search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swiss Banks"

    சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் குறைந்து உள்ளதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிதி மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்தார். #SwissBank #IndianDeposit #PiyushGoyal
    புதுடெல்லி:

    மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு, கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 26-ந் தேதி பதவிக்கு வந்தது. அந்த காலகட்டம் முதல் வெளிநாடுகளில் இந்திய கருப்பு பண முதலைகளால் பதுக்கிவைக்கப்பட்டு உள்ள கருப்பு பணத்தை இந்தியாவில் கொண்டு வந்து சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



    ஆனால் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 3 ஆண்டுகளாக குறைந்து வந்ததாகவும், கடந்த 2017-ம் ஆண்டில் கருப்பு பணத்துக்கு எதிரான மத்திய அரசின் கடும் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்து 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.7 ஆயிரம் கோடி) ஆகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இது சுவிஸ் தேசிய வங்கியின் புள்ளிவிவரங்கள் என கூறப்பட்டது.

    இந்த புள்ளி விவரங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

    இது தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிதி மந்திரி பியூஸ் கோயல் நேற்று கேள்வி நேரத்தின்போது விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்து உள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து சுவிஸ் அதிகாரிகளிடம் நான் விவாதித்தேன்.

    இதில், சுவிஸ் தேசிய வங்கியின் புள்ளிவிவரங்கள் சரியாக புரிந்து கொள்ளப்படாமல் தவறாக வழிநடத்துகிற தலைப்புகளுடன், ஆய்வுடன் வெளியிடப்படுகின்றன என்று சுவிஸ் அதிகாரிகள் கூறினர். இது தவறானது என்றும் சுவிஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்கிற கருப்பு பணத்தை பொறுத்தவரையில், மிகவும் நம்பத்தகுந்த தகவல்கள் என்றால், அவை சர்வதேச செட்டில்மென்டுகள் வங்கியின் (பிஐஎஸ்) உள்ளூர் வங்கியியல் புள்ளிவிவரம் தான் என்று சுவிஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    அதன்படி 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையில் கருப்பு பண பதுக்கல் 80 சதவீதம் குறைந்து உள்ளது.

    2013-ம் ஆண்டு கருப்பு பண டெபாசிட் 2.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.17,680 கோடி). 2014-ம் ஆண்டு இது 2.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.15,640 கோடி). 2015-ம் ஆண்டு இது 1.4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9,520 கோடி).

    கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் இது 34.5 சதவீதம் சரிவு கண்டு உள்ளது. 2016-ம் ஆண்டு கருப்பு பண டெபாசிட்டுகளின் அளவு 800 மில்லியன் டாலர் (சுமார் ரூ.5,440 கோடி) ஆகும். இது 2017-ல் 524 மில்லியன் டாலராக (சுமார் ரூ.3,563 கோடி) குறைந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியே பியூஸ் கோயல் பேட்டி அளித்தார். அப்போது சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் அதிகரித்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், ஆதாரம் இல்லாத தகவல்களின் அடிப்படையில் இப்படிப்பட்ட கருத்தை கூறி நாட்டுக்கு அவதூறு ஏற்படுத்துவது பற்றி ராகுல் காந்திதான் நாட்டுக்கு பதில் கூற வேண்டும்.

    அவர் உண்மைகளை அறிந்து கொள்ளாமலேயே இப்படி சொல்வதை வழக்கமாக்கி கொண்டு உள்ளார்.

    சுவிஸ் அதிகாரிகள் தந்த தகவல்கள்படி, 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017-ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண டெபாசிட்டுகள் 34.5 சதவீதம் குறைந்து உள்ளது. 2017-ம் ஆண்டின் கடைசி காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர் 2017) 44 சதவீதம் குறைந்து உள்ளது. இது சர்வதேச செட்டில்மென்டுகள் வங்கியின் (பிஐஎஸ்) உள்ளூர் வங்கியியல் புள்ளிவிவரம் ஆகும்.

    இது மத்தியில் அமைந்து உள்ள மோடி அரசின் மீது மக்கள் கொண்டு உள்ள அச்சத்தை பிரதிபலிக்கிறது. கருப்பு பணம் பதுக்குகிறவர்கள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SwissBank #IndianDeposit #PiyushGoyal #Tamilnews
    மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் சுவிச்சர்லாந்து வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் பணம் 80 சதவிகிதம் குறைந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய நிதி மந்திரி பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். #MonsoonSession #PiyushGoyal #SwissBank
    புதுடெல்லி:

    இந்திய அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் சுவிச்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் அதிகளவில் பணம் பதுக்கல் செய்துள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் கருப்புப்பண விவகாரம் புயலாக வீசிய நிலையில், மோடி பல வாக்குறுதிகளுடன் ஆட்சியை பிடித்தார்.

