என் மலர்
நீங்கள் தேடியது "fell"
- தீயணைப்பு படையினர் மழையை பொருட்படுத்தாது சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர்
- இரவு 7 மணிக்கு போக்குவரத்து சீரானது
ஊட்டி,
கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை முறையாக பெய்யவில்லை. மேலும் வழக்கத்துக்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக கூடலூர், பந்தலூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று காலை முதல் தொடர் மழை பெய்தது. இதேபோல் கடும் குளிரும் நிலவியது. இந்த நிலையில் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்துக்கு செல்லும் சாலையில் உள்ள கீழ்நாடுகாணி பகுதியில் மாலை 6 மணிக்கு சாலையோரம் நின்றிருந்த மரம் ஒன்று சரிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழையும் பெய்து கொண்டிருந்தது.
இது குறித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து கூடலூர் நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து மழையை பொருட்படுத்தாது சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் இரவு 7 மணிக்கு மரம் அப்புறப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது. இந்த சம்பவத்தால் வெளியூர் செல்லும் வாகனங்கள் மிக தாமதமாக புறப்பட்டு சென்றது. இதேபோல் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- சேகர் (வயது 50) இவர் தோட்டத்தில் உள்ள கிணற்றின் ஓரத்தில் கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள் அதிகமாக இருந்தது.
- சுத்தம் செய்வதற்காக வளையப்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவரது பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு எடுத்து வந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள சித்ர மகாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 50).
இவர் தோட்டத்தில் உள்ள கிணற்றின் ஓரத்தில் கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள் அதிகமாக இருந்தது. அதை சுத்தம் செய்வதற்காக வளையப்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவரது பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு எடுத்து வந்தார்.
பொக்லைன் எந்திரத்தை டிரைவர் சஞ்சீவி என்பவர் இயக்கி, கிணற்றை சுற்றியிருந்த மரங்கள் மற்றும் செடி கொடிகளை அகற்றிக் ெகாண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பொக்லைன் எந்திரம் விழுந்தது.
அப்போது, டிரைவர் சஞ்சீவி மரக்கிளையை தாவி பிடித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து, நாமக்கல்லில் இருந்து ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் சுமார் 7 மணி நேரம் போராடி, கிணற்றில் விழுந்த பொக்லைன் எந்திரம் மீட்கப்பட்டது.
- கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
- மரம் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோத்தகிரி-குன்னூர் சாலையில் உள்ள வண்டிச்சோலை பகுதியில், மதுபாட்டில்கள் ஏற்றி வந்த ஒரு டாஸ்மாக் லாரி, சாலை யோரம் நின்றது. அப் போது அங்கு இருந்த ஒரு ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் லாரியின் முன்பகுதி சேதம் அடைந் தது. இருந்தபோ திலும் டிரைவர், கண்டக்டர் இருவரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பினர். கோத்தகிரி- குன்னூர் போக்குவரத்து சாலையில் மரம் விழுந்த தால், அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகு றித்து தகவல் அறிந்த தீய ணை ப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் வேகமாக மரத்தை அப்பு றப்படுத்தும் பணியில் ஈடுபட்டு சாலை யை சீர் செய்தனர்.
லாரியின் மேல் மரம் விழுந்த சம்பவம் அப்ப குதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பெருந்துறை அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் தலையில் பலத்த அடிபட்டு பலியானார்.
- இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெருந்துறை:
சித்தோடு ராயபாளையம்புதூர் கோர்ட் காலனி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 52). இவர் நேற்று மாலை பெருந்துறை வந்துவிட்டு சித்தோடு செல்வதற்காக தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
பவானி ரோடு எருகாட்டுவலசு அருகே சென்று கொண்டிருந்த போது மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூச்சு பேச்சின்றி கிடந்தார்.
உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- சிவதாபுரம் ஆண்டிப்பட்டி பட்டகரை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). கூலி தொழிலாளியான இவர், நேற்று ஏற்காட்டிற்கு சென்றார்.
- ஏற்காடு மலைப் பாதையின் உள்ள 60 அடி பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தடுப்பில் இருசக்கர வாகனத்துடன் மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர், 100 அடி பள்ளத்தில் விழுந்தார்.
ஏற்காடு:
சேலம் சிவதாபுரம் ஆண்டிப்பட்டி பட்டகரை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). கூலி தொழிலாளியான இவர், நேற்று ஏற்காட்டிற்கு சென்றார். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் சேலம் திரும்பி கொண்டிருந்தார்.
ஏற்காடு மலைப் பாதையின் உள்ள 60 அடி பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தடுப்பில் இருசக்கர வாகனத்துடன் மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர், 100 அடி பள்ளத்தில் விழுந்தார்.
இந்த நிலையில் இன்று காலை, நடைபயிற்சிக்கு வந்த சிலர், ரமேஷை பார்த்து, செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ரமேஷை பள்ளத்தில் இருந்து மீட்டனர்.
