என் மலர்
நீங்கள் தேடியது "boys"
- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.
- முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம்ப பரிசாக ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளதாக தமிழ் வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாமக்கல்:
தமிழ்நாடு தினத்தை யொட்டிமாவட்ட அளவில் அனைத்து பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றன. 2 போட்டிகளிலும் மொத்தம் 53 போ் கலந்து கொண்டனா்.
தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் வே.ஜோதி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் இரா.பெரியண்ணன், உதவி தலைமை ஆசிரியா் இல. ஜெகதீசன் முன்னிலை வகித்தனா். அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 6 ஆசிரியா்கள் நடு வா்களாகச் செயல்பட்டனர்.
பேச்சுப் போட்டியில் நாமக்கல் அரசு மகளிா் பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவி கோபிகா முதலி டத்தையும், எா்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி 6-ம் வகுப்பு மாணவி மிது னாஸ்ரீநிதி 2-ம் இடத்தையும், பாண்டமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி வித்யாஸ்ரீ 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
கட்டுரைப் போட்டியில், வெண்ணந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவா் சுனில்குமாா் முதலிடம், எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவி பவித்ரா 2-ம் இடம், பீச்சாம்பா ளையம் விஐபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜனனி 3-ம்இடம் பிடித்தனர்.முதலிடம் பிடித்த மாணவா்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.
மாவட்ட அளவில் இவா்களுக்கு விரைவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம்ப பரிசாக ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளதாக தமிழ் வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
- வாகன சோதனையில் சிக்கியவர்கள் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது.
- பெட்ரோல் பங்கில் அவர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்ததும், அங்கு ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் வண்ணார்பேட்டைக்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.
நெல்லை:
பாளை வண்ணார் பேட்டை பகுதியில் நேற்றிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சிறுவர்கள் சிக்கினர்
அப்போது தெற்கு புறவழிச்சாலையில் 2 மோட்டார் சைக்கிள்களில் 5 சிறுவர்கள் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அவர்களை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் வழிமறித்த போது மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர்.
அவர்களை 2 போலீசார் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.அதில் இருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
திருட்டு மோட்டார் சைக்கிள்
உடனே அவர்களை போலீசார் காலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சிக்கியவர்களிடம் நடத்திய விசாரணையில் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சேரன்மகாதேவியிலிருந்து மோட்டார் சைக்கிளை திருடிச் கொண்டு நெல்லைக்கு வந்ததாக தெரிவித்தனர்.
கொள்ளையடிக்க திட்டம்
டவுன் நயினார் குளம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் அவர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்ததும், அங்கு ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் வண்ணார்பேட்டைக்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள், 2 அரிவாள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் பாளை இன்ஸ்பெக்டர் திருப்பதி விசாரணை நடத்தி வருகிறார்.
- சிவகாசி பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா நடந்தது.
- குழந்தைவேலன் காவடியுடன் சிறுவர், சிறுமிகள் பங்கேற்றனர்.
சிவகாசி
சிவகாசி பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா நடந்தது.
இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவ-மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் குழந்தை வேலன் காவடி எடுத்து சிறுவர்-சிறுமியர்கள் வழிபாடு செய்தனர்.மேலும் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நகரில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் நடைபயணமாக சென்று வழிபாடு நடத்தினர்.
முன்னதாக சிவகாசி முத்தாலம்மன் கோவிலில் இருந்து பால் குடத்துடன், காவடி எடுத்து அரோகரா கோஷத்துடன் நடைபயணம் சென்ற பக்தர்கள் முருகன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், நாராயணசாமி கோவில், திருத்தங்கல் முருகன்கோவில் வரை சென்று சுவாமிக்கும், அம்பாளுக்கும் பாலாபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு நடத்தினர்.
நிகழ்ச்சியினை வழிநடத்திய ஆறுமுக சுவாமிக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.
- ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தினார்.
- ஆன்லைன் விளையாட்டுகளில் சிறுவர்களை ஏமாற்றும் நபர்கள் பற்றிய விவரம் தெரிந்தால், உடனடியாக எனக்கு புகார் அனுப்பலாம்.
மதுரை
மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
வாடிப்பட்டி, கட்டக்கு ளம் நாராயணன் மகன் மோகனசுந்தரம் என்பவர், 7-ம் வகுப்பு மாணவனிடம் ப்ரீ-பயர் ஆன்லைன் விளை யாட்டு ஆசை வார்த்தை கூறி கடந்த 3 மாதங்களாக வங்கி கணக்கு மூலம் 17 ஆயிரம் ரூபாயும், நேரடியாக 25 ஆயிரம் ரூபாயும், ஆக மொத்தம் ரூ.42,000 ஏமாற்றி பணம் பறித்து உள்ளார். அவரை கைது செய்து உள்ளோம். பணத்தை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆன்லைன் விளையாட்டுகளில் சிறுவர்கள் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. எனவே இணையத்தில் பழகும் சிறுவர்களை பெற்றோர் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இதுபோன்ற மோசடி பேர் வழிகளிடம் ஏமாறுவதை தவிர்க்க உதவியாக இருக்கும். ஆன்லைன் விளையாட்டுகளில் சிறுவர்களை ஏமாற்றும் நபர்கள் பற்றிய விவரம் தெரிந்தால், உடனடியாக எனக்கு புகார் அனுப்பலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
