search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றம்"

    • வேலை தொடர்பாக மன உளைச்சலில் இருந்துள்ளனர்.
    • நெட்டிசன்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    பெங்களூரு நகரில் பட்டப்பகலில் நபர் ஒருவரை நான்கைந்து பேர் சேர்ந்து கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட நபர் யார், அவர் ஏன் பொது வெளியில் அப்படியான தாக்குதலுக்கு ஆளானர் என்ற காரணங்கள் நெட்டிசன்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    அந்த வகையில், இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு ஆளான நபர் சுரேஷ் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். கடந்த ஓராண்டாக இவர் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே இவர் அதே நிறுவனத்தை சேர்ந்த உமாசங்கர் மற்றும் வினீஷ் என்ற இரு ஊழியர்களிடம் அதிவேகமாக வேலை செய்ய வலியுறுத்தி வந்துள்ளார்.

    இதன் காரணமாக உமாசங்கர் மற்றும் வினீஷ் இணைந்து வேலை தொடர்பாக மன உளைச்சலில் இருந்துள்ளனர். ஒருகட்டத்தில் கோபமுற்ற இவர்கள் மேலாளரை அடியாட்கள் வைத்து தாக்குதல் நடத்துவதென முடிவு எடுத்தனர். அப்படியாக இருவரும் இணைந்து மேலாளரை தாக்குவதற்கு அடியாட்களை தேர்வு செய்துள்ளனர்.

    இருவரின் வலியுறுத்தலின் பேரிலேயே சம்பவத்தன்று பொது வெளியில் மேலாளரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ அதே பகுதியில் வந்த கார் ஒன்றின் டேஷ் கேமராவில் பதிவானது. இந்த வீடியோ காட்சிகளே சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    வீடியோவை வைத்து விசாரணை நடத்திய போலீசார், தாக்குதல் நடத்திய ஐந்து பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • எதிர் வீட்டில் இருந்த பெண் துடைப்பக்கட்டையுடன் ஓடிவந்தார்.
    • குத்துச்சண்டை வீரர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்.

    அரியானா மாநிலத்தின் பிவானி மாவட்டத்தில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவின் படி, தெருவொன்றில் நின்று கொண்டிருந்த நபரை நோக்கி இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த இருவர் சரமாரியாக சுடும் பகீர் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

    தான் துப்பாக்கியால் சுடப்படுவதை உணர்ந்ததும், தெருவில் நின்று கொண்டிருந்த நபர் அருகில் இருந்த வீட்டிற்குள் ஓடிச் செல்கிறார். துப்பாக்கியால் சுடும் சத்தத்தை கேட்டதும் எதிர் வீட்டில் இருந்த பெண் கையில் துடைப்பக்கட்டையுடன் வேகமாக ஓடிவந்தார்.

    துப்பாக்கி வைத்திருந்தவர்களிடம் ஓடிவந்த பெண், அவர்களை நோக்கி துடைப்பக்கட்டையை வீசினார். இதை கண்ட மர்ம நபர்கள் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர். இந்த சம்பவத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட நபரின் பெயர் ஹரிகிருஷ்ணன் என்றும் இவர் குத்துச்சண்டை வீரர் ரவி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.

    இவருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் என்ற ரவுடிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஹரிகிருஷ்ணன் ஜாமின் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார். மர்ம நபர்கள் சுட்டதில் ஹரிகிருஷ்ணன் உடலில் நான்கு தோட்டாக்கள் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடத்திய இருவர் மற்றும் அவர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற இருவரையும் போலீசார் சி.சி.டி.வி. வீடியோ காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர். 

    • கொலை செய்த இளைஞர் இயல்பாக காணப்பட்டார்.
    • கொலை செய்த நபர் யார் என்றே எனக்கு தெரியாது.

    டெல்லியின் வெல்கம் ஜந்தா மஸ்தூர் காலனியில் சென்று கொண்டிருந்த நபரை வழிமறித்த 17 வயது இளைஞர் கொடூரமாக தாக்கி அவரை கத்தியால் குத்தி கொன்றார். 55 முறை கத்தியால் குத்து வாங்கிய நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    உயிரிழந்தவரிடம் இருந்து 350 ரூபாயை எடுத்துக் கொண்ட இளைஞர், அங்கு வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவை நோக்கி நடன அசைவுகளை செய்துகாட்டி, அங்கிருந்தவர்களையும் மிரட்டினார். இவரின் செயல்கள் அனைத்தும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும், போலீசார் சிறப்பு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

    மேலும் சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் உள்ளூர்வாசிகளிடம் இருந்து பெற்ற தகவல்களை கொண்டு கொலை செய்த இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர். தேடுதல் வேட்டையின் போது கொலை செய்த இளைஞர் இயல்பாக காணப்பட்டதோடு, இரவு உணவை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார்.

