என் மலர்
நீங்கள் தேடியது "knife stabbed"
- வெற்றிவேலிடம் சதீஷ் பீடி கேட்டதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
- மறைத்து வைத்திருந்த கத்தியால் வெற்றிவேல் கழுத்தில் குத்திவிட்டு சதீஷ் தப்பி ஓடிவிட்டார்.
நெல்லை:
நெல்லை டவுனை அடுத்த பழைய பேட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் வெற்றிவேல் (வயது 19), கரகாட்ட கலைஞர். அதே பகுதி நாராயணசாமி கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ் (20).
சம்பவத்தன்று வெற்றி வேலிடம் சதீஷ் குடிக்க பீடி கேட்டதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள பெட்டிக் கடையில் வெற்றி வேல் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சதீஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெற்றிவேல் கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் காய மடைந்த வெற்றிவேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். இது குறித்து பேட்டை போலீ சார் வழக்குப் பதிவு செய்து சதீஷை தேடி வருகின்றனர்.
- முகமது ஜான் வாஸ் என்ற அஜித் உள்பட 3 பேரும் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
- கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டது மைக்கேல்ராஜ், அற்புதராஜ், நவ்வட்டு என்பது விசாரணையில் தெரியவந்தது
தூத்துக்குடி:
தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது ஜான் வாஸ் என்ற அஜித் (வயது 30). மைதீன் அப்துல் காதர் (22) மற்றும் தினேஷ் (25). இவர்கள் 3 பேரும் நேற்று இரவு கிருஷ்ணராஜபுரம் பகுதியில் சென்றனர். அப்போது அந்த வழியாக வந்தவர்களுக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முகமது ஜான் வாஸ் என்ற அஜித் உள்பட 3 பேரும் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
தொடர்ந்து அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டது அண்ணாநகர் 3-வது தெருவை சேர்ந்த மைக்கேல்ராஜ் (28 ), அவரது அப்பா அற்புதராஜ்( 50) மற்றும் நவ்வட்டு என்பது தெரிய வந்தது. இதில் அப்பா, மகன் 2 பேரையும் கைது செய்த போலீசார், மற்றொருவரை தேடி வருகின்றனர்.
- ராணி கணவரை பிரிந்து ஏர்வாடி அருகே வசித்து வருகிறார்.
- சுடலியம்மாளுக்கும், ஆசீர் பால்ராஜ்க்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
களக்காடு:
வள்ளியூர் ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் நியூட்டன் மகன் ஆசீர் பால்ராஜ் (வயது 55). இவரது மனைவி ராணி. இவர்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.
முன்விரோதம்
இதனால் ராணி கணவரை பிரிந்து, ஏர்வாடி அருகே உள்ள சமாதான புரம், காருண்யா நகரில் வசித்து வருகிறார். ஆசீர் பால்ராஜ், ராணி வீட்டிற்கு அடிக்கடி சென்று தகராறு செய்து வந்துள்ளார்.
இதனை ராணி அதே தெருவில் வசிக்கும் பழனி மனைவி சுடலியம்மாளிடம் (48) கூறினார். இதையடுத்து சுடலியம்மாள், இதுகுறித்து ஆசீர் பால்ராஜை தட்டிக்கேட்டார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் சுடலியம்மா ளுக்கும், ஆசீர் பால் ராஜ்க்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
கத்திக்குத்து
இந்நிலையில் நேற்று ராணியும், சுடலியம்மாளும் அங்குள்ள கிறிஸ்தவ சபைக்கு சென்று கொண்டி ருந்தனர். அப்போது அங்கு வந்த ஆசீர்பால்ராஜ், சுடலியம்மாளை வழிமறித்து கத்தியால் குத்தினார். இதில் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆசீர் பால் ராஜை கைது செய்தனர்.
- பொன்னையாவுக்கும், சுடலையாடும் பெருமாளுக்கும் சொத்து பிரிப்பதில் முன் விரோதம் இருந்து வருகிறது.
- ஆத்திரம் அடைந்த சுடலையாடும் பெருமாள், பொன்னையாவை கத்தியால் குத்தினார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள ஏமன்குளம் புதுக்குளம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னையா (வயது 65) விவசாயி . இவருக்கும் அவரது உறவினரான சுடலையாடும் பெருமாளுக்கும் சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று பொன்னையாவும், அவரது மகன் சரவணபெருமாளும் (40) புதுக்குளம் பெருமாள் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த சுடலையாடும் பெரு மாளுக்கும், பொன்னை யாவுக்கும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த சுடலையாடும் பெருமாள், பொன்னையாவை கத்தியால் குத்தினார்.
இதனை தடுக்க வந்த அவரது மகன் சரவண பெருமாளையும் கத்தியால் குத்தினார். இதனால் காயம் அடைந்த தந்தை, மகன் இருவரையும், அக்கம், பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து பொன்னையா மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து நாங்குநேரி போலீசில் புகார் செய் யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இது தொடர்பாக சுடலையாடும் பெருமாளை தேடி வருகின்றார்.
புதுவை தட்டாஞ்சாவடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி (வயது37), நேற்று முன்தினம் இரவு இவரும் அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பரான குமார் என்பவரும் கோரிமேடு பட்டானூர் சுங்கச்சாவடி மையம் அருகே மதுஅருந்தி நண்பர் பிறந்த தினவிழாவை கொண்டாடினர். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.
