search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TVS Motor Company"

    • டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் 125 சிசி மோட்டார்சைக்கிள் புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
    • புது வேரியண்ட் முந்தைய வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்த அம்சங்களுடன் கூடுதலாக ஸ்மார்ட் அம்சங்களை கொண்டிருக்கிறது.

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவவனம் இந்திய சந்தையில் புதிய ரைடர் 125 SmartXonnect மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வெர்ஷன் அறிமுகமாகி இருப்பதை தொடர்ந்து ரைடர் 125 மோட்டார்சைக்கிள்: டிரம், டிஸ்க் மற்றும் SmartXonnect என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    டிசைன் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை புதிய ரைடர் 125 SmartXonnect ஒரே மாதிரியே உள்ளது. புது SmartXonnect வேரியண்டிலும் எல்இடி ஹெட்லைட், இளமை மிக்க ஸ்டைலிங், காம்பேக்ட் அளவீடுகளை கொண்டிருக்கிறது. எனினும், SmartXonnect வேரியண்டில் புதிதாக டிஎப்டி கன்சோல் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அழைப்புகள், எஸ்எம்எஸ், நோட்டிபிகேஷன் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியை பெறலாம்.

    இத்துடன் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பும் மையத்திற்கு டிஎப்டி ஸ்கிரீன் மூலம் வழி பார்த்து எளிதில் சென்றடைய முடியும். டிவிஎஸ் ரைடர் SmartXonnect வேரியண்டிலும் 124.8சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜினே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 11.2 ஹெச்பி பவர், 11.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், முன்புறம் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய டிவிஎஸ் ரைடர் SmartXonnect விலை ரூ. 99 ஆயிரத்து 990, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது டிவிஎஸ் ரைடர் டிரம் வேரியண்டை விட ரூ. 14 ஆயிரமும், டிஸ்க் பிரேக் வேரியண்டை விட ரூ. 6 ஆயிரம் அதிகமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் டிவிஎஸ் ரைடர் 125சிசி மோட்டார்சைக்கிள் ஹோண்டா SP125, ஹீரோ கிளாமர் 125 மற்றும் பஜாஜ் பல்சர் 125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனை 85 சதவீதம் அதிகரிப்பு. சமீபத்தில் டி.வி.எஸ். நிறுவனம் புதிய ஐகியூப் இ ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் மே மாத விற்பனையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இந்திய சந்தையில் கடந்த மாதத்தில் மட்டும் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 2 லட்சத்து 87 ஆயிரம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்து உள்ளது. 

    கடந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 1 லட்சத்து 54 ஆயிரம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் விற்பனையில் 85 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. 

    டி.வி.எஸ். நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 1 லட்சத்து 91 ஆயிரம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு மே மாதத்தில் டி.வி.எஸ். நிறுவனம் 52 ஆயிரத்து 084 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

     டி.வி.எஸ். ஐகியூப்

    உள்நாட்டு விற்பனையில் அமோக வளர்ச்சி ஏற்பட்ட நிலையில் ஏற்றுமதியில் சரிவை சந்தித்து இருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் டி.வி.எஸ். நிறுவனம் 1 லட்சத்து 02 ஆயிரம் யூனிட்களை ஏற்றுமதி செய்திருந்த நிலையில், கடந்த மாதம் 95 ஆயிரத்து 576 யூனிட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டன. 

    டி.வி.எஸ். மோட்டார்சைக்கிள் விற்பனை கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 18.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. டி.வி.எஸ். ஸ்கூட்டர்களை பொருத்தவரை கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆயிரத்து 627 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. 

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. #TVSMotorCompany



    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய கார்கில் எடிஷன் மோட்டார்சைக்கிள் விலை ரூ.54,399 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    காஸ்மெடிக் மாற்றங்களை தவிர புதிய கார்கில் எடிஷன் மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. காஸ்மெடிக் மாற்றங்களை பொருத்தவரை புதிய வெள்ளை மற்றும் பச்சை நிற பெயிண்ட் செய்யப்பட்டு கேமோ கிராஃபிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது.

