என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Man"
- சேலம் மாவட்டம் ஏற்காடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் இன்று காலை சுமார் 9 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள தனக்கு சொந்தமான கிணற்றை சுற்றி இருந்த முட்புதர்களை வெட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
- அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து முதல் உதவி செய்யப்பட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (55). இவர் இன்று காலை சுமார் 9 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள தனக்கு சொந்தமான கிணற்றை சுற்றி இருந்த முட்புதர்களை வெட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். கடந்த 2 நாட்களாக பெய்து வந்த மழையினால் கிணற்றை சுற்றி சேறும், சகதியுமாக இருந்துள்ளது.
இதனால் எதிர்பாராத விதமாக கால் வழுக்கி 20 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில் செல்வமணி தவறி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் செல்வகுமாரை உயிருடன் மீட்டனர். அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து முதல் உதவி செய்யப்பட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- ஒரு பெண் தண்ணீர் எடுப்பதை கவனித்தார் காளிதாசர்.
- காளிதாசர் தாயே எனக்கு தாகமாக இருக்கிறது.
ஒருநாள் காளிதாசர் வயல்வெளியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். சிறிதுதூரம் சென்ற பிறகு காளிதாசருக்கு தாகம் எடுத்தது. அப்போது சிறிது தூரத்தில் கிணற்றில் இருந்து ஒரு பெண் தண்ணீர் எடுப்பதை கவனித்தார் காளிதாசர். நேராக அந்த பெண் இருக்கும் இடத்தை நோக்கி சென்றார் காளிதாசர். அந்த பெண்ணை பார்த்து காளிதாசர் தாயே எனக்கு தாகமாக இருக்கிறது.
கொஞ்சம் பருகுவதற்கு தண்ணீர் தாருங்கள் என்று கேட்டார். அந்த பெண்ணும் நான் உங்களுக்கு தண்ணீர் தருகிறேன். ஆனால் அதற்குமுன்னால் நீங்கள் யார் என்று சொல்லுங்கள் என்றாள்.
உடனே காளிதாசர் அந்த பெண்ணிடம் நான் ஒரு பயணி என்று சொன்னார். இந்த உலகத்தில் இரண்டு பயணிகள் மட்டுமே இருக்கின்றனர். ஒருவர் சந்திரன் மற்றொருவர் சூரியன். இவர்கள் தான் இரவு-பகல் என்று பயணிப்பவர்கள் என்று அந்த பெண் கூறினார்.
உடனே காளிதாசர் சரி... நான் ஒரு விருந்தாளி என்று வைத்துக்கொள்ளுங்கள் என்றார். இந்த உலகத்தில் இரண்டு விருந்தினர்கள் தான் இருக்கிறார்கள். ஒன்று செல்வம், இன்னொன்று இளமை. இவர்கள் இரண்டுபேரும் தான் விருந்தினர்களாக வந்துவிட்டு உடனே சென்றுவிடுவார்கள்.
இந்த பதிலை கேட்டதும் காளிதாசருக்கு எரிச்சல் வந்தது. உடனே காளிதாசர் உனக்கு தெரியுமா பெண்ணே நான் மிகவும் பொறுமைசாளி என்று கூறினார். அந்த பெண் அந்த பொறுமைசாளியிலும் இரண்டு பேர்கள் மட்டும் தான் உள்ளனர். ஒன்று பூமி, இன்னொன்று மரம். எவர் மிதித்தாலும் தாங்குவது பூமி. யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக்கொண்டு காய்-கனிகளை கொடுப்பது மரம். இந்த இரண்டே பேர் தான் உலகத்தில் பொறுமைசாளிகள் என்று கூறினாள்.
இதைக்கேட்டதும் கோபம் அடைந்த காளிதாசர், நான் ஒரு பிடிவாதக்காரன் என்று அந்த பெண்ணிடம் கூறினார். அதற்கும் அந்த பெண் இந்த உலகத்திலேயே இரண்டு பிடிவாதக்காரர்கள் தான் உள்ளனர். ஒன்று முடி, மற்றொன்று நகம். இந்த இரண்டும் எத்தனைமுறை வேண்டாம், வேண்டாம் என்று வெட்டினாலும் பிடிவாதமாக வளர்ந்துகொண்டே இருக்கும் என்று சிரித்துக்கொண்டே கூறினாள்.
இதை கேட்டுக்கொண்டெ இருந்த காளிதாசருக்கு தாகம் ரொம்ப அதிகரித்தது. உடனே கோபமுடனும், எரிச்சலுடனும் அந்த பெண்ணை பார்த்து உனக்கு தெரியுமா நான் ஒரு முட்டாள் என்று கூறினார் காளிதாசர். உடனே அந்த பெண் இந்த உலகத்திலேயே இரண்டு முட்டாள்கள் தான் உள்ளனர். ஒருவர் இந்த நாட்டை ஆளும் அரசன். மற்றொருவர் அந்த அரசனுக்கு துதிபாடும் அமைச்சர் என்று கூறினாள்.
