என் மலர்
இந்தியா
Budget 2025 Live Updates: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு
- 2025- 26ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல்.
- 8வது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல்.
பாராளுமன்றத்தில் சற்று நேரத்தில் 2025- 26ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
தொடர்ச்சியாக 8வது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Live Updates
- 1 Feb 2025 12:43 PM IST
2025- 26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறைவு செய்தார்.
- 1 Feb 2025 12:38 PM IST
ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வருமான வரி விலக்கு- நிர்மலா சீதாராமன்.

ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வருமானம் பெறுவோருக்கு ரூ.17,000 வரை வருமான வரியில் இருந்து பயன்பெறுவார்கள்- நிர்மலா சீதாராமன்.
- 1 Feb 2025 12:36 PM IST
வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருவாய்க்கான TDS உச்சவரம்பு ரூ.2.4 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்வு.
- 1 Feb 2025 12:36 PM IST
மூத்த குடிமக்களுக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயர்வு.
- 1 Feb 2025 12:34 PM IST
வரி செலுத்துவோர், வரி நிர்வகிப்பாளர்களுக்கு எளிதில் புரியும் வகையில் புதிய வருமான வரி சட்டம் இயற்றப்படும்- நிர்மலா சீதாராமன்.