    கார்கில் எடிஷன் மோட்டார்சைக்கிள் நேவல் வைட், சோல்ஜர் கிரீன் மற்றும் ஃப்ளையிங் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இவை ஒவ்வொன்றும் பாதுகாப்பு படையினரின் நினைவுகளை பரைசாற்றும் விதமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதிய நிறம் தவிர மோட்டார்சைக்கிளில் கார்கில் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. 



    இந்திய பாதுகாப்பு படையினரின் பங்களிப்பை கொண்டாடும் விதமாக டி.வி.எஸ். நிறுவனம் கடந்த ஆண்டு கார்கில் காலிங்: ரைடு ஃபார் தி ரியல் ஸ்டார்ஸ் எனும் திட்டத்தை துவங்கியது. இந்த நிகழ்வு ஜூலை 2018 இல் கார்கில் விஜய் திவாஸ் தினத்தன்று நடைபெற்றது. இதில் டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் தீம் செய்யப்பட்ட ஸ்டார் சிட்டி பிளஸ் மோட்டார்சைக்கிள்கள் ஐந்து முக்கிய சந்தைகளை கடந்தது.

    டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் 109.7சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.4 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 8.7 என்.எம். டார்க் செயல்திறன், 4-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. 
    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் அபாச்சி RTR 160 4V FI ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமானது. #ApacheRTR1604VFIABS #Motorcycle



    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் புதிய அபாச்சி RTR 160 4V FI ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய அபாச்சி RTR 160 4V FI ஏ.பி.எஸ். விலை ரூ.98,644 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது வழக்கமான RTR 160 4V FI மாடலை விட ரூ.6,999 அதிகம் ஆகும்.

    பெருக்கு ஏற்றார்போல் புதிய மோட்டார்சைக்கிளில் சிங்கிள்-சேனல் ஏ.பி.எஸ். யூனிட் வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், அபாச்சி RTR 160 4V கார்புரேட்டெட் வேரியண்ட் ஏ.பி.எஸ். மாடல் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் விலை ரூ.92,000 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

    ஏ.பி.எஸ். வசதி கொண்ட அபாச்சி 160 4V மாடலின் முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் 150-160 சிசி பிரிவில் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாக அபாச்சி RTR 160 சீரிஸ் இருக்கிறது. இந்நிலையில், புதிய வடிவமைப்பில் RTR 160 4V விற்பனையும் எதிர்பார்த்த வரவேற்பை பெற்றிருக்கிறது என்றே கூறலாம்.



    டி.வி.எஸ். அபாச்சி RTR 160 4V மாடலில் 159.7 சிசி ஆயில்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த என்ஜின் 16.56 பி.ஹெச்.பி. மற்றும் 14.8 என்.எம். டார்க் செயல்திறன், 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் உடன் வருகிறது.

    இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் இருசக்கர வாகனங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய விதிமுறை அமலாக இருப்பதால், டி.வி.எஸ். தனது புதிய மோட்டார்சைக்கிளில் ஏ.பி.எஸ். வசதியை வழங்கியிருக்கிறது.
    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் ஸ்போர்ட் ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #motorcycle



    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் ஸ்போர்ட் ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய டி.வி.எஸ். ஸ்போர்ட் ஸ்பெஷல் எடிஷன் விலை ரூ.40,088 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்குகிறது.

    புதிய டி.வி.எஸ். ஸ்போர்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடல் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் மற்றும் கிக் ஸ்டார்ட் அலாய் வீல் வேரியன்ட்களில் கிடைக்கிறது. டி.வி.எஸ். ஸ்போர்ட் ஸ்பெஷல் எடிஷன் பிளாக், ரெட்-சில்வர் டீக்கல்கள் மற்றும் பிளாக், புளு-சில்வர் டீக்கல்கள் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. 

    இதுதவிர புதிய மோட்டார்சைக்கிளின் வடிவமைப்பில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. டி.வி.எஸ். ஸ்போர்ட் ஸ்பெஷல் எடிஷனில் இருக்கை அதிக சவுகரியமாக இருக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷனில் நீலமான இருக்கை மற்றும் அகலமான கைப்பிடி வழங்கப்பட்டுள்ளது.



