பிரியாணி சாப்பிடத்தான் கொன்னேன்.. இளைஞர் வாக்குமூலத்தால் போலீஸ் அதிர்ச்சி

கொலை செய்த இளைஞர் இயல்பாக காணப்பட்டார். கொலை செய்த நபர் யார் என்றே எனக்கு தெரியாது.
பிரியாணி சாப்பிடத்தான் கொன்னேன்.. இளைஞர் வாக்குமூலத்தால் போலீஸ் அதிர்ச்சி
Published on

டெல்லியின் வெல்கம் ஜந்தா மஸ்தூர் காலனியில் சென்று கொண்டிருந்த நபரை வழிமறித்த 17 வயது இளைஞர் கொடூரமாக தாக்கி அவரை கத்தியால் குத்தி கொன்றார். 55 முறை கத்தியால் குத்து வாங்கிய நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்தவரிடம் இருந்து 350 ரூபாயை எடுத்துக் கொண்ட இளைஞர், அங்கு வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவை நோக்கி நடன அசைவுகளை செய்துகாட்டி, அங்கிருந்தவர்களையும் மிரட்டினார். இவரின் செயல்கள் அனைத்தும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும், போலீசார் சிறப்பு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

மேலும் சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் உள்ளூர்வாசிகளிடம் இருந்து பெற்ற தகவல்களை கொண்டு கொலை செய்த இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர். தேடுதல் வேட்டையின் போது கொலை செய்த இளைஞர் இயல்பாக காணப்பட்டதோடு, இரவு உணவை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார்.

"கைது செய்யும் போது நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அந்த இளைஞன் தான் செய்த தவறை எண்ணி வருத்தம் கொள்ளாமல், பதட்டமின்றி காணப்பட்டான். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகாமையிலேயே அந்த இளைஞனை பிடித்துவிட்டோம். மேலும் நாங்கள் அவனை பிடிக்கும்போது, இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்," என்று வடகிழக்கு பகுதிக்கான துணை காவல் ஆணையாளர் ஜாய் டிர்கி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் தான் கொலை செய்த நபர் யார் என்றே எனக்கு தெரியாது என்றும், பிரியாணி சாப்பிட பணம் இல்லாததால் கொலை செய்தேன் என்று தெரிவித்ததாக காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com