search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Precaution"

    • தீ விபத்தின் போது தற்காத்து கொள்வது எப்படி?
    • தீயை கட்டுப்படுத்துவது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் விளக்கம் அளித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங் நேற்று ஆய்வு செய்தார்.

    திருமருகல் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் திலக்பாபு தலைமையில் தீயணைப்பு வீரர்கள், மழை, வெள்ளம் வரும்போது கிடைக்கும் பொருட்களை கொண்டு தங்களை பாதுகா த்துக் கொள்வது, மற்றவ ர்களை காப்பா ற்றுவது குறித்து செயல்முறை நடத்தி காண்பிக்கப்பட்டது.

    மேலும் தீ விபத்தின் போது தற்காத்து கொள்வது குறித்தும், தீயை கட்டுப்படுத்துவது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் விளக்கம் அளித்தனர்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், கலைவாணன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • கடலாடி ஒன்றியத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும்.
    • ஒன்றிய மேலாளர் முனியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

    சாயல்குடி

    கடலாடியில் ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் ஜெய ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, துணை சேர்மன் ஆத்தி, ஒன்றிய கவுன்சிலர் குமரையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் முனியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். உதவியாளர் கணேசன் அறிக்கை சமர்ப்பித்தார்.

    கூட்டத்தில் பனைக்குளம், மாரந்தை, ஓரிவயல், ஆகிய கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மழைக்காலம் வரும் முன் மழைநீர் தேங்கும் இடங்களை தேர்வு செய்து மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வரத்து கால்வாய்களை சரி செய்து மழை நீர் கண்மாய்களுக்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆண்டிச்சிகுளம், களநீர்மங்களம், தொட்டியபட்டி கிராமங்களில் பெண்கள் குளிப்பதற்கு படித்துறை அமைக்க வேண்டும், சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை தார்ச்சாலை அமைக்க வேண்டும், ஏர்வாடி 9-வது வார்டு பகுதியில் குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனங்குடி, கருங்குளம் ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

    சிறைக்குளம் கவுன்சிலுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை களை சீரமைக்க வேண்டும், மடத்தா குளம் கிராமத்தில் அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கவுன்சிலர்கள் முன் வைத்தனர். இதில் கவுன்சிலர்கள் மாயகிருஷ்ணன், முனியசாமி பாண்டியன், அம்மாவாசி, பிச்சை, ஜெயச்சந்திரன், ராஜேந்திரன், வசந்தா கதிரேசன், ராமலட்சுமி, பெரோஸ் பானு ஜலில், குஞ்சரம் முருகன், பானுமதி ராமமூர்த்தி, செய்யதுஅலி பாத்திமா, முருகன் வள்ளி மலை ராஜ் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

    • தென்மேற்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தினார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

    சென்னையில் கொட்டி தீர்த்த மழையில் ஒரே நாளில் தலைநகர் சென்னை தத்தளிக்கிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில், அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 160 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.

    மேலும் வரும் 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணா மலை, கடலூர், கள்ளக் குறிச்சி, விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 9 மாவட்டங்களில் கனமழை தொடரும் என்ற ஒரு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுக்கப் பட்டுள்ளது.

    கடந்த 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஜூன் மாதத்தில் சென்னையிலே அதிக பட்சமாக மழைபதிவாகி இருப்பதால், 2 நாட்களாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டி ருக்கிறது.

    சென்னை புறநகர் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள். சில இடங்களில் மரங்கள் சாய்ந்து கிடந்தன. அதே போன்று நங்கநல்லூரில் மரம் சாய்ந்து விழுந்ததில் ஒருவர் படுகாயம் அடைந்திருக்கிறார்.

    வேப்பேரி, பெரம்பூர், கோயம்பேடு, திருமங்கலம், கத்திபாரா மேம்பாலம், கணேசபுரம் சுரங்க பாதை என பல்வேறு முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது. வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமி ழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 4 நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பருவ மழைகாலங்களில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உடன டியாக சீர்படுத்துவதற்கும், பொறுப்பு அதிகாரிகளாக அனுபவம் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு, கள ஆய்வுகளை நடத்தி நடவ டிக்கைகளை மேற்கொள் வார்கள்.