    டி.வி.எஸ். ஸ்போர்ட் ஸ்பெஷல் எடிஷன் புதிய டீக்கல்கள் மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகளுடன் பார்க்க அழகாக காட்சியளிக்கிறது. ஸ்பெஷல் எடிஷன் மாடலில் பிரீமியம் 3டி லோகோ, சின்க்ரோனைஸ்டு பிரேக்கிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகை பிரேக்கிங் தொழில்நுட்பம் பெறும் முதல் 100சிசி மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை இந்த மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது.

    டி.வி.எஸ். ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 99.7சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 7.3 பி.ஹெச்.பி. பவர், 7.5 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் 5-ஸ்டெப் அட்ஜஸ்டபில் ஷார்க் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளது.
    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் ஜூப்பிட்டர் கிரான்ட் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. #scooter



    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் ஜூப்பிட்டர் கிரான்ட் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜூப்பிட்டர் கிரான்ட்: டிரம் மற்றும் டிஸ்க் என இருவித வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை முறையே ரூ.55,936 மற்றும் ரூ.59,648 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    டாப்-என்ட் மாடலான கிரான்ட் வேரியன்ட் பல்வேறு புகிய அம்சங்கள் மற்றும் அப்டேட்களை கொண்டுள்ளது. ஜூப்பிட்டர் கிரான்ட் மாடல் ஸ்டார்லைட் புளு என புதிய நிறத்தில் கிடைக்கிறது.

    டி.வி.எஸ். ஜூப்பிட்டர் கிரான்ட் மாடலின் புதிய அம்சங்கள்: எல்.இ.டி. ஹெட்லைட்கள், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புதிய சீட் கவர்கள், டிஸ்க் பிரேக் வேரியன்ட்டில் டைமன்ட்-கட் அலாய் வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்கள் டி.வி.எஸ். ஜூப்பிட்டர் ஸ்டான்டர்டு வேரியன்ட்டில் உள்ளதை போன்றே இடம்பெற்றிருக்கிறது.



    கூடுதல் அ்மசங்கள் தவிர புதிய ஸ்கூட்டரின் மெக்கானிக்கல் அம்சங்கள் மாற்றப்படவில்லை. அந்த வகையில் டி.வி.எஸ். ஜூப்பிட்டர் கிரான்ட் மாடலில் 109சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 பி.ஹெச்.பி. பவர், 8 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.

    ஜூப்பிட்டர் கிரான்ட் ஸ்கூட்டரில் 12-இன்ச் டியூப்லெஸ் டையர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் சஸ்பென்ஷன் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 30 எம்.எம். டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷனஅ வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் இரண்டு சக்கரங்களிலும் 130 எம்.எம். டிரம் பிரேக்களும், விரும்புவோர் பொருத்திக் கொள்ள 220 எம்.எம். முன்பக்க டிஸ்க் கிடைக்கிறது.
    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஜூப்பிட்டர் கிரான்ட் எடிஷன் இந்திய விற்பனையகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளது. #Jupiter



    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஜூப்பிட்டர் கிரான்ட் ஸ்கூட்டர் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. 

    ஜூப்பிட்டர் கிரான்ட் எடிஷன் ஸ்கூட்டர் டி.வி.எஸ். விற்பனையகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய ஜூப்பிட்டர் கிரான்ட் எடிஷன் பல்வேறு புதிய அம்சங்கள், முற்றிலும் புதிய வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

    டி.வி.எஸ். ஜூப்பிட்டர் கிரான்ட் எடிஷன் வெளிப்புறம் அதிகளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி முன்பக்கம் கிரான்ட் பேட்ஜிங் மற்றும் புதிய நிறம் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் கால்வைக்கும் பகுதி மற்றும் கால் வைக்கும் பெடல்களில் பெய்க் கலர் பூசப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: GaadiWaadi.com

    பிரீமியம் தோற்றம் பெற ஏதுவாக ஜூப்பிட்டர் கிரான்ட் எடிஷன் மாடலில் டான் லெதர் சீட் வழங்கப்பட்டுள்ளது. இதன் முன்பக்க மட்கார்டு க்ரோம் ஸ்ட்ரிப் செய்யப்பட்டுள்ளது. இது ஜூப்பிட்டர் கிளாசிக் மாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஜூப்பிட்டர் கிரான்ட் மாடலில் ஃபுல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் மற்றும் அனலாக் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.

