search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை
    X

    கடலாடியில் ஒன்றிய கவுன்சில் கூட்டம் நடந்தது.

    மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    • கடலாடி ஒன்றியத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும்.
    • ஒன்றிய மேலாளர் முனியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

    சாயல்குடி

    கடலாடியில் ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் ஜெய ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, துணை சேர்மன் ஆத்தி, ஒன்றிய கவுன்சிலர் குமரையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் முனியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். உதவியாளர் கணேசன் அறிக்கை சமர்ப்பித்தார்.

    கூட்டத்தில் பனைக்குளம், மாரந்தை, ஓரிவயல், ஆகிய கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மழைக்காலம் வரும் முன் மழைநீர் தேங்கும் இடங்களை தேர்வு செய்து மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வரத்து கால்வாய்களை சரி செய்து மழை நீர் கண்மாய்களுக்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆண்டிச்சிகுளம், களநீர்மங்களம், தொட்டியபட்டி கிராமங்களில் பெண்கள் குளிப்பதற்கு படித்துறை அமைக்க வேண்டும், சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை தார்ச்சாலை அமைக்க வேண்டும், ஏர்வாடி 9-வது வார்டு பகுதியில் குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனங்குடி, கருங்குளம் ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

    சிறைக்குளம் கவுன்சிலுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை களை சீரமைக்க வேண்டும், மடத்தா குளம் கிராமத்தில் அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கவுன்சிலர்கள் முன் வைத்தனர். இதில் கவுன்சிலர்கள் மாயகிருஷ்ணன், முனியசாமி பாண்டியன், அம்மாவாசி, பிச்சை, ஜெயச்சந்திரன், ராஜேந்திரன், வசந்தா கதிரேசன், ராமலட்சுமி, பெரோஸ் பானு ஜலில், குஞ்சரம் முருகன், பானுமதி ராமமூர்த்தி, செய்யதுஅலி பாத்திமா, முருகன் வள்ளி மலை ராஜ் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

    Next Story
    ×