கள்ளக்காதலுடன் சேர்ந்து மிரட்டும் மனைவியால் ஆபத்து- எஸ்.பி அலுவலகத்தில் விவசாயி மனு

மனைவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகப்பட்டு விசாரித்த போது எனது மனைவிக்கும் வேறு ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.எனது மனைவி மற்றும் அவரது கள்ளகாதலனுடன் சேர்ந்து கொண்டு கட்ட பஞ்சாயத்துக்கு வர வேண்டும்.
கள்ளக்காதலுடன் சேர்ந்து மிரட்டும் மனைவியால் ஆபத்து- எஸ்.பி அலுவலகத்தில் விவசாயி மனு
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் சடையார் கோவிலை சேர்ந்தவர் சங்கர் (வயது 32 ) விவசாயி. இவர் தஞ்சை சரக டி. ஐ. ஜி. அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவற்றில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளன. எனது மனைவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகப்பட்டு விசாரித்த போது எனது மனைவிக்கும் வேறு ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இது குறித்து நான் என் மனைவியை கண்டித்த போது அவர் என் மீது கோபப்பட்டு உன் சாப்பாட்டில் விஷம் வைத்து உன்னை கொன்று விடுவேன் என மிரட்டினார். மேலும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து நான் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால் போலீஸ்காரர் ஒருவர் எனது புகாரை வாங்க மறுத்து விட்டார். மேலும் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் எனது மனைவி மற்றும் அவரது கள்ள காதலனுடன் சேர்ந்து கொண்டு கட்ட பஞ்சாயத்துக்கு வர வேண்டும் எனக் கூறி மிரட்டுகிறார்.

எனவே என் மனைவி அவரது கள்ளக்காதலன் மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுத்து என் உயிருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com