பள்ளத்தில் விழுந்ததில் அவருக்கு இடுப்பு மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- . இவர்பண்ருட்டி- சென்னை சாலைெரயில்வே மேம்பாலம் பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார்.
- அப்போது ரமேஷ் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பலியானார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.எல்.புரம் புது நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவர்பண்ருட்டி- சென்னை சாலைெரயில்வே மேம்பாலம் பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார்நேற்று இரவு இவர் திருச்செந்தூர்எக்ஸ்பிரஸ் ெரயிலில்ஏறி திருச்செந்தூ ருக்கு பயணம் செய்தார். அப்போது பண்ருட்டி ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீர் என தவறி விழுந்தார். அப்போது ரமேஷ் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பலியானார்.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 2 சிறுவர்கள் விழுந்து இறந்த பள்ளம் ரெயில்வே தோண்டியதா? என்பது குறித்து அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
- சம்பவம் நடந்த இடம், ரெயில்வே எல்லைக்கு 500 மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ளதாக கூறினார்.
மதுரை
திண்டுக்கல் மாவட்டம், தாமரைப்பட்டி அருகே தண்ணீர் தேங்கிய பள்ளத்தில் லத்தீஷ்வினி (வயது9), சர்வின்(8) என்ற 2 சிறுவர்கள் விழுந்து இறந்தனர்.
அந்தப் பள்ளம் ரெயில்வே பணிகளுக்காக தோண்டப்பட்டது என்று தகவல் வெளியானது. இதுகுறித்து மதுரை கோட்ட ெரயில்வே அதிகாரி கூறுகையில், திண்டுக்கல்லில் 2 குழந்தைகள் பள்ளத்தில் விழுந்து பலியான இடம்- தனியார் மாவு மில்லுக்கு சொந்தமானது. அவர்கள் தோண்டிய பள்ளத்தில் மழை தண்ணீர் தேங்கி உள்ளது. அதற்குள் விழுந்து 2 குழந்தைகளும் இறந்துனர்.
சம்பவம் நடந்த இடம், ெரயில்வே எல்லைக்கு 500 மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ளது. இந்த சம்பவத்துடன் ெரயில்வே நிர்வாகத்தை தொடர்புபடுத்த வேண்டாம் என்றார்.
- கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு சரிவர செல்லாமல் குடித்து விட்டு சுற்றி கொண்டு இருந்தார்.
- வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
பீகார் மாநிலம் பெருசு ராய் மாவட்டம் கிசான்பூர் பகுதியை சேர்ந்தவர் சுனில்சர்மா (40). இவர் ஈரோடு, நசியனூர் ரோடு கைகாட்டிவலசில் உள்ள கிளாஸ் கம்பெனியில் கார்பென்டராக வேலை பார்த்து அங்கேயே தங்கியிருந்து வந்தார். சுனில் சர்மாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு சரிவர செல்லாமல் குடித்து விட்டு சுற்றி கொண்டு இருந்தார். நேற்று இரவு அதே பகுதியில் ரோட்டோரம் இருந்த கல் மேல் உட்கார்ந்து இருந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த சுனில் சர்மா நிலைதடுமாறி கழிவுநீர் கால்வாயில் விழுந்தார். இதில் மூச்சு திணறி, பலத்த காயம் ஏற்பட்டு இறந்து விட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுனில்சர்மா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெருந்துறை அருகே 50 அடி ஆழம் கொண்ட தோட்டத்து கிணற்றில் மூதாட்டி தவறி விழுந்து பலியானார்.
- பெருந்துறை போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள கிரே நகர் பெரிய காடு பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ண கவுண்டர். இவரது மனைவி அம்மணியம்மாள் (வயது 88). கணவர் இறந்து விட்ட நிலையில் அம்மணியம்மாள் தனது மகன் துரைசாமி என்பவரது வீட்டில் இருந்து வந்துள்ளார்.
துரைசாமி அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் சுமார் 50 அடி ஆழம் கொண்ட 10 அடி தண்ணீர் உள்ள தோட்டத்து கிணறு உள்ளது. நேற்று இரவு அம்மணியம்மாள் கிணற்றின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.
உடனடியாக துரைசாமி பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி அம்மணியம்மாள் உடலை கயிறு கட்டி பிணமாக மீட்டனர்.
பின்னர் பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் அம்மணியம்மாளின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை:
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள மைல்கல்லை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சந்தோஷ் (வயது 17). பிளஸ்-2 தேர்வு எழுதியுளளார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். இன்று வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். வீட்டுக்கு வந்த அவரிடம் அவரது தாயார் பால் வாங்கி வரும்படி கூறியுள்ளார்.
