search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Defense"

    • தீ விபத்தின் போது தற்காத்து கொள்வது எப்படி?
    • தீயை கட்டுப்படுத்துவது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் விளக்கம் அளித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங் நேற்று ஆய்வு செய்தார்.

    திருமருகல் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் திலக்பாபு தலைமையில் தீயணைப்பு வீரர்கள், மழை, வெள்ளம் வரும்போது கிடைக்கும் பொருட்களை கொண்டு தங்களை பாதுகா த்துக் கொள்வது, மற்றவ ர்களை காப்பா ற்றுவது குறித்து செயல்முறை நடத்தி காண்பிக்கப்பட்டது.

    மேலும் தீ விபத்தின் போது தற்காத்து கொள்வது குறித்தும், தீயை கட்டுப்படுத்துவது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் விளக்கம் அளித்தனர்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், கலைவாணன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • பொருளாதாரத்தில் நலிவுற்ற பின் தங்கிய மாணவ மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளித்து வருகிறார்.
    • இம்மாணவ மாணவிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை பெற்றுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் பகுதியைச் சேர்ந்த கிரண்ட் மாஸ்டர்எஸ்.பாண்டியன் அரசின் பொதுத் துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளான திருமருகல் திருப்பு கலூர், திருக்கண்ணபுரம், ஏனங்குடி, வவ்வாலடி, கணபதிபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடந்த 20 ஆண்டு காலமாக பொருளாதாரத்தில் நலிவுற்ற பின் தங்கிய மாணவ மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு தற்காப்பு கலை (டேக்வாண்டோ) பயிற்சி அளித்து வருகிறார்.

    மேலும் இம்மாணவ மாணவிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை பெற்றுள்ளனர்.கடந்த 20 ஆண்டுகளில் தங்கம் 98, சில்வர் 75,பித்தளை 112 உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுள்ளனர்.அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களையும் பெற்றுள்ளனர். இந்நிலையில் பயிற்சியாளர் மாஸ்டர் பாண்டியனை ஜாக்கி புக் ஆப் வேல்டு என்ற நிறுவனம் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கெளரவித்துள்ளது.அதை தொடர்ந்து ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இதில் ஓ.என்.ஜி.சி யின் அதிகாரி சம்பத்குமார், சீனியர் செக்யூரிட்டி மேனேஜர்கள் முரளி கிருஷ்ணன்,அஜய் மாலிக், ஆதித்யா ஆகியோர் கலந்து கொண்டு மாஸ்டர் பாண்டியனை பாராட்டினர்.

    • ராமசாமி மகன் சசி (வயது 23), .நரசிம்மமூர்த்தி மகள் பிரகத்தி (22) என்பவக்கும் காதல் ஏற்பட்டது. இவரது காதலுக்கு பிரகத்தியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக
    • கடந்த 7-ந் தேதி குஞ்சரம் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சசி (வயது 23), இவர் கடந்த 10 ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தில் கட்டிட வேலை செய்து வந்தார். இந்நிலையில் சசிக்கும் கர்நாடக மாநிலம் கெங்கேரி மாவட்டம் கன்சந்த்ராவை சேர்ந்த நரசிம்மமூர்த்தி மகள் பிரகத்தி (22) என்பவக்கும் காதல் ஏற்பட்டது. இவரது காதலுக்கு பிரகத்தியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து காதலர்கள் இருவரும் கடந்த 4- ந் தேதி சசியின் சொந்த ஊரான பூண்டி கிராமத்திற்கு வந்தனர். தொடர்ந்து கடந்த 7-ந் தேதி குஞ்சரம் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் பாதுகாப்பு கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பிரகத்தி மனு அளித்தார். மனுவில் கடந்த 6- ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகவும், தனது வீட்டில் என்னை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ததால் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 7-ந் தேதி நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் எனது பெற்றோரும் உறவினர்களும் எங்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே எனக்கும், கணவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. காதல் ஜோடிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சமூக வலைதளங்களை பாதுகாப்பான முறையில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்.
    • குற்றங்களை தடுக்கும் வகையில் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குனர் சஞ்சய் குமார், போலீஸ் சூப்பிரண்டு தேவராணி ஆகியோர் உத்தரவுப்படி தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் வழிகாட்டுதல் படி தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், விழிப்புணர்வுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதற்கு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக கல்லூரி முதல்வர் ரோசி கலந்து கொண்டார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.

