முத்தூர் அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள்மோதி முதியவர் பலி

சம்பவத்தன்று முருகேஷ், ஓலப்பாளையம் பொன்பரப்பி பிரிவு அருகே தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

முத்தூர்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த முத்தூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 66). சம்பவத்தன்று முருகேஷ், ஓலப்பாளையம் பொன்பரப்பி பிரிவு அருகே தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, முருகேஷ் சென்று கொண்டிருந்த மொபட் மீது மோதியதாக தெரிகிறது.

இதில் மொபட்டில் இருந்து பலத்த காயத்துடன் முருகேஷ் கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை அங்கிருந்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகேஷ் நேற்று (திங்கட்கிழமை) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com