    ஜூப்பிட்டர் கிரான்ட் எடிஷன் மாடலில் 109.7சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 8 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த இன்ஜின் சி.வி.டி. கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. டி.வி.எஸ். ஜூப்பிட்டர் ஸ்கூட்டர் லிட்டருக்கு 56 கிலோமீட்டர் வரை செல்லும் என சான்று பெற்றுள்ளது.
    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் டூயல்-டோன் நிறம் கொண்ட ஸ்டார் சிட்டி பிளஸ் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #motorcycles



    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் ஸ்டார் சிட்டி பிளஸ் மோட்டார்சைக்கிளின் டூயல்-டோன் வேரியன்ட்டை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்டார் சிட்டி பிளஸ் வேரியன்ட் கிரே-பிளாக் டூயல்டோன் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.52,907 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இத்துடன் சின்க்ரோனைஸ்டு பிரேக்கிங் தொழில்நுட்பம் (எஸ்.பி.டி.) வழங்கப்பட்டுள்ளது. இது டி.வி.எஸ். நிறுவனத்தின் காம்பினேஷன் பிரேக்கிங் சிஸ்டம் ஆகும். இதே பிரேக்கிங் சிஸ்டம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டி.வி.எஸ். ரேடியான் மோட்டார்சைக்கிளிலும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    எஸ்.பி.டி. தொழில்நுட்பம் ஒரு லீவரை அழுத்தினால் கூட பிரேக்களை இரண்டு சக்கரங்களுக்கும் சீராக வழங்கும். இதனால் மோட்டார்சைக்கிளை சிறப்பாக கட்டுப்படுத்த முடியும். மேலும் 110சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் இதுபோன்ற பிரேக்கிங் அம்சத்தை வழங்கும் ஒரே நிறுவனமாக டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி இருக்கிறது.



    புதிய ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் 109சிசி இகோதிரஸ்ட் ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8.3 பி.ஹெச்.பி. பவர், 8.7 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளில் அதிக விருதுகளை வென்ற மோட்டார்சைக்கிளாக டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் மாடல் இருக்கிறது.

    முன்னதாக டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி மாடல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அப்டேட் செய்யப்பட்டது. இதில் புதிய வடிவமைப்பு, மெட்டல் டி.வி.எஸ். பேட்ஜ் மற்றும் முழுமையான பிளாக் தீம் செய்யப்பட்டது. ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் அலாய் வீல்கள், மற்றும் இதர அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    புதிய டூயல்-டோன் வெர்ஷன் பிளாக்-ரெட், பிளாக்-புளு மற்றும் ரெட்-பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் கிரே-பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. புதிய டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் மாடல் யமஹா சலுட்டோ ஆர்.எக்ஸ்., ஹோன்டா டிரீம் யுகா மற்றும் பஜாஜ் டிஸ்கவர் 110 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் புதிய 110சிசி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் ரேடியன் என அழைக்கப்படுகிறது. #TVSRadeon


