கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு

இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.செல்லும் வழியிலேயே ருத்திர மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு
Published on

முத்துப்பேட்டை:

பட்டுக்கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ருத்திர மூர்த்தி (வயது 27).

பொன்னவராயன் கோட்டை கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி தனலட்சுமி (32) உள்பட பலரும் முத்துப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஏஜென்சியில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையில், நேற்று பணிகள் முடிந்து ருத்திர மூர்த்தி தனது மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்ப கிளம்பினார்.

அவருடன் தனலட்சுமியும் வருவதாக கூறியதையடுத்து இருவரும் பைக்கில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது, தம்பிக்கோட்டை பாமணி ஆற்றுப்பாலம் அருகே பஞ்சராகி நின்ற காரை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக எதிரே முத்துப்பேட்டை நோக்கி வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

உடனே, ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே ருத்திர மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், படுகாயமடைந்த தனலட்சுமி மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ருத்திர மூர்த்தி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்ண்டுகொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com