    பிரதமரானதும் கருப்புப்பணத்தை மீட்கும் நடவடிக்கையாக தனி குழு அமைத்தார். ஆனால், அதன் பின்னர், அந்த வேலையில் எந்த முன்னேற்றமும் நடந்ததாக தெரியவில்லை. இந்நிலையில், சுவிசர்லாந்தில் உள்ள நேஷனல் வங்கி இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் குறித்தான தகவல்களை கடந்த மாதம் வெளியிட்டது. 

    கடந்த 2016-ம் ஆண்டை விட இந்தியர்களின் பணம் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். அதாவது, 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்குகள், இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,000 கோடிகளுக்கும் மேல் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ளனர்.

    கறுப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு கூறி வரும் நிலையில், இந்த தரவுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பலர் அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

    இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் இன்று பதிலளித்த மத்திய நிதி மந்திரி பியூஷ் கோயல், “2014ம் ஆண்டில் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததும், 2014 மற்றும் 2017க்கு இடையில் சுவிஸ் தேசிய வங்கியில் வைப்புத் தொகை 80% ஆக குறைந்துள்ளது” என கூறினார்.

    மேலும், சர்வதேச செட்டில்மெண்ட் வங்கி வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், 2016-ம் ஆண்டை விட கடந்த ஆண்டில் இந்தியர்கள் சுவிச்சர்லாந்தில் இந்தியர்கள் வைத்துள்ள சொத்துகள் 34.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. கடந்த மாதம் வெளியான அறிக்கை தவறாக தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். 
    சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் இந்தியா 73-வது இடத்தில் உள்ளது. #SwissBank #India
    புதுடெல்லி:

    இந்தியர்கள் உள்பட சர்வதேச நாடுகளை சேர்ந்தவர்கள் தங்களின் கருப்பு பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பதுக்குகிறார்கள். இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கருப்பு பண பதுக்கலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது.

    எனினும் அதனை மீறியும் கடந்த ஆண்டு, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்து 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.7 ஆயிரம் கோடி) ஆகி உள்ளது என்கிற அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது.



    இதன் மூலம் சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கியவர்களின் பட்டியலில் இந்தியா 73-வது இடத்தில் உள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கி வெளியிட்டுள்ள வருடாந்திர ஆய்வறிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது.

    இந்த பட்டியலில் இங்கிலாந்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து அமெரிக்கா 2-வது இடத்தில் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக மேற்கு இந்திய தீவு, பிரான்ஸ், ஹாங்காங், பஹாமாஸ், ஜெர்மனி, குருன்செவ், லக்சம்பர்க், கேமன் தீவுகள் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன.

    பிரிக்ஸ் நாடுகளை பொறுத்தவரை, சீனா 20-வது இடத்திலும், ரஷ்யா 23-வது இடத்திலும், பிரேசில் 61-வது இடத்திலும், தென் ஆப்ரிக்கா 67-வது இடத்திலும் உள்ளன. அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியாவுக்கு ஒரு படி முன்னேறி 72-வது இடத்தில் இருக்கிறது.

    அதேபோல் சிங்கப்பூர், ஐக்கிய அரசு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, பனாமா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், சைப்ரஸ், இஸ்ரேல், மெக்சிகோ, பெர்முடா, துருக்கி, குவைத்து மார்ஷல் தீவுகள், கனடா, தாய்லாந்து, தென் கொரியா, மலேசியா, பெலிஜ், இந்தோனேஷியா, செசல்ஸ், ஜிப்ரால்டர், சமவோ, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், கஜகஸ்தான் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் இந்தியாவுக்கு முன்னதாக உள்ளன.

    இந்தியாவுக்கு கீழ் மொரிஷியஸ் (77-வது இடம்), வங்கதேசம்(95), இலங்கை(108), நேபாளம்(112), வாட்டிகன் சிட்டி(122), ஈராக்(132), ஆப்கன்(155), புர்கினா பாசோ(162), பூடான்(203), வட கொரியா(205 ) ஆகிய நாடுகள் உள்ளன. கடைசி இடத்தில் பலாவ்(214) உள்ளது.

    1996-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த பட்டியலில் இந்தியா முதல் 50 நாடுகளுக்குள் இருந்து வந்தது. அதன் பின்னர் 2008-ம் ஆண்டு 55-வது இடத்துக்கு இறங்கியது. 2009 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் 59-வது இடத்தில் இருந்து வந்த இந்தியா 2011-ம் ஆண்டு மீண்டும் 55-வது இடத்துக்கு சென்றது.

