கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த வடமாநில வாலிபர் சாவு

கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு சரிவர செல்லாமல் குடித்து விட்டு சுற்றி கொண்டு இருந்தார்.வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த வடமாநில வாலிபர் சாவு
Published on

ஈரோடு:

பீகார் மாநிலம் பெருசு ராய் மாவட்டம் கிசான்பூர் பகுதியை சேர்ந்தவர் சுனில்சர்மா (40). இவர் ஈரோடு, நசியனூர் ரோடு கைகாட்டிவலசில் உள்ள கிளாஸ் கம்பெனியில் கார்பென்டராக வேலை பார்த்து அங்கேயே தங்கியிருந்து வந்தார். சுனில் சர்மாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு சரிவர செல்லாமல் குடித்து விட்டு சுற்றி கொண்டு இருந்தார். நேற்று இரவு அதே பகுதியில் ரோட்டோரம் இருந்த கல் மேல் உட்கார்ந்து இருந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த சுனில் சர்மா நிலைதடுமாறி கழிவுநீர் கால்வாயில் விழுந்தார். இதில் மூச்சு திணறி, பலத்த காயம் ஏற்பட்டு இறந்து விட்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுனில்சர்மா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com