மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி

பெருந்துறை அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் தலையில் பலத்த அடிபட்டு பலியானார்.இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி
Published on

பெருந்துறை:

சித்தோடு ராயபாளையம்புதூர் கோர்ட் காலனி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 52). இவர் நேற்று மாலை பெருந்துறை வந்துவிட்டு சித்தோடு செல்வதற்காக தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

பவானி ரோடு எருகாட்டுவலசு அருகே சென்று கொண்டிருந்த போது மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூச்சு பேச்சின்றி கிடந்தார்.

உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com