உற்சாக மிகுதியில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வளைந்து வளைந்து வந்தனர். தட்டாஞ்சாவடி பகுதியில் இதுபோன்று வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த தனியார் கல்லூரி பேராசிரியர் நைனார்மண்டபம் மூகாம்பிகை நகரை சேர்ந்த ஹேமச்சந்திரன் மற்றும் கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த இவரது நண்பரான சாப்ட்வேர் என்ஜினீயர் வினோத்குமார் (32) ஆகியோர் தட்டிக்கேட்டனர்.
இதில் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த ஹேமச்சந்திரன் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த கத்தியை எடுத்து தட்சிணாமூர்த்தியையும், குமாரையும் குத்தினார். மேலும் வினோத்குமார் அவர்களை கையால் தாக்கினார்.
இதில் காயம் அடைந்த தட்சிணாமூர்த்தி, குமார் ஆகிய இருவரும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் தட்சிணாமூர்த்தி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். குமார் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து கல்லூரி பேராசிரியரான ஹேமச்சந்திரன் மற்றும் என்ஜினீயர் வினோத்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
திருப்பூர் கொங்கணகிரி பகுதியை சேர்ந்தவர் ரங்கநாயகி (45). இவர் அப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று மதியம் திருப்பூர் பஸ் நிலையம் குமரன் சிலை அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து இருந்தார்.
அப்போது அங்கு ஒரு வாலிபர் வந்தார். அவர் திடீரென ரங்கநாயகியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரங்கநாயகியை குத்த முயன்றார்.
இதனால் பயந்து போன ரங்கநாயகி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை விடாமல் துரத்தி சென்ற வாலிபர் கத்தியால் மீண்டும் குத்த முயன்றார். அதனை தடுக்க ரங்கநாயகி முயன்றார்.
ஆனாலும் வாலிபர் ரங்கநாயகி கையில் குத்திவிட்டார். வலியால் அவர் அலறி துடித்தார். இதனை பார்த்ததும் அங்கு பஸ்சுக்காக காத்து இருந்த பயணிகளும், பொதுமக்களும் ஓடி வந்தனர். அவர்கள் கத்தியால் குத்திய வாலிபரை மடக்கி பிடித்தனர்.
அவரிடம் இருந்த கத்தியை பறித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கத்திக்குத்தில் காயம் அடைந்த ரங்கநாயகியை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை கத்தியால் குத்திய வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி பின்புறம் உள்ள ஸ்ரீவித்யா நகரை பகுதியை சேர்ந்த அருண் (30) என்பது தெரிய வந்தது.
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. அருணை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கூறியதாவது-
எனது தந்தை துரை கடந்த சில மாதங்களுக்கு முன் எனது தாய் ரத்தினத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் எனது தந்தைக்கும், ரங்கநாயகிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதனை நான் கண்டித்தேன். ஆனாலும் எனது தந்தை ரங்கநாயகியுடன் உள்ள கள்ளத்தொடர்பை நிறுத்தவில்லை. இது தொடர்பாக ரங்கநாயகியையும் கண்டித்தேன். அவரும் இதனை கண்டு கொள்ளவில்லை.
இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்தேன். அவரை பழி வாங்க திட்டமிட்டேன். இந்த நிலையில் பஸ் நிறுத்தத்தில் ரங்கநாயகி நிற்கும் தகவல் கிடைத்ததும் அங்கு வந்தேன். அவரை கத்தியால் குத்தினேன். அவர் பயத்தில் எனது கையை பிடித்ததால் பெரிய அளவில் அசம்பாவிதம் நடைபெறவில்லை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
பஸ் நிறுத்தத்தில் அருண், ரங்கநாயகியை கத்தியால் குத்தும் காட்சியை அங்கிருந்த சிலர் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதனை வாட்ஸ் அப்பில் பரப்பி வருகிறார்கள். மேலும் இந்த காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவிலும் பதிவாகி உள்ளது. இந்த காட்சியையும் பரப்பி வருகிறார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜப்பானில் நேற்று இரவு டோக்கியோவில் இருந்து ஒசாகாவுக்கு புல்லட் ரெயில் சென்று கொண்டிருந்தது. அதில் 800-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
இரவு 10 மணியளவில் (இந்திய நேரப்படி பகல் 1 மணி) ரெயிலில் பயணம் செய்த மர்மநபர் திடீரென தான் வைத்திருந்த கத்தியால் பயணிகளை சரமாரி குத்தினார். இதனால் பயத்தில் அலறிய பயணிகள் ஓடும் ரெயிலில் அங்கும் இங்குமாக ஓடி பதுங்கினர். பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
கத்திக்குத்து சம்பவத்தில் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் ஆண் பயணி ஒருவருக்கு கழுத்து பகுதியில் பலத்த காயம் இருந்தது. அவர் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார்.
மேலும் காயம் அடைந்த 2 பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அந்த ரெயில் ஒட்டாவா ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அங்கு தயாராக காத்திருந்த போலீசார் ரெயிலில் ஏறி கத்திகுத்து நடத்திய மர்ம நபரை கைது செய்தனர்.
அவனது பெயர் இச்சிரியோ கொஜிமா (22). அவரிடம் இருந்து கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் எதற்காக கத்தியால் குத்தினார். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவரா? என்பன போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.