என் மலர்

  நீங்கள் தேடியது "Maestro Edge 125"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #HeroMotoCorp  ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரை மே 13 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. புதிய ஸ்கூட்டர் முன்னதாக 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் வடிவமைப்பு தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடலை சார்ந்து உருவாக்கிறது.

  புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரில் 124.6சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு பி.எஸ். VI ஃபியூயல்-இன்ஜெக்ட்டெ் வேரியண்ட் என்ஜின் கொண்டிருக்கும். இந்த என்ஜின் எனர்ஜி பூஸ்ட் என அழைக்கப்படுகிறது. இது 8.70 பி.ஹெச்.பி. பவர், 10.2 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.  புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடலில் அலாய் வீல்கள், டியூப்லெஸ் டையர்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்பறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாக கிடைக்கும் என்றும் இதில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டமும் வழங்கப்படலாம் என தெரிகிறது.

  ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விலை ரூ.60,000 (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 13 ஆம் தேதி அறிமுகமானதும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் ஹோன்டா ஆக்டிவா 125, டி.வி.எஸ். என்டார்க் மற்றும் சுசுகி அக்சஸ் போன்ற ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

  சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்: ஹீரோ எக்ஸ்பல்ஸ், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி மற்றும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் போன்ற மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
  ×