    "கைது செய்யும் போது நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அந்த இளைஞன் தான் செய்த தவறை எண்ணி வருத்தம் கொள்ளாமல், பதட்டமின்றி காணப்பட்டான். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகாமையிலேயே அந்த இளைஞனை பிடித்துவிட்டோம். மேலும் நாங்கள் அவனை பிடிக்கும்போது, இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்," என்று வடகிழக்கு பகுதிக்கான துணை காவல் ஆணையாளர் ஜாய் டிர்கி தெரிவித்தார்.

    கைது செய்யப்பட்ட இளைஞன் தான் கொலை செய்த நபர் யார் என்றே எனக்கு தெரியாது என்றும், பிரியாணி சாப்பிட பணம் இல்லாததால் கொலை செய்தேன் என்று தெரிவித்ததாக காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர். 

    • சட்டப்பணிகளின் நோக்கமானது அனைவருக்கும் சமநீதி பெற வேண்டும்.
    • யாராக இருந்தாலும் அவர் தரப்பு நியாயத்தை சொல்வதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கப் பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெசிந்தா மார்டின் வழிகாட்டுதல்படி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தஞ்சாவூர் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி இந்திராகாந்தி தலைமையில் தேசிய சட்டசேவைகள் தினத்தை முன்னிட்டு கல்லுரி மாணவர்களுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாமானது தஞ்சாவூர் பாரத் மற்றும் அறிவியல் கல்லுரியில் நடைபெற்றது.

    இம்முகாமில் சார்பு நீதிபதி இந்திரா காந்தி பேசியதாவது:-

    தேசிய சட்ட சேவைகள் தினம் என்பது தேசிய சட்ட சேவைகள் அதிகார சட்டம் அமலுக்கு வந்ததை நினைவு கூறும் வகையில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    சட்டப்பணிகளின் நோக்கமானது அனைவருக்கும் சமநீதி பெற வேண்டும். நாட்டில் உள்ள கடைக்கோடியில் இருப்பவருக்கும் சாமானிய மக்களும் கூட சமநீதி பெற வேண்டும் என்பதே இதன் குறிக்கோளாகும்.

    மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபர் யாராக இருந்தாலும் அவர் தரப்பு நியாயத்தை சொல்வதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கப் பட வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பபு சட்டத்தின் ஒரு சிறப்பம்சமாகும்.

    மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் வழக்க றிஞர்கள் பாலகிருஷ்ணன் ,சக்திவேல் , கல்லூரி முதல்வர் குமார், பேராசியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இம்முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு ழுவின் நிர்வாக அலுவலர்ச ந்தோஷ்குமார் மற்றும் சட்டத்தன்னா ர்வலர்கள் செய்திருந்தனர்.

    • பல்வேறு அரசியல் அமைப்பினர், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்
    • சாதாரணமாக நடமாடும் நாய், பூனை, எலிகளை ஆஸ்பத்திரி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும்

    புதுச்சேரி:

    காரைக்கால் நகரின் மையப் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரி கடந்த பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வருவதாக பல்வேறு அரசியல் அமைப்பினர், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். சாதாரண ஜுரம், விபத்து என சென்றால்கூட, அண்டை மாநிலங்களுக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்யும் அவல நிலை உள்ளது. இந்நிலையில், அண்மையில் அரசு ஆஸ்பத்திரியின் உள்ள லிப்ட் உடைந்த நிலையில் உள்ளது.

    கடந்த சில நாட்களாக நகரின் பல இடங்களில் சுற்றித்திரிந்த நாய்களின் கூட்டம், ஆஸ்பத்திரியில் உள்ளே குறிப்பாக பிரசவ பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் சர்வ சாதாரணமாக சுற்றித் திரிவதால், நோயாளிகள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் பெருச்சாளி மற்றும் பூனைகள் பாதுகாக்கப்பட்ட அறுவை சிகிச்சை கூடம், மருந்தகம், கேண்டின் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பகலில் கூட நடமாடுவதால் நோயாளிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே ஆஸ்பத்திரியில் சர்வ சாதாரணமாக நடமாடும் நாய், பூனை, எலிகளை ஆஸ்பத்திரி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • திரெளபதி அம்மன் கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறுவது உறுதியான தகவல் கிடையாது.
    • குலதெய்வ வழிபாடு என்பது ஜாதிக்கு அப்பாற்பட்டதாகும்.