    அதன் பிறகு இந்த பட்டியலில் ஏற்ற இறங்கங்களை சந்தித்து வந்த இந்தியா கடந்த 2016-ம் ஆண்டு 88-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.  #SwissBank #India #Tamilnews 
    சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் முன்பை விட அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், 2019 இறுதிக்குள் பணம் பதுக்கியவர்கள் பட்டியலை பெற்றுவிடுவோம் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். #SwissBank
    புதுடெல்லி:

    இந்திய அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் சுவிச்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் அதிகளவில் பணம் பதுக்கல் செய்துள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் கருப்புப்பண விவகாரம் புயலாக வீசிய நிலையில், மோடி பல வாக்குறுதிகளுடன் ஆட்சியை பிடித்தார்.

    பிரதமரானதும் கருப்புப்பணத்தை மீட்கும் நடவடிக்கையாக தனி குழு அமைத்தார். ஆனால், அதன் பின்னர், அந்த வேலையில் எந்த முன்னேற்றமும் நடந்ததாக தெரியவில்லை. இந்நிலையில், சுவிசர்லாந்தில் உள்ள நேஷனல் வங்கி இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் குறித்தான தகவல்களை வெளியிட்டது. 

    கடந்த 2016-ம் ஆண்டை விட இந்தியர்களின் பணம் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். அதாவது, 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்குகள், இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,000 கோடிகளுக்கும் மேல் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ளனர்.



    கறுப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு கூறி வரும் நிலையில், இந்த தரவுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பலர் அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

    இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்கு இன்று பதிலளித்த மத்திய நிதி மந்திரி பியூஷ் கோயல், “2019 நிதியாண்டு இறுதிக்குள் சுவிச்சர்லாந்து நாட்டுக்கு முறைகேடாக பணம் அனுப்பியவர்கள், வங்கியில் பணம் பதுக்கியவர்கள் பட்டியலை பெற்றுவிடுவோம்” என கூறினார்.

    மேலும், இந்தியா - சுவிச்சர்லாந்து அரசுகள் இடையே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, 2018 ஜனவரி 1-ம் தேதி முதல் நிதியாண்டின் இறுதி வரை எல்லா தகவல்களும் நாள் பெறுவதற்கு தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் கோயல் தெரிவித்துள்ளார். 
    சுவிச்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள தொகை கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    ஜுரிச்:

    இந்திய அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் சுவிச்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் பணம் டெபாசிட் செய்துள்ளதாக கூறப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் கருப்புப்பண விவகாரம் புயலாக வீசிய நிலையில், மோடி பல வாக்குறுதிகளுடன் ஆட்சியை பிடித்தார்.

    பிரதமரானதும் கருப்புப்பணத்தை மீட்கும் நடவடிக்கையாக தனி குழு அமைத்தார். ஆனால், அதன் பின்னர், அந்த வேலையில் எந்த முன்னேற்றமும் நடந்ததாக தெரியவில்லை. இந்நிலையில், சுவிச்சர்லாந்தில் உள்ள நேஷனல் வங்கி இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் குறித்தான தகவல்களை வெளியிட்டது. 

    கடந்த 2016-ம் ஆண்டை விட இந்தியர்களின் பணம் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். அதாவது, 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்குகள், இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,000 கோடிகளுக்கும் மேல் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ளனர்.

    ஆண்டு வாரியான தரவுகளின் படி 2017-ல் மொத்தமாக வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் பணம் 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது 2017-ம் ஆண்டில் மட்டும் 1.46 ட்ரில்லியன் இந்திய மதிப்பில் சுமார் 100 லட்சம் கோடி டெபாசிட் ஆகியுள்ளது.

    கடந்த 2016-ல் அதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியர்களின் டெபாசிட் 45 சதவிகிதம் சரிவு கண்டது. ஆனால், இந்த ஆண்டு நேர்மாறாக டெபாசிட் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது.



    கடந்த 2017-ம் ஆண்டின் தரவுகளின் படி நேரடியாக இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் வைத்திருக்கும் தொகை சுமார் ரூ.6,891 கோடியாகும். 2006-ம் ஆண்டு இறுதியில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருந்த தொகை மட்டும் ரூ.23 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இது 10-ல் ஒரு பங்கு குறைந்தது. 

    இந்தச் சாதனை அளவுக்குப் பிறகு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் அதிகரித்திருப்பது இது மூன்றாவது முறையாகும். 2011-ல் 12 சதவிகிதம், 2013-ல் 43 சதவிகிதம் தற்போது 2017-ல் 50.2 சதவிகிதம் அதிகரித்தது. அதாவது, 2004-ல் 56 சதவிகித அதிகரிப்புக்குப் பிறகு தற்போது 2017-ல் 50 சதவிகிதத்துக்கும் சற்று கூடுதலாக இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கி இருப்பில் அதிகரித்துள்ளது.

    கருப்புப்பணத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசு கூறி வரும் நிலையில், சுவிஸ் வங்கியின் இந்த தரவுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
    ×