    தற்போது தி.மு.க. ஆட்சியில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில், தென்மேற்கு பருவ மழை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது போன்ற காலங்களில் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும்.

    ரூ.12 கோடியில் கலைஞர் கோட்ட திறப்பு விழாவிற்கு திருவாரூரில் முகாமிட்டுள்ள முதல்-அமைச்சர், மக்களுக்கு கடமைகளை செய்ய வேண்டாமா? அப்படி நீங்கள் மக்களுக்கு பணி செய்தால் உங்களை வரவேற்பார்கள் என்பதை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஹரிணி அருவி தடாகத்தில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாள்
    • தடாகத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையில் துவாரம் இருந்ததால் சிறுமி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி பழைய குற்றால அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த பொழுது அருவி தடாகத்தில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட ஹரிணி என்ற 4 வயது சிறுமியை விளாத்திகுளத்தை சேர்ந்த விஜயகுமார் என்ற வாலிபர் பத்திரமாக மீட்டார்.

    இந்நிலையில் அருவிப் பகுதியில் இருந்து தடாகத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையில் துவாரம் இருந்ததால் சிறுமி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் சுடலை உடனடியாக அருவிக் கரையில் நேரில் பார்வையிட்டு தடாகத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையில் இருந்த துவாரத்தில் உடனடியாக இரவோடு இரவாக இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணியில் ஊழியர்களுடன் சேர்ந்து ஈடுபட்டார்.

    துரிதமாக செயல்பட்டு தடுப்பு கம்பிகளை அமைக்க நடவடிக்கை எடுத்த ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் சுடலைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    • நாளை மதியம் அணையின் முழு கொள்ளளவான 32 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • அணை திறப்பதற்கு உண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

    விழுப்பரம்:

    விக்கிரவாண்டி அருகே வீடூர் கிராமத்தில். அமைந்துள்ள வீடூர் அணையிலிருந்து தமிழகத்தில் 2200 ஏக்கர், புதுவையில் 1000 ஏக்கர் என மொத்தம் 3200 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில தினங்களாக பெய்து வடகிழக்கு பருவ மழை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது இதன் காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து வரக்கூடிய பணமலை பேட்டை, செஞ்சி , மேல் மலையனுார் பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைக்குநீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.அணையின் மொத்த கொள்ளளவு 32 அடியாகும்.இன்று காலை நிலவரப்படி அணைக்கு 472 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது அணையில் .30, 325 அடி உயர்ந்துள்ளது. தற்போது அணைக்கு வருகின்ற நீரின் அளவை கணக்கிட்டு பார்த்தால் நாளை மதியம் அணையின் முழு கொள்ளளவான 32 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருவதை பொதுப்பணி த்துறை செயற்பொறியாளர் ஷோபனா ,உதவி பொறியாளர் ரமேஷ் இளநிலை பொறியாளர்.பாபு ஆகியோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் அணை திறப்பதற்கு உண்டான முன்னெச்சரிக்கை நடவடி க்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். இன்று மதியம் விழுப்புரம் கலெக்டர் மோகன் அணையை பார்வையிட்டு ஆலோசனை வழங்குவார் என கூறப்படுகிறது.அணை நிரம்பி வருவதால் பாதுகாப்பு கருதி விபத்துகள் ஏற்படாத வண்ணம் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் தலைமையில் போலீசார் அணையில் பொதுமக்கள் , இளைஞர்கள் யாரும் குளிக்காத வகையில் கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் நாளை அதன் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது விவசாயிகள் மகிழ்ச்சியடை ந்துள்ளனர்.

    • காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 3 நாட்கள் தஞ்சை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • பல்வேறு பாதுகாப்புகளை மேற்கொண்டு 4 ஆயிரத்து 700 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

    இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:-

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று புயலாக வலுப்பெற்று வட தமிழக கடற்கரைக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடைய வாய்ப்புள்ளதால் 3 நாட்கள் தஞ்சை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புயல் தொடர்பான அனைத்து முன்னெச்சரி க்கை நடவடிக்கை பணிக ளையும் மேற்கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    தஞ்சை மாவட்டத்தில் 251 நிவாரண மையங்கள், 14 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 7 புயல் பாதுகாப்பு மையங்கள், 30 படகுகள், 143 கனரக எந்திரங்கள், 617 அரவை எந்திரங்கள், 99 மரம் வெட்டும் எந்திரங்கள், 113 ஜெனரேட்டர்கள், 37 தண்ணீர் வெளியேற்றும் எந்திரங்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 325 மணல் மூட்டைகள், 30 ஆயிரத்து 672 தடுப்பு கம்புகள் தயார் நிலையில் உள்ளன.

