நெல்லையில் கரகாட்ட கலைஞருக்கு கத்திக்குத்து

வெற்றிவேலிடம் சதீஷ் பீடி கேட்டதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.மறைத்து வைத்திருந்த கத்தியால் வெற்றிவேல் கழுத்தில் குத்திவிட்டு சதீஷ் தப்பி ஓடிவிட்டார்.
நெல்லையில் கரகாட்ட கலைஞருக்கு கத்திக்குத்து
Published on

நெல்லை:

நெல்லை டவுனை அடுத்த பழைய பேட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் வெற்றிவேல் (வயது 19), கரகாட்ட கலைஞர். அதே பகுதி நாராயணசாமி கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ் (20).

சம்பவத்தன்று வெற்றி வேலிடம் சதீஷ் குடிக்க பீடி கேட்டதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள பெட்டிக் கடையில் வெற்றி வேல் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சதீஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெற்றிவேல் கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் காய மடைந்த வெற்றிவேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். இது குறித்து பேட்டை போலீ சார் வழக்குப் பதிவு செய்து சதீஷை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com