என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pity"
- இவருக்கு எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது.
- நீலாம்பாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு (வயது 60 )கூலி தொழிலாளி.இவர் கடந்த 20-ந் தேதி சொந்த வேலையின் காரணமாக தனது இருசக்கர வாகனத்தில் சின்ன சேலம் சென்று மீண்டும் நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு செல்ல கச்சிராயபாளையம் சாலையில் உள்ள ரைஸ் மில் அருகே சென்று கொண்டிருந்த போது இவருக்கு எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி யது. இதில் தங்கராசு தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த அடிப்பட்டு கோயமுத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் தங்கராசு பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி நீலாம்பாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பெரியசாமிக்கும் பூர்வீக விவசாய நிலத்தை பாகப்பிரிவினை செய்வதில் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது
- இந்த நிலையில் காட்டனந்தல் ஏரிக்கரையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி. இவருடைய கணவர் செல்லப்பா (வயது 50). இவருக்கும் இவருடைய தம்பி பெரியசாமிக்கும் பூர்வீக விவசாய நிலத்தை பாகப்பிரிவினை செய்வதில் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நிலத்தை பாகப்பிரிவினை செய்யாமல் இருப்பதால் செல்லப்பா சரியாக சாப்பிடாமல், மன உளைச்சலிலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காட்டனந்தல் ஏரிக்கரையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் செல்லப்பாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து செல்லப்பாவின் மனைவி கொளஞ்சி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜோதி அதே பகுதியில் உள்ள பண்ணை குட்டையில் இறங்கும்போது திடீரென்று கால் தவறி தண்ணீரில் விழுந்தார்.
- ஜோதி உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கத்தை சேர்ந்தவர் சுப்பையன். இவரது மனைவி ஜோதி (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள பண்ணை குட்டையில் இறங்கும்போது திடீரென்று கால் தவறி தண்ணீரில் விழுந்தார். இதில் தண்ணீர் முழ்கி ஜோதி பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த தூக்கணாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜோதி உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டீக்குடிக்க சென்ற போது பரிதாபம்
- செந்தில்குமாரை தாக்கி கத்தியால் குத்தினர்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலத்தில் இன்று அதிகாலையில் டீக்குடிக்க சென்ற கட்டிடத் தொழிலாளியை மர்மநபர்கள் வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சிவன் கோவில் வீதியில் வசிப்பவர் செந்தில்குமார் (வயது 45). திருமணமாகி மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கட்டிடப் பணியாளரான இவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அதே வீதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்ற போது, மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தி, செந்தில்குமாரை தாக்கி கத்தியால் குத்தினர். இதில் மார்பு, இடுப்பு, வயிறு பகுதியில் காயமடைந்த செந்தில்குமார் ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்தார். அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக யாரேனும் கொலை செய்ய திட்டமிட்டனரா, அல்லது தொழில் போட்டியால் கொலை முயற்சி நடைபெற்றதா அல்லது குடும்பத் தகராறா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சின்னசேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தரம் உயர்ந்த பின்பு மிக பிரமாண்டமாக மருத்துவமனையும், மருத்துவ வசதியும் வளர்ந்துள்ளது
- சிகிச்சையை முடித்துவிட்டு திரும்பும்போதும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.
திருப்பூர்:
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தாராபுரம் சாலையில் உள்ளது. மருத்துவக் கல்லுரி மருத்துவமனையாக தரம் உயர்ந்த பின்பு மிக பிரமாண்டமாக மருத்துவமனையும், மருத்துவ வசதியும் வளர்ந்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதிலும் இருந்து 2000க்கும் மேற்பட்டோர் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் அதே சமயம் மருத்துவமனைக்கு வெளியே உள்ள பேருந்து நிறுத்தம் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் காய்ந்தும் நனைந்தும் வருகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, நாள்தோறும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். வெள்ளியங்காடு, சந்திராபுரம், பழவஞ்சிபாளையம், வீரபாண்டி என பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் தாராபுரம் சாலைக்கு வந்து செல்ல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேருந்து நிறுத்தம் முக்கிய நிறுத்தமாக உள்ளது.
இந்த நிறுத்தத்துக்கு பேருந்துகளை நாடி வரும் பொதுமக்களுக்கு வெயில், மழை என்றாலும் அனைத்தையும் சகித்துக்கொள்ளும் துர்பாக்கிய நிலை தான் உள்ளது. மருத்துவக்கல்லூரிக்கு வருபவர்களில் பெரும்பாலனோர் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக சிகிச்சைக்கு வருபவர்கள் உட்பட உடல்நலம் குன்றியிருப்பவர்கள் இங்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் சிகிச்சைக்கு வரும்போதும், சிகிச்சையை முடித்துவிட்டு திரும்பும்போதும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். அதிலும் சமீபநாட்களாக கடந்த மே மாதத்தை போலவே வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால், பெரும் அவதியடைய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றனர்.
