என் மலர்

  ஆட்டோமொபைல்

  இந்தியாவில் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 அறிமுகம்
  X

  இந்தியாவில் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

   

  ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் டிரம் பிரேக் மாடல் விலை ரூ.58,500 (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டிஸ்க் பிரேக் வேரியண்ட் ரூ.62,700 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

  ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடலில் 125சிசி ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.7 பி.ஹெச்.பி. பவர் @6750 ஆர்.பி.எம்., 10.2 என்.எம். டார்க் @5000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ஹீரோவின் i3S ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் வசதி கொண்டிருக்கிறது.  சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் வழங்கப்பட்டுள்ளது. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடலில் முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இவை ஹீரோவின் இன்டகிரேட்டெட் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வழங்கப்படுகிறது.

  ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 முந்தைய மாடலை விட அதிகளவு ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கிறது. இதன் முன்புறம் பெரிய ஹெட்லேம்ப் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்கூட்டரின் முன்புற ஃபோர்க் ஸ்கூட்டரை விட காண்டிராஸ்ட் நிறத்தில் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.

  ஸ்கூட்டரின் பக்கவாட்டில் i3s ஸ்டிக்கரிங்கும், பின்புறம் மேஸ்ட்ரோ எட்ஜ் பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் ஸ்ப்லிட் டெயில் லைட், க்ளியர் லென்ஸ் இன்டிகேஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×