என் மலர்
இந்தியா
Budget 2025 Live Updates: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு
- 2025- 26ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல்.
- 8வது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல்.
பாராளுமன்றத்தில் சற்று நேரத்தில் 2025- 26ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
தொடர்ச்சியாக 8வது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Live Updates
- 1 Feb 2025 12:32 PM IST
திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார்.
- 1 Feb 2025 12:30 PM IST
மீன்வளத்துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில், கடல் சார்ந்த பொருட்களுக்கான அடிப்படை இறக்குமதி வரி குறைப்பு. அதன்படி, கடல்சார் பொருட்களுக்கான அடிப்படை இறக்குமதி வரி 30 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைப்பு.
- 1 Feb 2025 12:27 PM IST
எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி உதிரி பாகங்களுக்கு இறக்குமதி வரி விலக்கு. லித்தியம் பேட்டரி, சிங்க், கோபால்ஸ் பௌடர் உள்ளிட்ட 12 வகையான அரிய வகை கனிமங்களுக்கு வரி விலக்கு.
- 1 Feb 2025 12:26 PM IST
புற்றுநோய் போன்ற அரியவகை நோய்களுக்கான 36 மருந்துகளுக்கு இறக்குமதி வரியில் இருந்து முற்றிலும் விலக்கு.
- 1 Feb 2025 12:25 PM IST
2024-25ம் நிதியாண்டில் திருத்தி அமைக்கப்பட்ட பட்ஜெட் மதிப்பீடு ரூ.31.47 லட்சம் கோடி.
- 1 Feb 2025 12:23 PM IST
வருமான வரித்துறையில் 100 சட்டப்பிரிவுகளை குற்றம் அற்றதாக ஆக்கும் வகையில் ஜன்விஷ்வாஷ் 2.0 மசோதா.
- 1 Feb 2025 12:21 PM IST
புதிய வருமான வரி மசோதா பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படுகிறது.
- 1 Feb 2025 12:21 PM IST
அந்நிய நேரடி முதலீட்டிற்கான உச்சவரம்பு 100 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது- நிர்மலா சீதாராமன்.
- 1 Feb 2025 12:18 PM IST
ஐஐடியில் பயிலும் மேலும் 10 ஆயிரம் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பிரதமரின் ஆராய்ச்சி ஊக்க தொகை திட்டம்- நிர்மலா சீதாராமன்








