என் மலர்
நீங்கள் தேடியது "Crime"
- குருகிராமில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கொலையில் அவரை போலீசார் தேடி வந்தனர்.
- இருவரும் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளனர்.
இந்தியாவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடு தப்பி சென்ற ரவுடி கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியானாவை சேர்ந்த வெங்கடேஷ் கார்க் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. குருகிராமில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கொலையில் அவரை போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையே வெங்கடேஷ் கார்க் ஜார்ஜியாவுக்கு தப்பி சென்றார். இந்த நிலையில் அரியானா போலீசார் அதிகாரிகள் உள்பட பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் ஜார்ஜியாவில் பதுங்கியிருந்த வெங்கடேஷ் கார்க்கை கைது செய்தனர்.
அதேபோல் பானு ராணா என்பவரை அமெரிக்காவில் கைது செய்துள்ளார். இவர் பிரபல லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையவர். இருவரும் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளனர்.
- ஹண்டிங்டன் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டு சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர்.
- கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்துக்கு இங்கிலாந்து பிரதமர் கெர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இங்கிலாந்தில் டான்காஸ் டரில் இருந்து லண்டன் கிங்ஸ் கிராஸ் பகுதிக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் கேம்பிரிட்ஜ்ஷையர் அருகே ஹண்டிங்டன் பகுதியில் வந்தபோது மர்ம நபர்கள் பயணிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார்கள். இதனால் பயணிகள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். சிலர் கழிவறைக்குள் சென்று பதுங்கி கொண்டனர்.
இதுகுறித்து பயணிகள் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ஹண்டிங்டன் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டு சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது ரெயிலில் இருந்து பயணிகள் பயத்துடன் அவசர அவசரமாக வெளியேறினார்கள்.
இந்த கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 9 பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பயங்கரவாத எதிர்ப்பு போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே தாக்குதல் நடத்திய நபர்களில் ஒருவர் பெரிய கத்தியை வைத்து இருந்தார் என்றும் எங்கே பார்த்தாலும் ரத்தம் இருந்தது என்றும் சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் அதிர்ச்சியுடன் தெரிவித்தார்.
கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்துக்கு இங்கிலாந்து பிரதமர் கெர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்து உள்ளார். "ஹண்டிங்டன் அருகே ரெயிலில் நடந்த தாக்குதல் சம்பவம் பயங்கரமானது மற்றும் ஆழ்ந்த கவலைக்குரியது. பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன.
அவசர நடவடிக்கைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் போலீசாரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்" என்றார்.
- குற்ற செயல்களில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
- அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோவாகின் கவுண்டி பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தில்ப்ரீத் சிங், அர்ஷ்ப்ரீத் சிங், அம்ரித்பால் சிங், விஷால், பவிட்டர் சிங், குர்தாஜ் சிங், மன்ப்ரீத் ரந்தாவா,சரப்ஜித் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இக்கும்பல் சித்ரவதை, சதித்திட்டம், சாட்சிகளை மிரட்டுவது உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பவிட்டர் சிங் படாலா, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்புடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. அவரை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாககூறப்படும் குற்றச்சாட்டில் இந்திய தேசிய புலனாய்வு முகமை தேடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடக்கூடாது.
- 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை உபயோகப்படுத்தக் கூடாது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை கடைத்தெருவில் திட்டச்சேரி காவல்துறை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடக்கூடாது, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை உபயோகப்படுத்தக் கூடாது, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், சிறுவர்கள் புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு செயல்கள் குறித்து திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ராமகிருஷ்ணன் பேசினார்.
இதில் காவலர் நற்குணம் மற்றும் போலீசார், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- குற்ற செயல்கள் நடைபெறும் போது துணிவுடன் எதிர்கொண்டு அதனை தடுத்திடவும் வேண்டும்.
- பெண்கள் வளரும் போதே சுய மற்றும் அறிவார்ந்த செயலாக முடிவு எடுக்கக்கூடிய மன தைரியத்தையும் கொண்டவர்களாக சமுதாயத்தில் விளங்க வேண்டும்.
அவிநாசி :
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, உதவி கலெக்டர் (பயிற்சி) பல்லவி வர்மா தலைமை வகித்து பேசியதாவது:-பெண் வன்கொடுமை சட்டத்தை பெண்கள் தெரிந்து கொள்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆண்களும் தெரிந்து கொள்ள வேண்டும். வன்கொடுமை சட்டங்களில் தண்டிக்கப்படும் ஆண்கள் தனது வாழ் நாளை இழந்து குடும்பத்தை இழந்து நிர்கதியாக நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது.
பெண்கள் வளரும் போதே சுய மற்றும் அறிவார்ந்த செயலாக முடிவு எடுக்கக்கூடிய மன தைரியத்தையும் கொண்டவர்களாக சமுதாயத்தில் விளங்க வேண்டும்.மேலும் குற்ற செயல்கள் நடைபெறும் போது துணிவுடன் எதிர்கொண்டு அதனை தடுத்திடவும் புகார் அளிக்க தயங்காமல் அரசு அறிவித்திருக்கும் புகார் எண்களை தொடர்பு கொண்டு தெரிவிப்பதன் மூலம் பெண்கள் சமுதாயம் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கோவை எம்.பி., நடராஜன், திட்ட பணிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.
