search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி ஆட்சிக்கு பின் இந்தியர்கள் பதுக்கிய கறுப்புப்பணம் 80 சதவிகிதம் குறைந்துள்ளது - பியுஷ் கோயல்
    X

    மோடி ஆட்சிக்கு பின் இந்தியர்கள் பதுக்கிய கறுப்புப்பணம் 80 சதவிகிதம் குறைந்துள்ளது - பியுஷ் கோயல்

    மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் சுவிச்சர்லாந்து வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் பணம் 80 சதவிகிதம் குறைந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய நிதி மந்திரி பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். #MonsoonSession #PiyushGoyal #SwissBank
    புதுடெல்லி:

    இந்திய அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் சுவிச்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் அதிகளவில் பணம் பதுக்கல் செய்துள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் கருப்புப்பண விவகாரம் புயலாக வீசிய நிலையில், மோடி பல வாக்குறுதிகளுடன் ஆட்சியை பிடித்தார்.

    பிரதமரானதும் கருப்புப்பணத்தை மீட்கும் நடவடிக்கையாக தனி குழு அமைத்தார். ஆனால், அதன் பின்னர், அந்த வேலையில் எந்த முன்னேற்றமும் நடந்ததாக தெரியவில்லை. இந்நிலையில், சுவிசர்லாந்தில் உள்ள நேஷனல் வங்கி இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் குறித்தான தகவல்களை கடந்த மாதம் வெளியிட்டது. 

    கடந்த 2016-ம் ஆண்டை விட இந்தியர்களின் பணம் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். அதாவது, 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்குகள், இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,000 கோடிகளுக்கும் மேல் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ளனர்.

    கறுப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு கூறி வரும் நிலையில், இந்த தரவுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பலர் அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

    இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் இன்று பதிலளித்த மத்திய நிதி மந்திரி பியூஷ் கோயல், “2014ம் ஆண்டில் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததும், 2014 மற்றும் 2017க்கு இடையில் சுவிஸ் தேசிய வங்கியில் வைப்புத் தொகை 80% ஆக குறைந்துள்ளது” என கூறினார்.

    மேலும், சர்வதேச செட்டில்மெண்ட் வங்கி வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், 2016-ம் ஆண்டை விட கடந்த ஆண்டில் இந்தியர்கள் சுவிச்சர்லாந்தில் இந்தியர்கள் வைத்துள்ள சொத்துகள் 34.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. கடந்த மாதம் வெளியான அறிக்கை தவறாக தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். 
    Next Story
    ×