம் யூனிட்களை ஏற்றுமதி செய்திருந்த நிலையில், கடந்த மாதம் 95 ஆயிரத்து 576 யூனிட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டன. 

    டி.வி.எஸ். மோட்டார்சைக்கிள் விற்பனை கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 18.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. டி.வி.எஸ். ஸ்கூட்டர்களை பொருத்தவரை கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆயிரத்து 627 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. 

    கீவே நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சிக்ஸ்டீஸ் 300i ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. இதில் எல்.இ.டி. லைட்டிங் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.


    இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் புதுவரவு நிறுவனம் கீவே புதிதாக சிக்ஸ்டீஸ் 300i பெயரில் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கீவே சிக்ஸ்டீஸ் 300i மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய சந்தையில் கிடைக்கும் சக்திவாய்ந்த ஸ்கூட்டர் ஆகும். 

    புதிய கீவே சிக்ஸ்டீஸ் 300i மாடல் அதிநவீன-ரெட்ரோ பாடி வொர்க் கொண்டிருக்கிறது. இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பாகங்கள் வளைந்த நிலையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இத்துடன் எல்.இ.டி. லைட்டிங் மற்றும் எல்.சி.டி. போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் 278.2சிசி சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

     கீவே சிக்ஸ்டீஸ் 300i

    இந்த என்ஜின் 18.7 பி.ஹெச்.பி. பவர், 22 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதே என்ஜின் விஸ்டி 300 மேக்சி ஸ்கூட்டரிலும் வழங்கப்பட்டு உள்ளது. சஸ்பென்ஷனிற்கு கீவே சிக்ஸ்டீஸ் 300i மாடலில் டெலிஸ்கோபிக் போர்க், டூயல் ரியர் ஸ்ப்ரிங் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 230mm ஒற்றை டிஸ்க் பிரேக், பின்புறம் 220mm டிஸ்க் பிரேக் உள்ளது.

    புதிய கீவே சிக்ஸ்டீஸ் 300i ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு பெனலி விற்பனை மையங்களில் நடைபெறுகிறது. வினியோகம் அடுத்த மாதம் துவங்குகிறது.  
    ×