என் மலர்
செய்திகள்

X
மத்தூர் அருகே வாலிபரை கத்தியால் குத்திய அக்காவின் கணவர் கைது
By
மாலை மலர்22 Dec 2018 10:55 PM IST (Updated: 22 Dec 2018 10:55 PM IST)

மத்தூர் அருகே வாலிபரை கத்தியால் குத்திய அக்காவின் கணவரை போலீசார் கைது செய்து ஊத்தங்கரை கிளைச் சிறையில் அடைத்தனர்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள மாடரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் வெங்கடேசன் (38). இவரது மனைவியின் சகோதரர் அதே பகுதியை சேர்ந்த வள்ளரசு (வயது18). கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் வெங்கடேன் தனக்கு பிடிக்காத ஒருவருடன் வள்ளரசு பேசி கொண்டு இருந்தார். அதனை வெங்கடேசன் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த வெங்கடேசன் வைத்திருந்த கத்தியை எடுத்து வள்ளரசை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வள்ளரசு மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வெங்டேசனை கைது செய்தனர். பின்னர் போலீசார் போச்சம்பள்ளி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி ஊத்தங்கரை கிளைச் சிறையில் அடைத்தனர்.
Next Story
×
X