என் மலர்

  நீங்கள் தேடியது "Moped"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தனியார் நிறுவன பஸ் ஒன்று பணியாட்களை அழைத்துக் கொண்டு கே.ஒ.என்.தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே வந்தது.
  • எதிர்பாராதவிதமாக இந்த பஸ் மொபட் மீது மோதியதில் மொபட்டில் வந்த 3 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர்.

  குமாரபாளையம்:

  குமாரபாளையம் பள்ளிப்பாளையம் சாலை, குமரன் மருத்துவமனை பின்புறம் வசிப்பவர் கலைமணி(வயது 34.). இவர் தனது குழந்தைகள் ரினிதாஸ்ரீ,( 6,) சிவஸ்ரீ, (3,) ஆகிய இருவரையும் மொபட்டில் பள்ளியில் விடுவதற்காக அழைத்து சென்றார். அப்போது தனியார் நிறுவன பஸ் ஒன்று பணியாட்களை அழைத்துக் கொண்டு கே.ஒ.என்.தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே வந்தது.

  எதிர்பாராதவிதமாக இந்த பஸ் மொபட் மீது மோதியதில் மொபட்டில் வந்த 3 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர். அவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  இது குறித்து குமாரபா ளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்.சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.குமாரபாளையம் அருகே நேரு நகரில் வசிப்பவர் அஜித் குமார்(வயது 19.) கட்டுமான கூலி தொழிலாளி. இவர் தன் அண்ணனின் மொபட்டில் சேலம்-கோவை புறவழிச்சாலையில் நேரு நகர் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த கார், மொபட் மீது மோதியதில் அஜித்குமார் படுகாயமடைந்தார்.

  குமாரபாளையம் போலீசார் விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் கோவையை சேர்ந்த தீயணைப்பு படை வீரர் கணேஷ்பாபு, (36,) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இவ்விபத்தில் கணேஷ்பாபுவிற்கும் காயமேற்பட்டதால் இவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோபிசெட்டிபாளையம் அருகே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி கணவன்-மனைவி லாரி மோதியது விபத்தில் பெண் பலியானார்.
  • இது குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  கோபி:

  கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ராஜேஸ்வரி (57). இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சண்முகம் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

  இந்நிலையில் சம்பவ த்தன்று ராஜேஸ்வரிக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரை மருத்துவமனைக்கு கணவர் சண்முகம் தனது மொபட்டில் அழைத்து சென்றார். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று கணவன்-மனைவி இருவரும் மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

  சாந்தி தியேட்டர் பிரிவு அருகே ஈரோடு-சத்தி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக சண்முகம் மொபட் மீது மோதியது. இதில் சண்முகம், ராஜேஸ்வரி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

  அப்ேபாது அந்த வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கணவன்-மனைவி இருவரையும் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் கோவை அரசு மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

  அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார். சண்முகம் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  இது குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீரவநல்லூரில் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற அவர் கடைக்கு சென்ற சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது மொபட்டை காணவில்லை.
  • வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட்டை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

  நெல்லை:

  அம்பை புது அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்துரை(வயது 31). தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் வீரவநல்லூர் அருகே உள்ள தெற்கு வீரவநல்லூரில் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார்.

  அங்கு தனது மொபட்டை நிறுத்திவிட்டு கடைக்கு சென்ற பால்துரை சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது மொபட்டை காணவில்லை.

  இது தொடர்பாக அவர் வீரவநல்லூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட்டை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் தனது XL மொபெட் மாடலை பாரத் புகை விதி 6-க்கு ஏற்ப அப்டேட் செய்ய இருக்கிறது. #TVS  அரசின் புதிய விதிமுறைகளுக்கேற்ப வாகனங்களை தயாரிக்கும் சவாலான பணிகளை வாகன உற்பத்தி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. 

  அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வர இருக்கும் பாரத் புகை விதி 6-க்கு ஏற்ப இப்போதிலிருந்தே தனது வாகனங்களைத் தயாரிக்கத் தொடங்கி விட்டது டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம். இந்நிறுவனத்தின் பிரபல மாடலான டி.வி.எஸ். XL புதிய விதிமுறைகளுக்கேற்ப தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வருகிறது.

  இந்தியாவில் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் மொபெட்களின் பங்கு 4 சதவீதமாக உள்ளது. மொபெட் உற்பத்தியில் டி.வி.எஸ்., ஹீரோ மற்றும் கைனெடிக் ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தன. இதில் ஹீரோ மற்றும் கைனெடிக் நிறுவனங்கள் மொபெட் உற்பத்தியிலிருந்து வெளியேறிய நிலையில் இப்போது மொபெட் உலகின் முன்னோடி நிறுவனமாக டி.வி.எஸ். திகழ்கிறது.   தங்களது ஆரம்ப கால வாகனமான மொபெட்டை காலத்திற்கேற்றவாறு மாற்றியமைத்துள்ளது இந்நிறுவனம். பாரத் புகை 6 விதிக்கேற்ப வாகனங்களை வடிவமைத்து மாற்றுகிறது இதன் காரணமாக மொபெட்டின் விலை ரூ.29 ஆயிரத்திலிருந்து ரூ.38 ஆயிரம் வரை இருக்கும் என்று தெரிகிறது. 

  புதிய டி.வி.எஸ். XL மாடலில் 4-ஸ்டிரோக் என்ஜின், 100 சி.சி. திறன் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வசதி ஆகியவை சேர்க்கப்படுவதால் இதன் விலை அதிகரிப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மொபெட் பிரியர்களுக்காக தொடர்ந்து நவீன வசதிகளை இதில் புகுத்தி வருவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் XL 100 i-டச் ஸ்டார்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.  இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனமாக இருக்கும் XL புதிய வேரியன்ட்-இன் XL 100 i-டச் ஸ்டார்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

  பல்வேறு புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய டி.வி.எஸ். XL மாடலில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட்டர், யுஎஸ்பி சார்ஜர் மற்றும் புதிய நிறங்களில் கிடைக்கிறது. டி.வி.எஸ். XL 100 i-டச் ஸடார்ட் XL ஹெவி டியூட்டி வேரியன்ட் மாடலை தழுவி உருவக்கப்பட்டுள்ளது.

  இத்துடன் புதிய மாடலில் எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. டி.வி.எஸ். XL 100 i-டச் ஸ்டார்ட் மாடலில் 99 சிசி சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 4.3 பி.ஹெச்.பி. பவர், 6.5 என்.எம். டார்கியூ மற்றும் சிங்கிள்-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

  டி.வி.எஸ். XL 100 மாடலில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் மற்றும் லிட்டருக்கு 67 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோக், பின்புறம் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளது.

  இரண்டு சக்கரங்களிலும் டிரம் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளன. டி.வி.எஸ். XL 100 எடை 80 கிலோ ஆகும். இந்தியாவில் டி.வி.எஸ். XL 100 i-டச் ஸ்டார்ட் விலை ரூ.36,109 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது XL ஹெவி டியூட்டி மாடலை விட ரூ.3,350 வரை அதிகம் ஆகும்.
  ×