இதைக்கேட்டதும் காளிதாசருக்கு என்னசெய்வது என்று தெரியாமல் கையை கூப்பி வணங்கியதும். காளிதாசரை பார்த்து அந்த பெண் மகனே என்று சொன்னாள். அந்த குரல் கேட்டதும் காளிதாசர் எதுவும் புரியாமல் அவரை நிமிர்ந்து பார்த்தார். பார்த்ததும் மலைத்துபோய் நின்றார்.
சரஸ்வதி தேவி தான் அங்கு நின்றுகொண்டிருந்தார். சரஸ்வதிதேவியை பார்த்து காளிதாசர் கையைகூப்பு வணங்கினார். அதற்கு சரஸ்வதி தேவி காளிதாசா... எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கிறானோ, அவனே மனிதப்பிறப்பின் உச்சத்தை அடைகிறான். நீ மனிதனாகவே இரு என்று கூறிவிட்டு தண்ணீர் குடத்தை காளிதார் கையில் கொடுத்துவிட்டு சரஸ்வதி தேவி மறைந்து சென்றாள்.
இந்த கதையில் இருந்து நாம் என்ன தெரிந்துகொண்டோம் என்றாள் மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் மனிதனாக வாழ்வது எப்படி என்று கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதைத்தான் இந்த கதை நமக்கு உணர்த்தி உள்ளது.
- 45 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
- திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவிலில், முத்தூர் ரோட்டில் மின்சார வாரிய அலுவலகம் முன்பு நிழற்குடையில் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இது குறித்து வெள்ளகோவில் போலீசார் பெயர் விலாசம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மகுடஞ்சாவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை சிதைந்து, கை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார்.
- எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை சிதைந்து, கை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதைக் கண்ட அந்த பகுதி மக்கள், உடனடியாக இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். இறந்தவர் ரெயி லில் அடிப்பட்டு இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்தும், அந்த பகுதியில் காணாமல் போனவர்கள் பட்டியல் எடுத்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இயக்குனர் இகோர் இயக்கத்தில் ஹன்சிகா புதிய படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. 'சின்ன குஷ்பு' என்று அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், தற்காலிகமாக சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார்.

ஹன்சிகா
சிறிய இடைவெளிக்குப் பிறகு 'மஹா' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனம் பெற்ற இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து ஹன்சிகா தற்போது இயக்குனர் இகோர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

மேன் போஸ்டர்
'ஹன்சிகா 51' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிக்பாஸ் ஆரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மெட்ராஸ் ஸ்டுடியோஸ் மற்றும் அன்ஷு பிரபாகர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்த்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, 'மேன்' (Man) என இப்படத்திற்கு படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு முகமூடி உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Get ready for a thriller ride! #Man starring @ihansika coming shortly???@Aariarujunan @GhibranOfficial @SowmikaP @jananidurgaa @Ponparthiban @Manibk17 @Editorchandru1 pic.twitter.com/YOD2FyLBLB
— Think Music (@thinkmusicindia) March 8, 2023
- ஏற்காடு பெட்பெட் ரோடு பகுதியில் பூசாரி தோட்டம் என்னும் தனியார் தோட்டத்தில் ஆண் மான் ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது.
- மானை கைப்பற்றி ஏற்காடு சூழல் சுற்றுலா பூங்காவிற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைத்தார்.
ஏற்காடு:
ஏற்காடு வனப்பகுதியில் மான்கள். காட்டெருமை, குரங்கு போன்ற வனவிலங்குகள் இருக்கின்றன. தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் ஏற்காடு பெட்பெட் ரோடு பகுதியில் பூசாரி தோட்டம் என்னும் தனியார் தோட்டத்தில் ஆண் மான் ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது. இதை தோட்டத்தில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்கள் பார்த்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.இதை தொடர்ந்து வனவர் சக்தி வேல் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மானை கைப்பற்றி ஏற்காடு சூழல் சுற்றுலா பூங்காவிற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைத்தார்.
இது குறித்து ஏற்காடு வனக்காப்பாளர் பழனிவேல் கூறுகையில், இறந்த மானுக்கு சுமார் 4 வயது இருக்கும். மர்ம விலங்கு கடித்ததில் மான் இறந்துள்ளது. மர்ம விலங்கு வீடுகளில் வளர்க்கப்படும் நாயாக இருக்கலாம். எனி னும் கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தால் தான் அந்த மான் இறப்பு குறித்து தெரியவரும் என்றார்.
- 5 வருடங்களாக வே.கள்ளிபாளையத்தை சேர்ந்த சுரேந்தர் உதவியளராக பணிபுரிந்து வந்தார்.