    4 ஆயிரத்து 700 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

    இலவச அழைப்பு எண்: 1077 மற்றும் தொலைபேசி எண்கள்: 04362-264115, 264117, 9345336838 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு மழை, வெள்ளத்தினால் ஏற்படும் சேதம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

    வருவாய் கோட்ட அலுவலகத்திலும், தாசி ல்தார் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
    • தூர்வாரும் பணிகளை கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

    நெல்லையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார். இதில் கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது நடந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகர பகுதி களில் உள்ள கால்வாய் ஆக்கிரமிப்புகள், ஓடை தூர்வாருதல், சாக்கடை கால்வாய்கள் சீரமைத்தல் போன்ற பணிகளை விரைவுப்படுத்த அதிகாரி களுக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தர விட்டார். மாநகரப் பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அவர் தெரிவித்தார்.

    அப்போது நெல்லை மாநகர பகுதிகளில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான எஸ்.என்.ஹைரோடு, பாளை மார்க்கெட் சீவலப்பேரி சாலை, சமாதானபுரம் சாலை, திருமால் நகர் சாலை உள்ளிட்டவை உள்ளது. இதில் பாளை மார்க்கெட் சீவலப்பேரி சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக வாகன போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. அதேபோல் திருமால் நகர் சாலையும் பழுதடைந்து காணப்படுகிறது.

    இதனால் மாநகரப் பகுதிகளுக்குள் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைக ளையும் மாநகராட்சிக்கு மாற்றிக் கொடுத்தால் உடனடியாக சீரமைத்து மாநகராட்சி முழுவதும் தரமான சாலைகள் பொது மக்கள் பயன்படுத்தலாம் என கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி கூறினார்.

    தொடர்ந்து அமைச்சரின் உத்தரவுக்கு இணங்க நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள கால்வாய் மற்றும் ஓடைகளை சீரமைத்து தூர்வாரும் பணிகளை கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

    மாநகராட்சி கமிஷனரின் இந்த நடவ டிக்கைகளை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.

    • மேலப்பாளையம் உப மின் நிலையத்தில் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி ஆய்வு மேற்கொண்டார்.
    • தளவாட பொருட்கள் போதிய அளவில் கையிருப்பு வைத்திட அறிவுறுத்தினார்.

    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை யொட்டி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட மேலப்பாளையம் உப மின் நிலையத்தில் இன்று காலை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அதிக மழைப் பொழிவு மற்றும் பேரிடர் காலங்களில் பாதுகாப்பான முறையில் பணியாளர்கள் பணிபுரியவும், மின் பகிர்ந்தளித்தல் மற்றும் மின்தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக மாற்றுவழியில் மின்சாரம் வழங்குவதற்கான சாத்திய கூறுகளை பற்றியும் ஆலோசித்தார்.

    பேரிடர் காலத்தில் தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் மீட்பு குழுவுடன் இணைந்து மின்தடை ஏற்பட காரணமாக இருக்கும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார். தளவாட பொருட்கள் போதிய அளவில் கையிருப்பு வைக்க அறிவுறுத்தினார்.

    ஆய்வுக் கூட்டத்தில் நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி, சந்திப்பு உபகோட உதவி செயற் பொறியாளர் தங்க முருகன், பெருமாள்புரம் பிரிவு உதவி செயற்பொறியாளர் சின்னசாமி, பழையபேட்டை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு ) சங்கர், உதவி மின் பொறியாளர்கள் உப மின் நிலையம் ஜெயந்தி, அபிராமிநாதன், ரத்தினவேணி, கார்த்திகுமார், வெங்கடேஷ், இளநிலை மின் பொறியாளர் செய்யதுஅலி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
    • சிவகுருநாதபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் மழைநீர் தேங்கி சகதியாக காட்சி அளிக்கும்.