    திருப்பூர் :

    இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜூன் சம்பத் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- கீழ்பவானி பாசன விவசாயிகள் கடந்த 4 நாள்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களது கோரிக்கை நியாயமானது. எனவே நீா்பாசனத் துறை அமைச்சா், மாவட்ட கலெக்டர் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

    விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறுவது உறுதியான தகவல் கிடையாது. அப்படியே இருந்தாலும் குலதெய்வக் கோவில்களை பூட்டுவது சரியானது அல்ல. பல இடங்களில் பட்டியலின மக்கள் திரெளபதி அம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனா். எனவே இந்த விஷயத்தில் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வுகாண வேண்டும்.

    அதேபோல கரூா் மாவட்டத்திலும் ஒரு கோவிலைப் பூட்டியுள்ளனா். குலதெய்வக் கோவில்களை பூட்டுவதை மிகப்பெரிய தெய்வ குற்றமாக நாங்கள் கருதுகிறோம். குலதெய்வ வழிபாடு என்பது ஜாதிக்கு அப்பாற்பட்டதாகும். எனவே குலதெய்வக் கோவில்களை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக அரசு நிறுத்த வேண்டும் என்றாா்.

    இதையடுத்து, சக்தி திரையரங்கம் அருகில் இந்து மக்கள் கட்சி சாா்பில் சனாதன இந்து தா்ம எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சமூக செயற்பாட்டாளா் நடிகை கஸ்தூரி, இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    • சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டதில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் சாராய கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    மேலும் பல்வேறு மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள வேட்டைக்காரனிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பூமிக்கு அடியில், பேரல்களில் 200 லிட்டர் சாராய ஊரல்கள் புதைத்து வைக்கப்ப ட்டிருந்தை கண்டு பிடித்தனர்.

    பின்னர் 200 லிட்டர் சாராய ஊரலை தரையில் கொட்டி அழித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கண்டிய ன்காடு பகுதியை சேர்ந்த குழந்தை வேல் என்பவரை கைது செய்தனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு ஹர்ஷ் சிங் சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    இதுபோன்ற குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும், மேலும் குற்றவாளிகள் அதிரடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
    • சகோதரி குழந்தைகளின் காதணி விழா எதிர்ப்பை மீறி செல்ல முயன்றதால் வெறிச்செயல்

    திருச்சி,

    திருச்சியை அடுத்த திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள இனாம்குளத்தூர் காவல்காரர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 56). கோவில் பூசாரியான இவருக்கு பெரியண்ணன் (36) என்ற மகனும், சுமதி, லட்சுமி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்து வெளியூர்களில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரியண்ணனுக்கும் அவரின் இரண்டு சகோதரிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் சகோதரிகளுடன் அவர் பேசுவதை நிறுத்திக்கொண்டார். இதற்கிடையே வீரப்பூரில் வசிக்கும் லட்சுமி தனது இரு குழந்தைகளுக்கு இன்று (புதன்கிழமை) காதணி விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்பேரக் குழந்தைகளின் இந்த காதணி விழாவுக்கு வேலாயுதம் தனது மனைவியுடன் செல்ல தயாரானார். இதை அறிந்த பெரியண்ணன் தனது தந்தையிடம் காதணி விழாவுக்கு நீங்கள் செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மகனின் எதிர்ப்பை அவர் கண்டு கொள்ளவில்லை. இதனால் குடிபோதையில் இருந்த பெரியண்ணன் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து வேலாயுதத்தின் முதுகு மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக வெட்டினார். இதில் அவரது குடல் சரிந்து விழுந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். பின்னர் பெரியண்ணன் அங்கிருந்து தப்பி ஓடினார். தாய் ராசம்மாள் மற்றும் உறவினர்கள் வேலாயுதத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இனாம்குளத்தூர் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பெரிய ண்ணனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டியுள்ளார்.
    • முதல்வர் பல்வேறு திட்டங்களை நிறுத்தி விட்டார்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியத்தில் உள்ள கச்சை கட்டியில் புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். இந்த முகாமை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தமிழக மக்களுக்கு விடியல் தருவோம் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் தாலிக்கு தங்கம் திட்டம், கறவை மாடுகள் ஆடுகள் வழங்கும் திட்டம், பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறுத்திவிட்டார்.

