கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு மனு

ராமசாமி மகன் சசி (வயது 23), .நரசிம்மமூர்த்தி மகள் பிரகத்தி (22) என்பவக்கும் காதல் ஏற்பட்டது. இவரது காதலுக்கு பிரகத்தியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக கடந்த 7-ந் தேதி குஞ்சரம் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்க வந்த காதல் ஜோடி.
கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்க வந்த காதல் ஜோடி.
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சசி (வயது 23), இவர் கடந்த 10 ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தில் கட்டிட வேலை செய்து வந்தார். இந்நிலையில் சசிக்கும் கர்நாடக மாநிலம் கெங்கேரி மாவட்டம் கன்சந்த்ராவை சேர்ந்த நரசிம்மமூர்த்தி மகள் பிரகத்தி (22) என்பவக்கும் காதல் ஏற்பட்டது. இவரது காதலுக்கு பிரகத்தியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து காதலர்கள் இருவரும் கடந்த 4- ந் தேதி சசியின் சொந்த ஊரான பூண்டி கிராமத்திற்கு வந்தனர். தொடர்ந்து கடந்த 7-ந் தேதி குஞ்சரம் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் பாதுகாப்பு கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பிரகத்தி மனு அளித்தார். மனுவில் கடந்த 6- ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகவும், தனது வீட்டில் என்னை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ததால் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 7-ந் தேதி நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் எனது பெற்றோரும் உறவினர்களும் எங்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே எனக்கும், கணவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. காதல் ஜோடிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com