    சுரண்டை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மற்றும் கால்வாய்களில் பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.சுரண்டை சிவகுருநாதபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் மழைநீர் தேங்கி சகதியாக காட்சி அளிக்கும்.இதனால் பள்ளி தொடர்ந்து ஒரு வாரம் வரை விடுமுறை விடப்பட்டது.இந்த நிலையில் பழனி நாடார் எம்.எல்.ஏ.விடம் பள்ளியில் தரைதளத்தை உயர்த்த கோரிக்கை வைத்திருந்தனர்.

    எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் மண் நிரப்பி தரை தளத்தை உயர்த்தும் பணி நடைபெற்றது. பழனி நாடார் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.தொடர்ந்து கால்வாய்களில் உள்ள அடைப்புகளை நீக்க நடவடிக்கை மேற்கொண்டார்.ஆய்வின் போது சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகிமை கமிட்டி நாட்டாமை தங்கையா நாடார், சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், நகரமன்ற உறுப்பினர்கள் அமுதா சந்திரன், வேல் முத்து,ஞானதீபம் மனோகர,தேவேந்திரன்,பிரபாகர், மகேந்திரன்,பிரபு, அரவிந்த் கந்தையா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
    • வெள்ள அபாயம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் அணைக்கரை ஆய்வு மாளிகையில் கொள்ளிட கரையோர பகுதிகளில் வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து பல்வேறு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.

    பொதுமக்கள் பேரிடர் காலங்களில் தங்குவதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகளுடன் கூடிய தற்காலிக பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்புத்துறை ஆகியவை தயார் நிலையில் உள்ளது.

    பாதுகாப்பு முகாமில் பொதுமக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை உள்ளது.

    இலவச அழைப்பு எண்-1077 மற்றும் தொலைபேசி எண்கள் 04362-264114, 264115 மற்றும் 94458-69848 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் மழை, வெள்ள சேதம் தொடர்பாக புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் செல்வதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகளுக்காக சேதப்படுத்தப்பட்ட சாலைகளில் ரூ.42 கோடியில் புதிய சாலைகள் அமைக்க மதிப்பீடு தயார் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    • வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரப் பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை எடுக்கப்படும்

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சரவணன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் அறிவித்தபடி நெல்லை மாநகராட்சி பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்காக 3 ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் ரூ.34 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும்.

    பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகளுக்காக சேதப்படுத்தப்பட்ட சாலைகளில் ரூ.42 கோடியில் புதிய சாலைகள் அமைக்க மதிப்பீடு தயார் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு இடங்களில் திட்டப்பணிகள் முடிவடையாததால் பொதுமக்களின் அவசர போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு 12 இடங்களில் மாற்று சாலைகள் போடப்படும்.

    மேலும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரப் பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை எடுக்கப்படும். அதேபோல் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளும் நடைபெறும்.

    பருவமழை நேரங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே நெல்லை மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நான்கு மண்டலங்களிலும் வார்டு வாரியாக மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு டெங்கு இல்லா மாநகராட்சியாக உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பொதுமக்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் கால பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
    • அலுவலர் கணேசன் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விரிவான செய்முறைப் பயிற்சிகளை வழங்கினார்.

    நன்னிலம் :

    நன்னிலம் தாலுகா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், எதிர்வரும் வட கிழக்கு பருவமழையால், பேரிடர் ஏற்பட்டால் அதில் இருந்து பொது மக்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் கால பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

    கூட்டத்திற்கு, நன்னிலம் வருவாய் வட்டாட்சியர் பத்மினி தலைமை தாங்கி னார். வருவாய் ஆய்வாளர் நெடுமாறன் முன்னிலை வகித்தார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை நிலைய அலுவலர் கணேசன் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விரிவான செய்முறைப் பயிற்சிகளை வழங்கினார்.

    நன்னிலம் வட்ட கிளை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் உத்தமன் முதலுதவி முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பயிற்சியாளர் பரிமளா காந்தி, முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து விளக்க உரையாற்றினார். இந்நிகழ்வில் 20க்கும் மேற்பட்ட கிராமங்க ளிலிருந்து, தேர்வு செய்ய ப்பட்ட முதல் நிலை பொறு ப்பாளர்கள் பயிற்சி பெற்றனர்.

    ×