    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் ரேடியன் என்ற பெயரில் புதிய 110சிசி மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டுள்ள டி.வி.எஸ். ரேடியன் மோட்டார்சைக்கிள் இளம் தலைமுறையினரை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய சேசிஸ், ஒற்றை கிராடிள் டேபுலர் ஃபிரேம் கொண்டு உருவாகியிருக்கும் ரேடியன் மோட்டார்சைக்கிள் சிறிய நகரங்கள் மற்றும் இந்தியாவின் ஊரக பகுதிகளில் உள்ளவர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய டி.வி.எஸ். ரேடியன் மோட்டார்சைக்கிள் டி.வி.எஸ். ஸ்டார்சிட்டி பிளஸ் போன்றே 109.7சிசி, சிங்கிள் சிலிண்டர், 3-வால்வ், ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த இன்ஜின் 8.3 பி.ஹெச்.பி. பவர் @7000 ஆர்.பி.எம். மற்றும் 8.7 என்.எம். @5000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. புதிய 110 சிசி மோட்டார்சைக்கிள் லிட்டருக்கு 69.3 கிலோமீட்டர் வரை செல்லும் என டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி தெரிவித்துள்ளது. 



    ரேடியான் மோட்டார்சைக்கிள் சின்க்ரோனைஸ் செய்யப்பட்ட பிரேக்கிங் தொழில்நுட்பம் கொண்டுள்ளது, இது இந்த பிரிவு மோட்டார்சைக்கிளில்களில் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது சிறப்பான பிரேக்கிங் கண்ட்ரோல் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்கிட் ஆகாமல் இருக்கும்.

    டி.வி.எஸ். ரேடியன் விற்பனை அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அந்த வகையில் முதல் ஆண்டிற்குள் இரண்டு லட்சம் யூனிட்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டி.வி.எஸ். மோட்டார்சைக்கிள் ஹீரோ ஸ்ப்லென்டர் மாடலுக்கு போட்டியாக அமையும்.

    முன்னதாக டி.வி.எஸ். ரேடியன் கான்செப்ட் வடிவில் 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் தற்போதைய மாடல் பார்க்க வித்தியாசமான ஒன்றாக காட்சியளிக்கிறது. 

    இந்தியாவில் டி.வி.எஸ். ரேடியன் விலை ரூ.48,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் XL 100 i-டச் ஸ்டார்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனமாக இருக்கும் XL புதிய வேரியன்ட்-இன் XL 100 i-டச் ஸ்டார்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

    பல்வேறு புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய டி.வி.எஸ். XL மாடலில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட்டர், யுஎஸ்பி சார்ஜர் மற்றும் புதிய நிறங்களில் கிடைக்கிறது. டி.வி.எஸ். XL 100 i-டச் ஸடார்ட் XL ஹெவி டியூட்டி வேரியன்ட் மாடலை தழுவி உருவக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் புதிய மாடலில் எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. டி.வி.எஸ். XL 100 i-டச் ஸ்டார்ட் மாடலில் 99 சிசி சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 4.3 பி.ஹெச்.பி. பவர், 6.5 என்.எம். டார்கியூ மற்றும் சிங்கிள்-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    டி.வி.எஸ். XL 100 மாடலில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் மற்றும் லிட்டருக்கு 67 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோக், பின்புறம் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இரண்டு சக்கரங்களிலும் டிரம் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளன. டி.வி.எஸ். XL 100 எடை 80 கிலோ ஆகும். இந்தியாவில் டி.வி.எஸ். XL 100 i-டச் ஸ்டார்ட் விலை ரூ.36,109 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது XL ஹெவி டியூட்டி மாடலை விட ரூ.3,350 வரை அதிகம் ஆகும்.
    டிவிஎஸ் ரேசிங் நிறுவனத்தின் என்டார்க் SXR ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் என்டார்க் SXR ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய SXR ஸ்கூட்டர் வழக்கமான என்டார்க் 125 ஸ்கூட்டரை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. புதிய என்டார்க் SXR ஸ்கூட்டர் தேசிய ரேலி ஷேம்பின்ஷிப் போட்டின் நான்காவது சுற்றில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய ஸ்கூட்டரை மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற அசிஃப் அலி மற்றும் ஷமிம் கான் ஓட்டுகின்றனர். டிவிஎஸ் என்டார்க் SXR ஏற்கனவே டிவிஎஸ் ரேசிங்-க்கு நல்ல வரவேற்பை பெற்ற SXR 160 மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும். 

