தூத்துக்குடியில் 3 பேருக்கு கத்திக்குத்து - தந்தை, மகன் கைது

முகமது ஜான் வாஸ் என்ற அஜித் உள்பட 3 பேரும் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்தனர்.கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டது மைக்கேல்ராஜ், அற்புதராஜ், நவ்வட்டு என்பது விசாரணையில் தெரியவந்தது
தூத்துக்குடியில் 3 பேருக்கு கத்திக்குத்து - தந்தை, மகன் கைது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது ஜான் வாஸ் என்ற அஜித் (வயது 30). மைதீன் அப்துல் காதர் (22) மற்றும் தினேஷ் (25). இவர்கள் 3 பேரும் நேற்று இரவு கிருஷ்ணராஜபுரம் பகுதியில் சென்றனர். அப்போது அந்த வழியாக வந்தவர்களுக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முகமது ஜான் வாஸ் என்ற அஜித் உள்பட 3 பேரும் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

தொடர்ந்து அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டது அண்ணாநகர் 3-வது தெருவை சேர்ந்த மைக்கேல்ராஜ் (28 ), அவரது அப்பா அற்புதராஜ்( 50) மற்றும் நவ்வட்டு என்பது தெரிய வந்தது. இதில் அப்பா, மகன் 2 பேரையும் கைது செய்த போலீசார், மற்றொருவரை தேடி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com