search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Biriyani"

    • கொலை செய்த இளைஞர் இயல்பாக காணப்பட்டார்.
    • கொலை செய்த நபர் யார் என்றே எனக்கு தெரியாது.

    டெல்லியின் வெல்கம் ஜந்தா மஸ்தூர் காலனியில் சென்று கொண்டிருந்த நபரை வழிமறித்த 17 வயது இளைஞர் கொடூரமாக தாக்கி அவரை கத்தியால் குத்தி கொன்றார். 55 முறை கத்தியால் குத்து வாங்கிய நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    உயிரிழந்தவரிடம் இருந்து 350 ரூபாயை எடுத்துக் கொண்ட இளைஞர், அங்கு வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவை நோக்கி நடன அசைவுகளை செய்துகாட்டி, அங்கிருந்தவர்களையும் மிரட்டினார். இவரின் செயல்கள் அனைத்தும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும், போலீசார் சிறப்பு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

    மேலும் சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் உள்ளூர்வாசிகளிடம் இருந்து பெற்ற தகவல்களை கொண்டு கொலை செய்த இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர். தேடுதல் வேட்டையின் போது கொலை செய்த இளைஞர் இயல்பாக காணப்பட்டதோடு, இரவு உணவை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார்.

    "கைது செய்யும் போது நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அந்த இளைஞன் தான் செய்த தவறை எண்ணி வருத்தம் கொள்ளாமல், பதட்டமின்றி காணப்பட்டான். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகாமையிலேயே அந்த இளைஞனை பிடித்துவிட்டோம். மேலும் நாங்கள் அவனை பிடிக்கும்போது, இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்," என்று வடகிழக்கு பகுதிக்கான துணை காவல் ஆணையாளர் ஜாய் டிர்கி தெரிவித்தார்.

    கைது செய்யப்பட்ட இளைஞன் தான் கொலை செய்த நபர் யார் என்றே எனக்கு தெரியாது என்றும், பிரியாணி சாப்பிட பணம் இல்லாததால் கொலை செய்தேன் என்று தெரிவித்ததாக காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர். 

    • பிரியாணி குறித்து வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வைரலானதால் நேரமாக நேரமாக கூட்டம் அதிகரித்தது.
    • ஒரு சிலர் ஓட்டலுக்குள் முண்டியடித்து சென்று ஒரு ரூபாய் நாணயத்தை கொடுக்காமலேயே கடைக்காரரிடம் இருந்து பிரியாணியை பறித்து சென்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், கரீம் நகரில் புதிய ஓட்டல் நேற்று திறக்கப்பட்டது.

    திறப்பு விழாவை முன்னிட்டு மதியம் 2-30 மணிக்கு மேல் ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என்றும் பிரியாணி வாங்க வருபவர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என ஓட்டல் நிர்வாகம் விளம்பரம் செய்து இருந்தது.

    மேலும் ஒரு நபருக்கு ஒரு பிரியாணி மட்டுமே வழங்கப்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தன. விளம்பரத்தை கண்ட சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பிரியாணியை வாங்கி சாப்பிட்டே தீர வேண்டும் என எண்ணினர்.

    சுட்டெரிக்கும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஓட்டல் முன்பு உள்ள சாலையில் ஏராளமானோர் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    ஒரு ரூபாய் பிரியாணி குறித்து வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வைரலானதால் நேரமாக நேரமாக கூட்டம் அதிகரித்தது.

    பிரியாணி வாங்க வாகனங்களில் வந்தவர்கள் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் முக்கிய சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பிரியாணி வழங்க தொடங்கியபோது எப்படியும் பிரியாணி வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் வாலிபர்கள் ஒருவருடன் ஒருவர் முண்டியடித்து செல்ல முயன்றனர். அப்போது அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    ஒரு சிலர் ஓட்டலுக்குள் முண்டியடித்து சென்று ஒரு ரூபாய் நாணயத்தை கொடுக்காமலேயே கடைக்காரரிடம் இருந்து பிரியாணியை பறித்து சென்றனர்.

    நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போகவே ஓட்டல் உரிமையாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.

    போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் போலீசார் ஓட்டலை தற்காலிகமாக இழுத்து மூடினர்.

    இதையடுத்து வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

    • நாடு முழுவதும் ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணி ஆர்டர் செய்யப்படுவதாக ஸ்விகி தெரிவித்துள்ளது.
    • அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட 10 ஸ்நாக்ஸ் பட்டியலில், 4 மில்லியன் ஆர்டர்களுடன் சமோசா முதலிடத்தில் உள்ளது.

    பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி, ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் அதிகம் விரும்பி ஆர்டர் செய்த உணவு வகைகளை பட்டியலிட்டு வெளியிடுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலை ஸ்விகி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்து சாப்பிட்ட உணவுகளில் பிரியாணி முதலிடத்தில் இருக்கிறது. ஸ்விகி பட்டியலில் பிரியாணி 7வது ஆண்டாக முதலிடத்தில் இருக்கிறது.

    ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணி (ஒரு நொடிக்கு 2.28 பிரியாணி) நாடு முழுவதும் ஆர்டர் செய்யப்படுவதாக ஸ்விகி தெரிவித்துள்ளது. அதிகம் ஆர்டர் செய்த உணவுகளில் சிக்கன் பிரியாணியைத் தொடர்ந்து, மசாலா தோசை, சிக்கன் ப்ரைடு ரைஸ், பனீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் பிரைட் ரைஸ், வெஜ் பிரியாணி, தந்தூரி சிக்கன் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதன்மூலம் இந்தியர்களிடையே பிரியாணிக்கு உள்ள மவுசு குறையவில்லை என்பது தெரிகிறது.

    அதேபோல் வெளிநாட்டு உணவுகளை வாங்கி உண்பதிலும் இந்தியர்கள் அதிக ஆர்வம் கொண்டிருப்பதை இந்த பட்டியல் காட்டுகிறது. இத்தாலிய பாஸ்தா, பீட்சா, மெக்சிகன் பவுல், ஸ்பைசி ராமென் மற்றும் சுஷி போன்ற உணவுகளை அதிக அளவில் ஆர்டர் செய்ததாக ஸ்விகி கூறியிருக்கிறது. இத்தாலிய உணவான ரவியோலி மற்றும் கொரிய உணவான பிபிம்பாப் ஆகியவை பிரபலமான வெளிநாட்டு உணவு வகைகளையும் நிறைய ஆர்டர் செய்துள்ளனர்.

    இந்த ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட 10 ஸ்நாக்ஸ் பட்டியலில் மொத்தம் 4 மில்லியன் ஆர்டர்களுடன் சமோசா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து பாப்கார்ன், பாவ் பாஜி, பிரஞ்சு ஃப்ரைஸ், கார்லிக் பிரட்ஸ்டிக்ஸ், ஹாட் விங்ஸ், டாக்கோ, கிளாசிக் ஸ்டஃப்டு கார்லிக் பிரட் மற்றும் மிங்கிள்ஸ் பக்கெட் ஆகியவை உள்ளன. 

    வந்தவாசி அருகே பிரிட்ஜில் வைத்திருந்த பிரியாணியை சாப்பிட்ட கர்ப்பிணி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மேல்பாதிரி கிராமத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவரது மனைவி உமா (வயது 30. இருவருக்கும் திருமணம் ஆகி 4 ஆண்டு ஆகிறது. ராகுல் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது.

    உமா தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் பகல் உமா பிரியாணி செய்து சாப்பிட்டார். மீதமான பிரியாணியை பிரிட்ஜில் வைத்து அன்று இரவு சாப்பிட்டுள்ளார்.

    சிறிது நேரத்தில் உமாவுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. வந்தவாசி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உமா பரிதாபமாக இறந்தார். வந்தவாசி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தினார்.

    திருமணமாகி 4 ஆண்டே ஆவதால் உமா மரணம் குறித்து செய்யாறு சப்-கலெக்டர் அன்னம்மாள் விசாரணை நடத்தி வருகிறார்.

    பிரியாணி சாப்பிட்டதால் தான் உமா இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதியம் எப்போதும் சாம்பார், குழம்பு, ரசம், பொரியல் என்ற செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் இன்று மதியம் தேங்காய் பால் பட்டாணி பிரியாணி செய்து சுவையுங்கள்.
    தேவையான பொருட்கள்:

    பாசுமதி அரிசி - 1 கப்
    பட்டாணி - 1/2 கப்
    வெங்காயம் - 1
    கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
    தண்ணீர் - 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு

    அரைப்பதற்கு...

    புதினா - 1/2 கப்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 5
    வரமிளகாய் - 2
    துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி - 1/2 இன்ச்
    பூண்டு - 10 பற்கள்

    தாளிப்பதற்கு...

    நெய் - 1 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    பிரியாணி இலை - 1
    பட்டை - 1/4 இன்ச்
    கிராம்பு - 2 ஏலக்காய் - 1



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும்.

    பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கிளறி விட வேண்டும்.

    பின்பு அதில் பட்டாணி, தேவையான அளவு உப்பு மற்றும் பாசுமதி அரிசி சேர்த்து கிளறி, தேங்காய் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, மீண்டும் கிளறி, தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கவும்.

    விசில் போனதும் குக்கரை திறந்தால், தேங்காய் பால் பட்டாணி பிரியாணி ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மேற்குவங்க மாநிலத்தில் ஒரு பிளேட் பிரியாணியை 190 ரூபாய்க்கு விற்பனை செய்த உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கொல்கத்தா:

    மேற்குவங்க மாநிலத்தின் 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு பேர் உணவு சாப்பிட சென்றனர். அவர்கள் நான்கு பேரும் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.

    சாப்பிட்டு முடித்ததும் அவர்கள் ஆர்டருக்கான பில்லை கொடுத்துள்ளனர். அதில் ஒரு பிளேட் பிரியாணியின் விலை 190 ரூபாய் என போடப்பட்டிருந்து. இதையடுத்து அவர்கள் நால்வரும் உணவக உரிமையாளர் சஞ்சய் மொண்டால் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

    வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவர் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சஞ்சயை சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையில் தொடர்புடைய நான்கு பேரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், இந்த கொலைக்கு பிரியாணியின் விலை காரணமாக இருக்காது என சந்தேகிப்பதாக கூறியுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். #tamilnews
    ×