- இப்பகுதிகளில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன.
திருப்பூர் :
பல்லடம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவை எம்.பி., நடராஜன், திட்ட பணிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார். அதன்படி பல்லடம் ஒன்றியம், கரைப்புதூர் ஊராட்சியில் நடந்த ஆய்வு கூட்டத்தில், கரைப்புதூர், கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
அப்போது பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாநகராட்சியை ஒட்டியுள்ள கரைப்புதூர், கணபதிபாளையம் ஊராட்சிகளை சார்ந்து ஏறத்தாழ ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தினசரி வேலை நிமித்தமாக வந்து செல்பவரின் எண்ணிக்கையும் அதிகம்.
தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதிகளில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன.புகார் அளித்து போலீசார் பல்லடத்தில் இருந்து வருவதற்குள் சம்பவங்களின் போக்கு மாறிவிடும். இப்பகுதியில், சமூக விரோத செயல்கள் நடக்காத நாட்களே கிடையாது என்று கூறலாம்.இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. குற்ற சம்பவங்களை தடுக்க போலீசாரின் கூடுதல் கண்காணிப்பு அவசியமாகிறது.எனவே, அருள்புரத்தை மையமாக கொண்டு கூடுதல் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். பொதுமக்கள் அமைதியுடன், பாதுகாப்புடன் வசிக்கஇக்கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும்.இவ்வாறு அதில் அவர்கள் கூறினர்.மனுவை பெற்று கொண்ட எம்.பி., நடராஜன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
- விலைவாசி உயர்வுக்கு காரணம் தி.மு.க. அரசு மீது செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டினார்.
- பொதுமக்கள் விலை உயர்வு காரணமாக கடும் துன்பத்துக்கு ஆளாகி யுள்ளனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார். இதில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
தாலிக்கு தங்கம், மாண வர்களுக்கு மடிக்கணினி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி தந்தார். ஆனால் இப்போ தைய தி.மு.க. அரசு விலை வாசியை உயர்த்தியது தான் சாதனையாக உள்ளது.
மு.க.ஸ்டாலின் தற்போது அவரது மகனுக்கு அமைச்சராக முடிசூட்டி யுள்ளார். பொதுமக்கள் விலை உயர்வு காரணமாக கடும் துன்பத்துக்கு ஆளாகி யுள்ளனர். இதற்கு காரணம் தி.மு.க. அரசு தான்.
இவ்வாறு அவர் பேசி னார்.
ஆர்ப்பாட்டத்தில்.ஒன்றிய செயலாளர் செல்வ மணி, நகரசெயலாளர் ராஜா மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன், கூட்டுறவு சங்க தலைவர் சங்கர்ராமநாதன், நாலு கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், ஒன்றிய, மாவட்ட, நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன.
- காவல் நிலையங்களில் போதுமான அளவு காவலா்களை பணியில் அமா்த்தி குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் டி.சரவணன் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: - திருப்பூா் மாநகரில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் போதுமான அளவு காவலா்கள் இல்லாததும் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு ஒரு காரணமாகும். ஆகவே, மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் போதுமான அளவு காவலா்களை பணியில் அமா்த்தி குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மதுரை மாநகர பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பேன்.
- புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் கமிஷனர் உறுதியளித்துள்ளார்.
மதுரை
மதுரை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து புதிய போலீஸ் கமிஷனராக நரேந்திரன் நாயர் நியமிக்கப் பட்டுள்ளார். அவர் இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவல கத்தில் பொறுப்பேற்றுக் கொண் டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து நரேந்திரன் நாயர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
பேசும் போது, மதுரை மாநகரில் மக்கள் பணியில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்று வேன், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல், மற்றும் சித்திரை திரு விழாவை கொண்டாட மாநகர காவல்துறை பாதுகாப்பு அளிக்கும், மாநகரில் ரவுடிசம், கஞ்சா குற்றச்சம்பவங்களை முழுமையாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஏற்கனவே மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தால் செயல்படுத்தபடும் அனைத்து திட்டங்களும் மேம்படுத்தப்பட்டு செயல் படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திரன் நாயர், 2005-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். இவர் ஈரோடு, கமுதி, வந்தவாசி, சிதம்பரம் ஆகிய இடங்களில் ஏ.எஸ்.பி.யாக பணியாற்றி, 2009-ம் ஆண்டு எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.
எஸ்.பி.சி.ஐ.டி., எஸ்.பி.யாக தூத்துக்குடியிலும், எஸ்.பி.யாக திருநெல்வேலி, விழுப்புரம் மாவட்டங்க ளிலும் , கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர் துணை ஆணையராகவும், ஆளு நரின் பாதுகாப்புப்பிரிவு கூடுதல் துணை ஆணையராகவும் , கேரளா மாநிலத்தில் ஐ.பி.பிரிவு எஸ்.பி.யாகவும் நரேந்திரன் நாயர் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்ற நரேந்திரன் நாயர் சென்னை தலைமையிட டி.ஐ.ஜி. பணியாற்றிய பின்னர், கோவை சரக டி.ஐ.ஜி.யாகவும் பணி புரிந்தார். அதன் பின்பு சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்து வந்தார்.
