ஏர்வாடி அருகே பெண்ணுக்கு கத்திக்குத்து

ராணி கணவரை பிரிந்து ஏர்வாடி அருகே வசித்து வருகிறார்.சுடலியம்மாளுக்கும், ஆசீர் பால்ராஜ்க்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
ஏர்வாடி அருகே பெண்ணுக்கு கத்திக்குத்து
Published on

களக்காடு:

வள்ளியூர் ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் நியூட்டன் மகன் ஆசீர் பால்ராஜ் (வயது 55). இவரது மனைவி ராணி. இவர்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.

முன்விரோதம்

இதனால் ராணி கணவரை பிரிந்து, ஏர்வாடி அருகே உள்ள சமாதான புரம், காருண்யா நகரில் வசித்து வருகிறார். ஆசீர் பால்ராஜ், ராணி வீட்டிற்கு அடிக்கடி சென்று தகராறு செய்து வந்துள்ளார்.

இதனை ராணி அதே தெருவில் வசிக்கும் பழனி மனைவி சுடலியம்மாளிடம் (48) கூறினார். இதையடுத்து சுடலியம்மாள், இதுகுறித்து ஆசீர் பால்ராஜை தட்டிக்கேட்டார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் சுடலியம்மா ளுக்கும், ஆசீர் பால் ராஜ்க்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.

கத்திக்குத்து

இந்நிலையில் நேற்று ராணியும், சுடலியம்மாளும் அங்குள்ள கிறிஸ்தவ சபைக்கு சென்று கொண்டி ருந்தனர். அப்போது அங்கு வந்த ஆசீர்பால்ராஜ், சுடலியம்மாளை வழிமறித்து கத்தியால் குத்தினார். இதில் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆசீர் பால் ராஜை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com