தேசிய கொடியை இறக்கி பாதுகாப்பாக வைக்க வேண்டும் கடலூர் கலெக்டர் வலியுறுத்தல்

கடலூர் மாவட்டத்தில் 75 -வது ஆண்டு சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டது.தேசியக்கொடியை உரிய மரியாதையுடன் இறக்கி தங்கள் வீடுகளில் பத்திரமாக வைத்துக்கொள்ள அனைத்து பொதுமக்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தேசிய கொடியை  இறக்கி பாதுகாப்பாக வைக்க வேண்டும்  கடலூர் கலெக்டர்  வலியுறுத்தல்
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் 75 -வது ஆண்டு சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடியதை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி என்ற திட்டத்தின்கீழ் 13- ந்தேதி முதல் 15 -ந்தேதி வரை மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி 76 வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடினர் . இத்திட்டம் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஏற்றப்பட்ட தேசியக்கொடியை உரிய மரியாதையுடன் இறக்கி தங்கள் வீடுகளில் பத்திரமாக வைத்துக்கொள்ள அனைத்து பொதுமக்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான உத்தரவினை கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் பிறப்பித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com