- மந்திரவாதி பெண்ணை கொளுந்துவிட்டு எரிந்த நிலக்கரி மீதும், ஆணிகளின் மீதும் நடக்க வைத்துள்ளார்.
- இது குறித்து கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
செய்வினை வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பெண்ணை எரியும் நிலக்கரி, ஆணிகளின் மீது நடக்க வைத்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரங்கேறி இருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்ச் 20 ஆம் தேதி துர்க் கிராமத்தின் கைலாஷ் நகர் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதை அடுத்து, பெண்ணை துன்புறுத்திய இரண்டு பெண்கள், ஒரு ஆண் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் மம்தா நிஷாத் இது குறித்து கூறும் போது, "சூனியம் வைத்ததாக குற்றம்சாட்டி எனது கணவரின் தம்பி, அவரது மனைவி மற்றும் சகோதரி என்னை அடிக்கடி துன்புறுத்தி வந்தனர். மார்ச் 20 ஆம் தேதி இரவு எனது கணவர் வெளியில் சென்றிருந்தார். அப்போது இவர்கள் மூவரும் சேர்ந்து, மந்திரவாதி ஒருவரிடம் என்னை அழைத்துச் சென்று நான் சூயனிம் வைக்கும் செயலில் ஈடுபடவில்லை என்பதை நிரூபிக்குமாறு கூறினர்."
அங்கிருந்த மந்திரவாதி தன்னை 12 முறை கொளுந்துவிட்டு எரிந்த நிலக்கரி மீதும், ஒன்பது முறை ஆணிகளின் மீதும் நடக்க வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரிடம் தெரிவித்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட மூன்று உறவினர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், பெண்ணை துன்புறுத்திய மந்திரவாதி மைனர் என்பதால் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கைதான உறவினர்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருக்கிறார்.
- 5 இரு சக்கர வாகனங்கள் திருட்டு போனதாக கூறப்படுகிறது.
- போலீசார் எவ்வித நடவடிக்கை எடுக்காமலும், வழக்குப்பதிவு செய்யாமலும் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கண்டியன் கோவில் ஊராட்சி தலைவர் கோபால், மற்றும் விவசாயிகள், பொதுமக்கள், ஆகியோர் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியாவை சந்தித்து அளித்த புகார் மனுவில் கூறியிரு ப்பதாவது:-
பல்லடம் அருகேஉள்ள பொங்கலூர் கண்டியன் கோயில் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களாக 5 இரு சக்கர வாகனங்கள் திருட்டு போனதாக கூறப்படுகிறது. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் பூட்டிய வீடுகளில் பூட்டை உடைத்து பணம், நகைகள், கொள்ளை போனதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அவிநாசிபாளையம் போலீஸ் நிலையத்தை அணுகி குற்ற சம்பவங்கள் குறித்து புகார் அளித்துள்ளனர். இதுவரை போலீசார் எவ்வித நடவடி க்கையும் எடுக்காமலும் வழக்குப்பதிவு செய்யாமலும் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுத்து குற்றச்சம்பவங்களில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி குற்றம் நடக்கும் பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொ ள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என தெரிவித்தார்.
- சம்பவம் நடைபெற்ற தினம், பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு தேர்வு நடைபெற்று வந்தது.
- இந்த சம்பவம் குறித்து ராஜநகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் காக்கிநாடா மாவட்டத்தை அடுத்த ராஜநகரம் பகுதியில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலை பள்ளியில் மாணவரை சக மாணவனே கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளியில் ஒன்பதம் வகுப்பு பயின்று வரும் உதய் சங்கர் என்ற மாணவர், சக மாணவரான பின்கெ ஸ்ரீஹரி சாய்நாத்-ஐ கத்தியால் குத்தினார். இருவருடன், உதய் சங்கரின் ஒன்றுவிட்ட சகோதரியும் அதே வகுப்பில் பயின்று வருகிறார். இந்த நிலையில், உதய் சங்கரின் சகோதரியை ஸ்ரீஹரி கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உதய் சங்கர் இவ்வாறு செய்திருக்கிறார்.
சம்பவம் நடைபெற்ற தினம், பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு தேர்வு நடைபெற்று வந்தது. தேர்வின் இடையில் திடீரென எழுந்து நின்ற உதய் சங்கர், தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பின்கெ ஸ்ரீஹரி சாய்நாத்-ஐ கத்தியை கொண்டு கடுமையாக குத்தினார். கத்தியால் குத்தியதோடு அவரை, உதய் சங்கர் கடுமையாக திட்டித் தீர்த்தார்.
கத்தி குத்து வாங்கிய ஸ்ரீஹரியை பள்ளியின் தலைமை ஆசிரியர் அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவமனையில் ஸ்ரீஹரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ராஜநகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் உதய் சங்கரை காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.






