என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீவே"

    • இந்த பைக் வைட், பிளாக் மற்றும் ரெட் உள்ளிட்ட மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
    • புதிய கீவே RR 300 பைக்கில் 292 சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்விட்-கூல்டு எஞ்சின் உள்ளது.

    மோட்டோ வால்ட் நிறுவனம் கீவே RR 300 பைக்கை இந்திய சந்தையில் ரூ.1.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மிடில்-வெயிட் சூப்பர்-ஸ்போர்ட் பைக், முன்பு நாட்டில் விற்பனையில் இருந்த K300 R பைக்கின் மறுபெயரிடப்பட்ட மாடலாகும். இந்தியாவில் இந்த பைக் டிவிஎஸ் அபாச்சி RR 310, பிஎம்டபிள்யூ G 310 RR மற்றும் கேடிஎம் RC 390 போன்ற மாடல்களுடன் போட்டியிடுகிறது.

    தோற்றத்தில் புதிய கீவே RR 300 ஒரு ஆக்ரோஷமான, ஸ்போர்ட்டி கவர்ச்சியுடன் வருகிறது. இது பூமராங் வடிவ LED DRLகளைப் பெறுகிறது. இரட்டை-ஹெட்லேம்ப் அமைப்புடன் கூடுதலாக உள்ளது. இவை அனைத்தும் மெல்லிய, ரேக் செய்யப்பட்ட டெயில் பகுதியுடன் கூடிய ஃபேரிங்கிற்கான அடுக்கு வடிவமைப்பால் ஒன்றிணைக்கப்படுகின்றன.

    இந்த பைக் வைட், பிளாக் மற்றும் ரெட் உள்ளிட்ட மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. கீவே RR 300 பைக் முழுமையாக ஃபேரிங் செய்யப்பட்ட வெளிப்புற ஷெல்லின் கீழ் மறைக்கப்பட்ட ஒரு டிரெல்லிஸ் ஃபிரேமை அடிப்படையாகக் கொண்டது. இது முன்புறத்தில் USD ஃபோர்க்குகளையும் பின்புறத்தில் ஒரு மோனோஷாக் அசெம்பிளியையும் கொண்டுள்ளது.

    இத்துடன் டூயல் சேனல் ABS உடன் முன் மற்றும் பின்புறம் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகிறது. இந்த பைக்கில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 12 லிட்டர் எரிபொருள் டேங்க் உள்ளது. இது முன்புறத்தில் 110/70 R17 டயரையும் பின்புறத்தில் 140/60 R17 டயரையும் கொண்டுள்ளது.

    புதிய கீவே RR 300 பைக்கில் 292 சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்விட்-கூல்டு எஞ்சின் உள்ளது. இது 8,750 rpm இல் 27 hp பவர், 25 Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த யூனிட் ஸ்லிப்பர் கிளட்ச் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் மணிக்கு 139 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    கீவே நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சிக்ஸ்டீஸ் 300i ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. இதில் எல்.இ.டி. லைட்டிங் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.


    இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் புதுவரவு நிறுவனம் கீவே புதிதாக சிக்ஸ்டீஸ் 300i பெயரில் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கீவே சிக்ஸ்டீஸ் 300i மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய சந்தையில் கிடைக்கும் சக்திவாய்ந்த ஸ்கூட்டர் ஆகும். 

    புதிய கீவே சிக்ஸ்டீஸ் 300i மாடல் அதிநவீன-ரெட்ரோ பாடி வொர்க் கொண்டிருக்கிறது. இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பாகங்கள் வளைந்த நிலையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இத்துடன் எல்.இ.டி. லைட்டிங் மற்றும் எல்.சி.டி. போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் 278.2சிசி சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

     கீவே சிக்ஸ்டீஸ் 300i

    இந்த என்ஜின் 18.7 பி.ஹெச்.பி. பவர், 22 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதே என்ஜின் விஸ்டி 300 மேக்சி ஸ்கூட்டரிலும் வழங்கப்பட்டு உள்ளது. சஸ்பென்ஷனிற்கு கீவே சிக்ஸ்டீஸ் 300i மாடலில் டெலிஸ்கோபிக் போர்க், டூயல் ரியர் ஸ்ப்ரிங் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 230mm ஒற்றை டிஸ்க் பிரேக், பின்புறம் 220mm டிஸ்க் பிரேக் உள்ளது.

    புதிய கீவே சிக்ஸ்டீஸ் 300i ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு பெனலி விற்பனை மையங்களில் நடைபெறுகிறது. வினியோகம் அடுத்த மாதம் துவங்குகிறது.  
    ×