    வடிவமைப்பை பொருத்த வரை டிவிஎஸ் SXR பார்க்க என்டார்க் 125 போன்றே காட்சியளிக்கிறது. எனினும் புதிய என்டார்க் SXR புதிய டீக்கல்களை கொண்டுள்ளது. என்டார்க் SXR மாடலில் ரேஸ்-டியூன் செய்யப்பட்ட 125சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 19 பிஹெச்பி பவர் வழங்குகிறது. முந்தைய என்டார்க் 125 மாடலில் 9 பிஹெச்பி பவர் வழங்குகிறது.  



    டிவிஎஸ் என்டார்க் SXR மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. ரேஸ்-டியூன் செய்யப்பட்ட இன்ஜின் மட்டுமின்றி, ரேஸ்-டியூன் செய்யப்பட்ட ஹைட்ராலிக் சஸ்பென்ஷன், ரேஸ்-ஸ்பெக் கொண்ட இன்டேக் மற்றும் எக்சாஸ்ட் சிஸ்டம், மேம்படுத்தப்பட்ட இக்னிஷன் சிஸ்டம் மற்றும் 12 இன்ச் ஆஃப் ரோடு பட்டன் டயர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    டிவிஎஸ் என்டார்க் 125 இந்தியாவின் முதல் ஸ்மார்ட்எக்சோனெக்ட் (SmartXonnect) ஸ்கூட்டர் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இத்துடன் 55 அம்சங்களை வழங்கும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்டுள்ளது.
    டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அபாச்சி RTR 180 ரேஸ் எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் அபாச்சி RTR 180 ரேஸ் எடிஷன் மாடலை வெளியிட்டுள்ளது. 

    டிவிஎஸ் அபாச்சி RTR 180 ரேஸ் எடிஷன் பியல் வைட் நிறத்தில் பைக்கின் முன்பக்க மட்கார்டு, ஃபியூயல் டேன்க், பின்புற கௌல் உள்ளிட்டவற்றில் சிவப்பு மற்றும் கிரே நிற ஸ்டிரைப்கள் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த வடிவைப்பும் பிரத்யேக ரேசிங் கார்பன் ஃபைர் தீம் கொண்டிருக்கிறது.  

    புதிய ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளில் புதிய நிறம் மற்றும் ஸ்டிக்கரிங் தவிர ரேஸ் எடிஷன் அபாச்சி RTR 180 மாடலின் வடிவமைப்பில் அதிக மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. புதிய மோட்டார்சைக்கிளின் முன்பக்கம் கூர்மையான ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டுள்ளன. 



    இதன் ஃபியூயல் டேன்க் ஸ்போர்ட் தோற்றம் கொண்டுள்ளது. அபாச்சி RTR 180 ரேஸ் எடிஷன் இன்ஜின் கௌல் மற்றும் டிவிஎஸ் ரேசிங் பிரான்டிங் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புளு பேக்லிட் டிஸ்ப்ளே, டிஜிட்டல் மீட்டரில் மணிக்கு 0-60 கிலோமீட்டர் வேக ஸ்பீடு ரெக்கார்டர், லேப் டைமர் மற்றும் சர்வீஸ் இன்டிகேட்டர் உள்ளிட்டவை கொண்டிருக்கிறது.

    டிவிஎஸ் அபாச்சி RTR 180  ரேஸ் எடிஷன் மாடலில் 177.4சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 16.3 பிஹெச்பி பவர், 15.5 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. புதிய RTR 180 மணிக்கு 0-60 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.96 நௌடிகளில் செல்லும்.

    இத்துடன் டிவிஎஸ் அபாச்சி RTR 180 ரேஸ் எடிஷன் மாடலில் தலைசிறந்த பிரேக்கிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோன்று வாகனம் செல்லும் வேகத்திற்கு ஏற்ப இது எடை கொண்டிருப்பதால், கட்டுப்படுத்துவது சுலபமாகிறது.

    இந்தியாவில் டிவிஎஸ் அபாச்சி RTR 180 விலை ரூ.83,233 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×