இதனையடுத்து சந்தோஷ் பால் வாங்குவதற்காக நடந்து சென்றார். திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடடினடியாக சந்தோசை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சந்தோஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்தவர் சேசுமாணிக்கம் (வயது 40). இவரது நண்பர் ஜெயசீலன் (46). இருவரும் தொழிலாளர்கள். இவர்கள் காங்கயத்தில் ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தனர். வீட்டின் மேற்கூரையில் ஏறி பிரித்து கொண்டிருந்தனர். அப்போது மேற்கூரை சிமெண்டு கூரை திடீரென சரிந்தது. இதில் தொழிலாளர்கள் இருவரும் மேலே இருந்து தவறி கீழே விழுந்தனர். படுகாயத்துடன் துடித்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயசீலன் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படுகாயத்துடன் சேர்க்கப்பட்ட அவரது நண்பர் சேசு மாணிக்கத்துக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பரிதாப சம்பவம் குறித்து காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் காங்கயம் பகுதியில் பரபரப்பு நிலவியது.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு, கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 26-ந் தேதி பதவிக்கு வந்தது. அந்த காலகட்டம் முதல் வெளிநாடுகளில் இந்திய கருப்பு பண முதலைகளால் பதுக்கிவைக்கப்பட்டு உள்ள கருப்பு பணத்தை இந்தியாவில் கொண்டு வந்து சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 3 ஆண்டுகளாக குறைந்து வந்ததாகவும், கடந்த 2017-ம் ஆண்டில் கருப்பு பணத்துக்கு எதிரான மத்திய அரசின் கடும் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்து 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.7 ஆயிரம் கோடி) ஆகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இது சுவிஸ் தேசிய வங்கியின் புள்ளிவிவரங்கள் என கூறப்பட்டது.
இந்த புள்ளி விவரங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இது தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிதி மந்திரி பியூஸ் கோயல் நேற்று கேள்வி நேரத்தின்போது விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஆண்டு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்து உள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து சுவிஸ் அதிகாரிகளிடம் நான் விவாதித்தேன்.
இதில், சுவிஸ் தேசிய வங்கியின் புள்ளிவிவரங்கள் சரியாக புரிந்து கொள்ளப்படாமல் தவறாக வழிநடத்துகிற தலைப்புகளுடன், ஆய்வுடன் வெளியிடப்படுகின்றன என்று சுவிஸ் அதிகாரிகள் கூறினர். இது தவறானது என்றும் சுவிஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.
சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்கிற கருப்பு பணத்தை பொறுத்தவரையில், மிகவும் நம்பத்தகுந்த தகவல்கள் என்றால், அவை சர்வதேச செட்டில்மென்டுகள் வங்கியின் (பிஐஎஸ்) உள்ளூர் வங்கியியல் புள்ளிவிவரம் தான் என்று சுவிஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதன்படி 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையில் கருப்பு பண பதுக்கல் 80 சதவீதம் குறைந்து உள்ளது.
2013-ம் ஆண்டு கருப்பு பண டெபாசிட் 2.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.17,680 கோடி). 2014-ம் ஆண்டு இது 2.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.15,640 கோடி). 2015-ம் ஆண்டு இது 1.4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9,520 கோடி).
கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் இது 34.5 சதவீதம் சரிவு கண்டு உள்ளது. 2016-ம் ஆண்டு கருப்பு பண டெபாசிட்டுகளின் அளவு 800 மில்லியன் டாலர் (சுமார் ரூ.5,440 கோடி) ஆகும். இது 2017-ல் 524 மில்லியன் டாலராக (சுமார் ரூ.3,563 கோடி) குறைந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியே பியூஸ் கோயல் பேட்டி அளித்தார். அப்போது சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் அதிகரித்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், ஆதாரம் இல்லாத தகவல்களின் அடிப்படையில் இப்படிப்பட்ட கருத்தை கூறி நாட்டுக்கு அவதூறு ஏற்படுத்துவது பற்றி ராகுல் காந்திதான் நாட்டுக்கு பதில் கூற வேண்டும்.
அவர் உண்மைகளை அறிந்து கொள்ளாமலேயே இப்படி சொல்வதை வழக்கமாக்கி கொண்டு உள்ளார்.
சுவிஸ் அதிகாரிகள் தந்த தகவல்கள்படி, 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017-ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண டெபாசிட்டுகள் 34.5 சதவீதம் குறைந்து உள்ளது. 2017-ம் ஆண்டின் கடைசி காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர் 2017) 44 சதவீதம் குறைந்து உள்ளது. இது சர்வதேச செட்டில்மென்டுகள் வங்கியின் (பிஐஎஸ்) உள்ளூர் வங்கியியல் புள்ளிவிவரம் ஆகும்.
இது மத்தியில் அமைந்து உள்ள மோடி அரசின் மீது மக்கள் கொண்டு உள்ள அச்சத்தை பிரதிபலிக்கிறது. கருப்பு பணம் பதுக்குகிறவர்கள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #SwissBank #IndianDeposit #PiyushGoyal #Tamilnews