சந்திராபுரத்தை சேர்ந்த முத்துசாமி கூறும்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையான பிறகு, பல்வேறு தேவைகளுக்காக பேருந்துகளில் அரசு மருத்துவமனையை பலரும் நாடி வந்து செல்கின்றனர். அதேபோல் நோயாளிகள் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்கள் வந்து செல்வதற்கான உயரிய தரத்தில் பேருந்து நிறுத்தம் அமைத்து தர வேண்டும் என்பது எங்களின் பல ஆண்டு கால எதிர்பார்ப்பு. ஆனால் நெடுஞ்சாலைத்துறையும், மாநகராட்சியும் கண்டுகொள்ளாமல் இருப்பதால் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வெயிலில் வாடியும், மழையில் வதங்கியும் வருகின்றனர். வயதான பெண்கள் வெயிலால் சோர்ந்து மயக்க நிலைக்கு செல்லும் நிலை உள்ளது என்றனர்.
திருப்பூர் மாநகராட்சி 56-வது வார்டு கவுன்சிலர் காடேஸ்வரா தங்கராஜ் கூறும்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் பேருந்து நிறுத்தம் அமைப்பது தொடர்பாக தொடர்ந்து மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் இதுவரை நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் தொடங்கப்படவில்லை.
அதேபோல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் சாக்கடை நீர் செல்வதற்கும், மழைநீர் வடிகால் உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.
- அமுதவல்லி அதே பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
- அங்கிருந்து புதுவை ஜிப்மர் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் .
விழுப்புரம்:
மரக்காணம் அருகே உள்ள காட்டு கொள்ளை செய்யாங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணு. கூலித் தொழிலாளி. இவரது மனைவி அமுதவல்லி (வயது 55) இவர் நேற்று மதியம்அதே பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அந்த கிராமத்தில் ஒரே ஒரு ரேஷன் கடை மட்டுமே உள்ளது இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது இதன் காரணமாக அமுதவல்லி கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் வரிசையில் நின்று ள்ளார். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது .
இது பற்றி தகவல் அறிந்த அவரது மகன் ஆனந்த் தனது தாயை ரேஷன் கடையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மயக்கம் அதிகமானதால் அமுதவல்லி மோட்டார் சைக்களில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரது உறவினர்கள் அவரை புதுவை கனக செட்டி குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை அளித்து ள்ளனர். அங்கிருந்து புதுவை ஜிப்மர் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அங்கு சிகிச்சை பலனின்றி அமுதவல்லி பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அந்த நபரை கூச்சலிட்டு கூப்பிட்டு பார்த்தனர்.
- தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் மூழ்கியவரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் கெடிலம் ஆறு உள்ளது. இந்த கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் இன்று காலை ஒருவர் ஆற்றின் கரையோரமாக சைக்கிளை நிறுத்திவிட்டு திடீரென தண்ணீரில் இறங்கியுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் திடீரென அந்த நபர் மாயமானர். இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அந்த நபரை கூச்சலிட்டு கூப்பிட்டு பார்த்தனர். ஆனால் அவர் நீரிலிருந்து வெளியில் வரவில்லை.
இதனை தொடர்ந்து கடலூர் தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் மூழ்கியவரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். அந்த நபர் தண்ணீரில் மூழ்கி இறந்தது கிடந்தார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விசாரணையில் அவர் கடலூர் நவநீதம் நகரை சேர்ந்த தொழிலாளி பன்னீர்செல்வம் (வயது 40) என்பது தெரிய வந்தது. ஆற்றில் மூழ்கி பலியான பன்னீர்செல்வம் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சங்கராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த மஞ்சபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (55). விவசாயி. இந்நிலையில் வயலுக்கு சென்ற இவர் அங்கிருந்த கிணற்றின் அருகே படுத்து தூங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி, பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, தீயணைப்பு வீரர்கள் மூலம் சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீரமுத்து என்பவர் வியாபாரத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- தூக்கி வீசப்பட்டு வீரமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சாவூர்:
பட்டுக்கோட்டையை அடுத்த ராசியங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து (வயது60), நண்டு வியாபாரி.
இவர் நேற்று காலை 6 மணி அளவில் வியாபாரத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது துவரங்குறிச்சி-அதிராம்பட்டினம் மெயின் ரோட்டில் ராசியங்காடு கிளை ரோடு செல்லும் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த வீரமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமுத்து மீது மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கட்டிடத்தின் மாடியில் இன்டர்நெட் கேபிள் சரி செய்யும் பணியில் வாலிபர் ஒருவர் ஈடுபட்டு வந்தார்.
- கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் இன்று காலை ஒரு கட்டிடத்தின் மாடியில் இன்டர்நெட் கேபிள் சரி செய்யும் பணியில் வாலிபர் ஒருவர் ஈடுபட்டு வந்தார். அப்போது அந்த வாலிபர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி 30 அடி உயரம் கொண்ட மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வாலிபரை பரிசோதனை செய்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுபற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தியதில், கடலூர் முதுநகர் சேடப்பாளையம் பகுதியை சேர்ந்த விமல் (வயது 25) என்பதும் தனியார் நெட்வொர்க் கம்பெனியில் பணிபுரிந்து வந்ததாக தெரிய வந்தது. இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக ஏற்படுத்தியது.