என் மலர்
நீங்கள் தேடியது "தளவாடங்கள்"
- ரூ.1.05 லட்சம் கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
- கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள், தானியங்கி நீர்மூழ்கிகள் வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலானது பல்வேறு பாதுகாப்பு கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
கவச மீட்பு வாகனங்கள், மின்னணு போர் அமைப்பு, முப்படைகளுக்கான ஒருங்கிணைந்த பொதுவான மேலாண்மை அமைப்பு மற்றும் தரையில் இருந்து வான் ஏவுகணைகள் ஆகியவற்றை வாங்குவதற்கு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.1.05 லட்சம் கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள், தானியங்கி நீர்மூழ்கிகள் வாங்குவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கொள்முதல் கடற்படை மற்றும் வணிக கப்பல்களுக்கு ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்கு உதவும் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இந்தியாவில் வைத்தே ராக்கெட்களை தயாரிக்கும் தொழிலில் அதானி நிறுவனம் ஈடுபட உள்ளது.
- தனது தயாரிப்புகளை உலகம் முழுவதிலும் அதானி ஏரோஸ்பேஸ் சந்தைப்படுத்த உள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த உலகப் பணக்காரரான கவுதம் அதானியின் அதானி குழுமம், துறைமுகம்,விமானம், சோலார் உள்ளிட்ட துறைகளில் கோலோச்சி வருவதால் கடந்த 10 ஆண்டுகளாக கவுதம் அதானியின் சொத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அதானி குழுமத்தின் கிளை நிறுவனமான அதானி டிபன்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் பிரான்சின் தாலேஸ் நிறுவனத்துடன் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.
அதாவது இந்தியாவில் வைத்தே ராக்கெட்களை தயாரிக்கும் தொழிலில் அதானி நிறுவனம் ஈடுபட உள்ளது. மத்திய அரசு பல்வேறு பொதுத்துறைகளை தனியார் மயமாக்கி வரும் நிலையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே இஸ்ரோவுக்கான ராக்கெட் தளவாடங்கள், இந்திய ராணுவத்துக்கான ராக்கெட் தளவாடங்களை அதானி ஏரோஸ்பேஸ் நிறுவனம் மேம்பட்ட முறையில் தயாரிக்க உள்ளது.
முன்னதாக இந்தியாவுக்கான பெருமாபாலான ராக்கெட்டுகளை வெளிநாடுகளிலிருந்தே அரசு வாங்கி வந்த நிலையில் தற்போது உள்நாட்டிலேயே ராக்கெட் தயாரிப்பு நடைபெற உள்ளது. இந்தியா மட்டுமின்றி தனது தயாரிப்புகளை உலகம் முழுவதிலும் அதானி ஏரோஸ்பேஸ் சந்தைப்படுத்த உள்ளது.
மேலும் இந்த மாத தொடக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்த்த மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு துறையில் சிறந்து விளங்கும் EDGE குழுமத்துடன் அதானி குழுமம் இதுபோன்றதொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.






