search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Offense"

    • சமூக வலைதளங்களை பாதுகாப்பான முறையில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்.
    • குற்றங்களை தடுக்கும் வகையில் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குனர் சஞ்சய் குமார், போலீஸ் சூப்பிரண்டு தேவராணி ஆகியோர் உத்தரவுப்படி தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் வழிகாட்டுதல் படி தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், விழிப்புணர்வுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதற்கு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக கல்லூரி முதல்வர் ரோசி கலந்து கொண்டார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.

    பல்கலைக்கழக அசோசியேட் டீன் சங்கர் ஸ்ரீராம், மாவட்ட அனைத்து வங்கிகளின் ஒருங்கிணைப்பு மேலாளர் பிரதீப் கண்ணன், சரபோஜி கல்லூரியின் கணினி துறை தலைவர் மோகன் குமார், சைபர் பாதுகாப்பு வல்லுநர் ஹரிஹரன் ஆகியோர் சைபர் கிரைம் விழிப்புணர்வு குறித்து பேசினர்.

    இந்த கருத்தரங்கில், அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் குறித்தும், சமூக வலைதளங்களை பாதுகாப்பான முறையில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும், வங்கி கணக்கு விபரங்கள், ஏ.டி.எம் கார்டு குறித்த விவரங்கள், ஓ.டி.பி ஆகியவற்றை பெற்றுக்கொண்டு வங்கி கணக்கில் உள்ள பணத்தினை எடுத்து வரும் குற்றமானது அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அவ்வாறான குற்றங்களை தடுக்கும் வகையில் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் அரசு மற்றும் தனியார் வங்கி மேலாளர்கள், அலுவலர்கள், பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள், மாணவ -மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    ×