    தமிழகத்தில் கனிம வள கொள்ளை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சட்ட மன்றத்தில் எடப்பாடியார் தொடர்ந்து வலியுறுத்தினார்.

    தூத்துக்குடி மாவட்ட த்தில் மணல் திருட்டு குறித்து கிராம நிர்வாக அதிகாரி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் பட்டப்பகலில் அவரை அவரது அலுவலகத்தில் வெட்டி கொலை செய்து ள்ளனர். இதற்கு ரூ.1 கோடியை முதல்-அமைச்சர் ஸ்டாலின் கொடுத்துள்ளார். பணம் கொடுத்தால் போதுமா? உயிர் திரும்பி வருமா? அவர் என்ன பாவம் செய்தார்?.

    இன்றைக்கு அரசு ஊழியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அப்படி இருக்கும்போது சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். சரவணன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • சமூக வலைதளங்களை பாதுகாப்பான முறையில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்.
    • குற்றங்களை தடுக்கும் வகையில் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குனர் சஞ்சய் குமார், போலீஸ் சூப்பிரண்டு தேவராணி ஆகியோர் உத்தரவுப்படி தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் வழிகாட்டுதல் படி தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், விழிப்புணர்வுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதற்கு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக கல்லூரி முதல்வர் ரோசி கலந்து கொண்டார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.

    பல்கலைக்கழக அசோசியேட் டீன் சங்கர் ஸ்ரீராம், மாவட்ட அனைத்து வங்கிகளின் ஒருங்கிணைப்பு மேலாளர் பிரதீப் கண்ணன், சரபோஜி கல்லூரியின் கணினி துறை தலைவர் மோகன் குமார், சைபர் பாதுகாப்பு வல்லுநர் ஹரிஹரன் ஆகியோர் சைபர் கிரைம் விழிப்புணர்வு குறித்து பேசினர்.

    இந்த கருத்தரங்கில், அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் குறித்தும், சமூக வலைதளங்களை பாதுகாப்பான முறையில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும், வங்கி கணக்கு விபரங்கள், ஏ.டி.எம் கார்டு குறித்த விவரங்கள், ஓ.டி.பி ஆகியவற்றை பெற்றுக்கொண்டு வங்கி கணக்கில் உள்ள பணத்தினை எடுத்து வரும் குற்றமானது அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அவ்வாறான குற்றங்களை தடுக்கும் வகையில் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் அரசு மற்றும் தனியார் வங்கி மேலாளர்கள், அலுவலர்கள், பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள், மாணவ -மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • விலைவாசி உயர்வுக்கு காரணம் தி.மு.க. அரசு மீது செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டினார்.
    • பொதுமக்கள் விலை உயர்வு காரணமாக கடும் துன்பத்துக்கு ஆளாகி யுள்ளனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார். இதில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தாலிக்கு தங்கம், மாண வர்களுக்கு மடிக்கணினி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி தந்தார். ஆனால் இப்போ தைய தி.மு.க. அரசு விலை வாசியை உயர்த்தியது தான் சாதனையாக உள்ளது.

    மு.க.ஸ்டாலின் தற்போது அவரது மகனுக்கு அமைச்சராக முடிசூட்டி யுள்ளார். பொதுமக்கள் விலை உயர்வு காரணமாக கடும் துன்பத்துக்கு ஆளாகி யுள்ளனர். இதற்கு காரணம் தி.மு.க. அரசு தான்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    ஆர்ப்பாட்டத்தில்.ஒன்றிய செயலாளர் செல்வ மணி, நகரசெயலாளர் ராஜா மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன், கூட்டுறவு சங்க தலைவர் சங்கர்ராமநாதன், நாலு கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், ஒன்றிய, மாவட்ட, நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடக்கூடாது.
    • 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை உபயோகப்படுத்தக் கூடாது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை கடைத்தெருவில் திட்டச்சேரி காவல்துறை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடக்கூடாது, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை உபயோகப்படுத்தக் கூடாது, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், சிறுவர்கள் புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு செயல்கள் குறித்து திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ராமகிருஷ்ணன் பேசினார்.

    இதில் காவலர் நற்குணம் மற்றும் போலீசார், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×