இந்திய கடற்படையை கண்டித்து 7 மாவட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

துப்பாக்கி் சூட்டில் சேதம் அடைந்த விசைப்படகுக்கு பதிலாக, புதிய விசைப்படகு வழங்க வேண்டும்.அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்
இந்திய கடற்படையை கண்டித்து 7 மாவட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

நாகப்பட்டினம்:

தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையை கண்டித்து, நாகையில் மீனவர்கள் தபால் நிலையம் முன்பு கொட்டும் மழையில் குடை பிடித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை, மயிலாடுதுறை உள்பட 7 மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மீனவருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

அவரது குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

துப்பாக்கி் சூட்டில் சேதம் அடைந்த விசைப்படகுக்கு பதிலாக, புதிய விசைப்படகு வழங்க வேண்டும்.

அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com