- 10 தொழிலாளர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் 4 மாதங்களாக சம்பளம் செலுத்தியது தெரியவந்தது.
பல்லடம் :
பல்லடம் அருகேயுள்ள வே.கள்ளிபாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மில்லில் கடந்த 5 வருடங்களாக வே.கள்ளிபாளையத்தை சேர்ந்த சுரேந்தர் (வயது 25) உதவியளராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 13ந் தேதி மில்லில் ஆடிட்டிங் தணிக்கையின் போது வேலையை விட்டு நின்ற சுமார் 10 தொழிலாளர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் 4 மாதங்களாக சம்பளம் செலுத்தியது தெரியவந்தது. உதவியாளராக பணிபுரிந்து வந்த சுரேந்திரனிடம் விசாரிக்கையில், அவர் நிர்வாகத்தை ஏமாற்றி 4 மாதங்களாக ரூ.5 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது. இது குறித்து மில் நிர்வாக மேலாளர் மாரியப்பன் காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சுரேந்தரை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- நன்றி இல்லாத மனிதன் காற்று, தண்ணீர் இரண்டையும் தான் முதலில் மாசு படுத்துகிறான்.
- அமேசான் காட்டின் 22 சதவீதத்தை அழித்தவன் மனிதன்.
பல்லடம் :
பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளையின் 53 -வதுவான்மழை மாதாந்திர கருத்தரங்கம் வனம் அறக்கட்டளை அலுவலகமான வனாலயத்தில் நடைபெற்றது. சக்தி மசாலா உரிமையாளர்கள் துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். வனம் அறக்கட்டளை தலைவர் சின்னச்சாமி, செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், சிறு துளி அமைப்பு வனிதா மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனம் அறக்கட்டளை செயலாளர் சுந்தரராஜன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கவிஞர் வைரமுத்து பங்கேற்று பேசியதாவது:- இந்த பூமியில் மனிதன் உயிர் வாழத் தேவையான முக்கியமான இரண்டு காற்று, தண்ணீர். நன்றி இல்லாத மனிதன் அந்த இரண்டையும் தான் முதலில் மாசு படுத்துகிறான். அவர்களை காப்பது மரங்கள். இதை அறியாமல் உலகில் மனிதன் ஆயுதங்களை அதிகம் பிரயோகித்தது மரங்களிடம்தான். ஆம் இதுவரை அவன் அளித்தது எண்ணிலடங்கா மரங்கள். ஏன் அமேசான் காட்டின் 22 சதவீதத்தை அழித்தவன் மனிதன். வனம், சிறுதுளி போன்ற ஆர்வலர்களால் அவன் செய்த தவறுகள் சிறிதேனும் சரி செய்யப்படுகிறது.
நமது முப்பாட்டன் வள்ளுவன் முதல் குறளில் சொல்வது கடவுள் நம்பிக்கை. அதற்கு அடுத்ததாக தண்ணீரைப் பற்றிச் சொல்லி உள்ளார். ஏன்? தண்ணீர் என்பது அவ்வளவு முக்கியம். அந்தத் தண்ணீரின் தேவை இல்லை என்றால் நீ கடவுளைக் கூட வழிபட முடியாது .இந்த உலகம் 70 விழுக்காடு தண்ணீரால் சூழப்பட்டது. மீதி உள்ள பகுதியில்தான் மனிதன் குடித்தனம் நடத்தி வருகிறான். அவனுடன் புழு, பூச்சி, விலங்குகள், போன்ற உயிரினங்களும் வாழ்கின்றன. இனியாவது மாற்றத்தைப் பற்றி யோசி, மரத்தை நேசி.
இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்கம் சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு மாலை அணிவித்து கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நாகராஜ்,சூழல் செயற்பாட்டாளர் சந்திரசேகர் வெள்ளிங்கிரி, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, கள் இயக்கத் தலைவர் நல்லசாமி மற்றும் வனம் அமைப்பு நிர்வாகிகள்,உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- சென்னிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.
- இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெருந்துறை:
சென்னிமலை நாச்சி முத்து முதலியார் வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 65). இவர் சென்னிமலை பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவர் சென்னிமலையில் இருந்து பெருந்துறைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது பெருந்துறை சென்னிமலை ரோடு வேளாளர் தம்பிரான் கோவில் அருகே வந்த போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சக்திவேல் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- பவானி ஆற்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி பவானிசாகர் போலீசில் புகார் கொடுத்தார்.
- இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
பவானிசாகர் அண்ணா நகர் மீனவர் காலனி பகுதியில் உள்ள பவானி ஆறு வட்டபாறை பகுதியில் முடுக்கன் துறை கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி மற்றும் கிராம உதவியாளர் சுப்பிரமணி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பவானி ஆற்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி பவானிசாகர் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி முதியவர் பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற எந்த விபரமும் தெரியவில்லை.
இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.