search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palani Nadar MLA"

    • தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து சுரண்டையில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பழனி நாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    சுரண்டை:

    தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து சுரண்டையில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி சேர்மக்கனி தலைமை தாங்கினார். சுரண்டை நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன், மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பழனி நாடார் எம்.எல்.ஏ. பேசுகையில், மத்திய அரசு ஏழை மற்றும் நடுத்தர மக்களை வஞ்சிக்கும் விதமாகவும், அதானி, அம்பானி சம்பாதிக்கவும்,அவர்கள் லாபத்தை அதிகரிக்கவும் சமையல் எரிவாயு விலையை அடிக்கடி உயர்த்தி கொண்டே செல்கின்றது மத்திய அரசு. அதேபோல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் அனைத்து பொருட்கள் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்பை அடைந்துள்ளனர். மோடியின் ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக வளர்ந்து கொண்டே இருக்கின்றனர்.

    மத்திய அரசு பணக்கார ர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்த பொழுதே கடந்த காங்கிரஸ் அரசு மக்கள் நலனுக்காக மிக குறைந்த விலையில் பெட்ரோல் மற்றும் டீசல், சமையல் எரிவாயுவை விற்பனை செய்தது. அடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ராகுல் காந்தி பிரதமராக பொறுப்பேற்றவுடன் பெட்ரோல்,டீசல் மற்றும் கியாஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையை குறைத்து, ஏழை மக்கள் வாழ்வு உயர வழிவகை செய்யப்படும் என பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர்கள் அமுதா சந்திரன், வேல்முருகன், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தென்காசி மாவட்ட பொருளாளராக முரளி ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • 16 வட்டார தலைவர்கள், 15 மாவட்ட அமைப்பு செயலாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சுரண்டை:

    தென்காசி மாவட்ட காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பட்டியலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடார் எம்.எல்.ஏ. வெளியிட்டார்.

    அதன்படி மாவட்ட பொருளாளராக முரளி ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்ட துணைத் தலைவர்களாக கோமதிநாயகம், வள்ளி முருகன், மெடிக்கல் கந்தன், காதர் மைதீன், பாவநாசம், சமுத்திரம், பால் என்ற சண்முகவேல், மணி, முகம்மது உசேன், ஆதிமூலம், சிவராமகிருஷ்ணன், வைகைகுமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    நகர தலைவர்களாக தென்காசி மாடசாமி ஜோதிடர், கடையநல்லூர் சுந்தரபாண்டியன், சுரண்டை ஜெயபால், செங்கோட்டை ராமர், சங்கரன்கோவில் உமாசங்கர், புளியங்குடி பால்ராஜ், செயற்குழு உறுப்பினர்களாக குமரேசன், ராமராஜ், ராமமூர்த்தி,அருள் முருகன், சங்கரலிங்கம், ஜவஹர்லால் நேரு, மாரிமுத்து, ராமர், சுதா, ராஜபாண்டி, பீர்முகமது, தங்கராஜ், பழனிச்சாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    மேலும் 16 வட்டார தலைவர்கள், 15 மாவட்ட அமைப்பு செயலாளர்கள், 12 மாவட்ட செயலாளர்கள், 11 பொதுச் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ராகுல் காந்தியை பிரதமராக்க கடுமையாக உழைக்க வேண்டும் என பழனி நாடார் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

    • போட்டியில் 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் பரிசு வழங்கி பாராட்டினார்.

    கடையம்:

    தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை சி.ஜே.திருமண மண்டபத்தில், லட்சியம் அசோசியேசன் சார்பில், தென்தமிழக அளவிலான யோகா மற்றும் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.

    போட்டிகளுக்கு சி.ஜே.மருத்துவமனை மருத்து வர்கள் தர்மராஜ், அன்புமலர் தர்மராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். தட்சணமாற நாடார் சங்கத்தலைவர் ஆர்.கே. காளிதாசன், சென்னை குளோபல் லிமிடெட் செல்லத்துரைசிங், தோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங்கா வலர் செண்பகராமன் முன்னிலை வகித்தனர். வி.கே.முத்தையா, சரஸ்வதி, வி.என்.ரெசவு முகைதீன், மாலிக் பேகம் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். லட்சியம் அசோசியேசன் தலைவர் பாலகணேசன் வரவேற்றார்.

    போட்டியில் 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் பரிசு வழங்கி பாராட்டினார். பாரதிதாசன் பல்கலைக்கழக இணை ஒருங்கிணைப்பாளர் வில்சன்அருளானந்தன், தேசிய சட்ட உரிமைகள் கழக மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆனந்தகுமார், மதுரை ஜீவன் மூர்த்தி, ராம நீராளன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    நடுவர்களாக ஜெயபிரதாப்சிங், கார்த்திகா பார்த்திபன், கனகராஜ், சுரேஷ், சரவணன், அனுஷீலா ஆகியோர் பணியாற்றினர்.

    இதில் கிருஷ்ணன், கயற்கண்ணி, கண்ணன், மோகன், ரவிக்குமார், பிரபு, நாராயணசிங்க், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் கவிதா பால கணேசன் நன்றி கூறினார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.

    • தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
    • சிவகுருநாதபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் மழைநீர் தேங்கி சகதியாக காட்சி அளிக்கும்.

    சுரண்டை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மற்றும் கால்வாய்களில் பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.சுரண்டை சிவகுருநாதபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் மழைநீர் தேங்கி சகதியாக காட்சி அளிக்கும்.இதனால் பள்ளி தொடர்ந்து ஒரு வாரம் வரை விடுமுறை விடப்பட்டது.இந்த நிலையில் பழனி நாடார் எம்.எல்.ஏ.விடம் பள்ளியில் தரைதளத்தை உயர்த்த கோரிக்கை வைத்திருந்தனர்.

    எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் மண் நிரப்பி தரை தளத்தை உயர்த்தும் பணி நடைபெற்றது. பழனி நாடார் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.தொடர்ந்து கால்வாய்களில் உள்ள அடைப்புகளை நீக்க நடவடிக்கை மேற்கொண்டார்.ஆய்வின் போது சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகிமை கமிட்டி நாட்டாமை தங்கையா நாடார், சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், நகரமன்ற உறுப்பினர்கள் அமுதா சந்திரன், வேல் முத்து,ஞானதீபம் மனோகர,தேவேந்திரன்,பிரபாகர், மகேந்திரன்,பிரபு, அரவிந்த் கந்தையா ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×