என் மலர்

  ஆட்டோமொபைல்

  இந்தியாவில் அப்ரிலியா ஸ்டாம் 125 அறிமுகம்
  X

  இந்தியாவில் அப்ரிலியா ஸ்டாம் 125 அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அப்ரிலியா ஸ்டாம் 125 ஸ்கூட்டரை பியாஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.  அப்ரிலியா நிறுவனம் இந்தியாவில் ஸ்டாம் 125 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் முன்னதாக 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அப்ரிலியா 125 ஸ்கூட்டர் விலை ரூ.65,000 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  இதன் உற்பத்தி மாடலுக்கும் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட மாடலுக்கும் தோற்றத்தில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. புதிய அப்ரிலியா ஸ்டாம் 125 ஸ்கூட்டரில் 10-இன்ச் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரேக்கிங்கிற்கு இருபுறமும் டிரம் பிரேக் மற்றும் சி.பி.எஸ். வசதி வழங்கப்பட்டுள்ளது.  அப்ரிலியா ஸ்டாம் 125 மாடலில் முன்புறம் டிஸ்க் பிரேக் கொண்ட வேரியண்ட் அறிமுகமாவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. புதிய ஸ்டாம் 125 மாடலில் கிராப் ஹேண்டிள் மற்றும் வெள்ளை நிற அப்ரிலியா பேட்ஜ் கொண்டிருக்கிறது. புதிய ஸ்கூட்டரில் 124சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது.

  இதே என்ஜின் அப்ரிலியா எஸ்.ஆர். 125 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 9.4 பி.ஹெச்.பி. பவர் @7250 ஆர்.பி.எம். மற்றும் 9.8 என்.எம். டார்க் @6250 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. 

  இந்தியாவில் புதிய அப்ரிலியா ஸ்டாம் 125 மாடல் டி.வி.எஸ். என்டார்க் 125 டிரம் பிரேக் வேரியண்ட் (விலை ரூ.58,522), ஹோன்டா கிரேசியா டிரம் பிரேக் வேரியண்ட் (விலை ரூ.60,723) உள்ளிட்ட ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமைகிறது. 
  Next Story
  ×