    பல்கலைக்கழக அசோசியேட் டீன் சங்கர் ஸ்ரீராம், மாவட்ட அனைத்து வங்கிகளின் ஒருங்கிணைப்பு மேலாளர் பிரதீப் கண்ணன், சரபோஜி கல்லூரியின் கணினி துறை தலைவர் மோகன் குமார், சைபர் பாதுகாப்பு வல்லுநர் ஹரிஹரன் ஆகியோர் சைபர் கிரைம் விழிப்புணர்வு குறித்து பேசினர்.

    இந்த கருத்தரங்கில், அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் குறித்தும், சமூக வலைதளங்களை பாதுகாப்பான முறையில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும், வங்கி கணக்கு விபரங்கள், ஏ.டி.எம் கார்டு குறித்த விவரங்கள், ஓ.டி.பி ஆகியவற்றை பெற்றுக்கொண்டு வங்கி கணக்கில் உள்ள பணத்தினை எடுத்து வரும் குற்றமானது அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அவ்வாறான குற்றங்களை தடுக்கும் வகையில் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் அரசு மற்றும் தனியார் வங்கி மேலாளர்கள், அலுவலர்கள், பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள், மாணவ -மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • பனையேறிகள் மீது மதுவிலக்கு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்வதை காவல்துறை கைவிட வேண்டும்.
    • தமிழகத்திலும் கள் உணவு பொருள் என்பதை கோடிட்டு பனைமர கள்ளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் பனைமர கள் இறக்க அனுமதிக்க கோரி தமிழ்நாடு கள் மற்றும் பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று தஞ்சை ரெயிலடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும், பதநீர் இறக்க உரிமை பெறும் நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்.

    பனையேறிகள் மீது மதுவிலக்கு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதை காவல்துறை கைவிட வேண்டும். கேரள மாநில அரசு போல் தமிழகத்திலும்கள் உணவு பொருள் என்பதை கோடிட்டு பனைமரக் கள்ளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • துப்பாக்கி் சூட்டில் சேதம் அடைந்த விசைப்படகுக்கு பதிலாக, புதிய விசைப்படகு வழங்க வேண்டும்.
    • அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

    நாகப்பட்டினம்:

    தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையை கண்டித்து, நாகையில் மீனவர்கள் தபால் நிலையம் முன்பு கொட்டும் மழையில் குடை பிடித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகை, மயிலாடுதுறை உள்பட 7 மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மீனவருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

    அவரது குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

    துப்பாக்கி் சூட்டில் சேதம் அடைந்த விசைப்படகுக்கு பதிலாக, புதிய விசைப்படகு வழங்க வேண்டும்.

    அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மனைவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகப்பட்டு விசாரித்த போது எனது மனைவிக்கும் வேறு ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
    • எனது மனைவி மற்றும் அவரது கள்ளகாதலனுடன் சேர்ந்து கொண்டு கட்ட பஞ்சாயத்துக்கு வர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் சடையார் கோவிலை சேர்ந்தவர் சங்கர் (வயது 32 ) விவசாயி. இவர் தஞ்சை சரக டி. ஐ. ஜி. அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவற்றில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளன. எனது மனைவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகப்பட்டு விசாரித்த போது எனது மனைவிக்கும் வேறு ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இது குறித்து நான் என் மனைவியை கண்டித்த போது அவர் என் மீது கோபப்பட்டு உன் சாப்பாட்டில் விஷம் வைத்து உன்னை கொன்று விடுவேன் என மிரட்டினார். மேலும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து நான் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால் போலீஸ்காரர் ஒருவர் எனது புகாரை வாங்க மறுத்து விட்டார். மேலும் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் எனது மனைவி மற்றும் அவரது கள்ள காதலனுடன் சேர்ந்து கொண்டு கட்ட பஞ்சாயத்துக்கு வர வேண்டும் எனக் கூறி மிரட்டுகிறார்.

    எனவே என் மனைவி அவரது கள்ளக்காதலன் மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுத்து என் உயிருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடலூர் மாவட்டத்தில் 75 -வது ஆண்டு சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டது.
    • தேசியக்கொடியை உரிய மரியாதையுடன் இறக்கி தங்கள் வீடுகளில் பத்திரமாக வைத்துக்கொள்ள அனைத்து பொதுமக்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் 75 -வது ஆண்டு சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடியதை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி என்ற திட்டத்தின்கீழ் 13- ந்தேதி முதல் 15 -ந்தேதி வரை மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி 76 வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடினர் . இத்திட்டம் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஏற்றப்பட்ட தேசியக்கொடியை உரிய மரியாதையுடன் இறக்கி தங்கள் வீடுகளில் பத்திரமாக வைத்துக்கொள்ள அனைத்து பொதுமக்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான உத்தரவினை கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் பிறப்பித்து உள்ளார்.

    ×