சீர்காழியில், போலீசார் தீவிர வாகன தணிக்கை

தென்பாதி மற்றும் பழைய பஸ் நிலையம் பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவர்களை பிடித்து போலீசார் எச்சரித்தனர்.
வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார்.
வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார்.
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின்படி 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்வதை தடுக்கும் வகையில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தீவிர வாகனத் தணிக்கை நடைபெற்றது.

சீர்காழி தென்பாதி மற்றும் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் போலீசார் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து, அவர்களது பெற்றோருக்கு தகவல் அளித்தனர்.

மீண்டும் இவ்வாறு அவர்கள் வாகனங்கள் இயக்க அனுமதித்தால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com