search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nirmalasitharaman"

    பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது குறித்து பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் கூறிய கருத்து காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சி தான் என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். #Nirmalasitharaman #ImranKhan
    புது டெல்லி:

    இந்தியாவில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில், பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான, அமைதி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்திருந்தார். பிரதமர் மோடிக்கு ஆதரவாக இம்ரான் கான் பேசியிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தன.



    இது குறித்து செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

    இதுப்போன்ற கருத்துகள் ஏன் பரவுகின்றன என தெரியவில்லை. பிரதமர் மோடியை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்படும் காங்கிரசின் முக்கிய தலைவர்கள், பாகிஸ்தான் சென்று இம்ரான் கானை சந்தித்து  திட்டம் தீட்டி வருகின்றனர்.

    அதேபோல் இம்ரான் கானின் இந்த கருத்துக்கும் காங்கிரசின் சூழ்ச்சியே காரணமாகும். இப்படி செய்வதால் என்ன தான் நடந்துவிடப்போகிறது என புரியவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரேஷி, இந்தியா, பாகிஸ்தானை ஏப்ரல் 16 மற்றும் ஏப்ரல் 20 ஆகிய தேதிகளில் தாக்குதல் செய்யவுள்ளது என கூறியிருந்தார். இது குறித்து நிர்மலா கூறுகையில், ‘இந்த தேதிகள் குறித்த விவரத்தை இந்தியாவில் இருந்து யார் அனுப்புகின்றனர் என தெரியவில்லை. இந்த கருத்து வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருந்தது’ என கூறியுள்ளார். #Nirmalasitharaman #ImranKhan

    பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளித்து, நிதியுதவியும் செய்து நமக்கு எதிராக ஏவிவிடும் நாடாக பாகிஸ்தான் இருப்பதாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். #Pakistan #terroriststrained #NirmalaSitharaman
    சென்னை:

    ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். சமீபத்தில் பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் தொடர்பாக  விளக்கம் அளித்த அவர், ‘பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

    பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளித்து, நிதியுதவியும், ராணுவ ஆதரவும் அளித்து நமக்கு எதிராக ஏவிவிடும் நாடாகவே பாகிஸ்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    இதைப்போல் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம் மீது நாம் தாக்குதல் நடத்தினோம். இது ராணுவ நடவடிக்கை அல்ல. பாகிஸ்தான் செய்திருக்க வேண்டிய பணியை நாம் செய்து முடித்தோம். இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பயிற்சி அளிக்கப்பட்ட பயங்கரவாதிகள் தங்கி இருந்த முகாம்களை நமது விமானப்படையை வைத்து தகர்த்திருக்கிறோம்’ என தெரிவித்தார். #Pakistan #terroriststrained #NirmalaSitharaman
    பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சியில் ஏற்பட்ட தீவிபத்தில் 300 கார்கள் எரிந்து சாம்பலான இடத்தை நிர்மலா சீதாராமன் இன்று பார்வையிட்டு சேதாரங்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். #NirmalaSitharaman #AeroIndia #AeroIndiafire
    பெங்களூரு:

    பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வரும் விமானப்படை தளத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 300 கார்கள் எரிந்து நாசமாயின. கார்களில் இருந்த ஆவணங்களும் சாம்பலானது. நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன.



    இந்த விபத்துக்கான தொடர்பாக உயரதிகாரிகள் மட்டத்திலான விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ள நிலையில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தீவிபத்து ஏற்பட்ட இடத்தை இன்று பார்வையிட்டு ஏற்பட்ட சேதாரங்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் நேரில் கேட்டறிந்தார். #NirmalaSitharaman  #AeroIndia   #AeroIndiafire
    இந்திய முப்படைகளுக்காக ரூ.9,100 கோடி மதிப்பில் ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் வாங்க பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையிலான கவுன்சில் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. #DefenceMinistry #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில், ரூ.9,100 கோடி மதிப்பு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

    ராணுவத்தின் இரண்டு பிரிவுக்கு ஆகாஷ் ஏவுகணைகள் வாங்கவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 
    இந்திய கடற்படையைச் சேர்ந்த வீராங்கனைகள் மட்டும் கடந்த 8 மாதங்களாக உலகை சுற்றி, இன்று கோவா தலைநகர் பனாஜி வந்தடைந்தனர். அவர்களை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் வரவேற்றார். #INSVTarini #WelcomeHomeTarini #NirmalaSitharaman
    பனாஜி:

    இந்திய கடற்படையில் பணியாற்றிவரும் பெண்கள் தங்களது திறமைகளை பறைசாற்றும் விதமாக வருடம் தோறும் ஏதாவது சாகசத்தை நிகழ்த்தி வருவர். அதே போல் இம்முறை கடற்படை பெண்கள் பாய்மரப்படகு மூலம் உலகை கடல் வழியில் சுற்றி வரும் பயணத்தை தொடங்கினர்.

    பெண் வீராங்கனைகள் மட்டும் கொண்ட இந்த குழுவானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தங்கள் பயணத்தை தொடங்கியது. பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கொடியசைத்து அதனை தொடங்கி வைத்தார்.


    6 கட்டங்களாக நடைபெற்ற இந்தப் பயணத்தில், எரிபொருள் நிரப்புவது, பராமரிப்பு பணிகள் ஆகியவற்றுக்காக, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மாரிடியஸ் மற்றும் ஃபாக்லண்டஸ் ஆகிய நாடுகளின் துறைமுகங்களில் அந்தக் கப்பல் நிறுத்தப்பட்டது. இந்த படகு 5 நாடுகளுக்கு சென்றுள்ளது. 4 கண்டங்களை தாண்டி, 3 பெருங்கடல்களை கடந்து 8 ஆண்டுகளில் உலகை சுற்றி வந்து சாதனைப் படைத்துள்ளது.

    லெப்டினண்ட் கமாண்டர் வர்திகா ஜோஷி தலைமையிலான கமாண்டர் பிரதிபா ஜம்வால், ஸ்வாதி , ஐஸ்வரியா போடாபதி, விஜய தேவி மற்றும் பாயல் குப்தா ஆகிய 5 பெண்கள் மட்டும் கொண்ட குழு இந்த சாதனையை புரிந்துள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தாரினி படகு இந்த பயணத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது சிறப்புக்குரிய அம்சமாகும்.


    இந்நிலையில், தங்கள் உலக சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று தாயகம் திரும்பிய தாரிணி குழுவினரை பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேரில் சென்று வரவேற்றார். #INSVTarini #WelcomeHomeTarini #NirmalaSitharaman
    ×