என் மலர்
இந்தியா
Budget 2025 Live Updates: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு
- 2025- 26ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல்.
- 8வது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல்.
பாராளுமன்றத்தில் சற்று நேரத்தில் 2025- 26ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
தொடர்ச்சியாக 8வது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Live Updates
- 1 Feb 2025 12:14 PM IST
நாட்டிலுள்ள 50 முக்கிய சுற்றுலா தளங்கள் மாநில அரசுகளுடன் இணைந்து மேம்படுத்தப்படும்.
குறிப்பிட்ட சுற்றுலா குழுவினருக்கு விசா விண்ணப்ப கட்டணத்தில் இருந்து முற்றுலும் விலக்கு.
மருத்துவ சுற்றுலா, Heal in India போன்ற திட்டங்கள் ஊக்குவிக்கப்படும்- நிர்மால சீதாராமன்.
- 1 Feb 2025 12:10 PM IST
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரத்யே அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
* பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஐஐடி விரிவுபடுத்தப்படும்.
* பீகாரில் உணவு பதப்படுத்துதல் தேசிய நிறுவனம் அமைக்கப்படும்.
* பீகார் மாநிலத்திற்கு என்று பிரத்யேக நீர்ப்பாசன திட்டங்கள்.
* பாட்னாவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
- 1 Feb 2025 12:08 PM IST
120 புதிய வழித்தடங்களில் விமான சேவை வழங்கும் வகையில் உதான் திட்டம்.
மலை, வடகிழக்கு பகுதிகளில் உள்ள சிறிய விமான நிலையங்களுக்கு கூடுதல் கவனம்.
பீகார் மாநிலம் பாட்னாவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம் அமைக்கப்படும்- நிர்மலா சீதாராமன்.
- 1 Feb 2025 12:04 PM IST
அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்- நிர்மலா சீதாராமன்.
- 1 Feb 2025 12:03 PM IST
2040க்குள் 100 ஜிகா வாட் அளவுக்கு அணுசக்தி மூலம் மின்சார உற்பத்தி செய்ய முடிவு- நிர்மலா சீதாராமன்.
- 1 Feb 2025 11:59 AM IST
ஸ்விக்கி, சோமாட்டோ ஆகிய கிக் பணியாளர்களின் நலுனுக்காக அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றும், இ-ஷ்ரம் இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்படும் இத்திட்டத்தின் மூலம் சுமார் ஒரு கோடி கிக் பணியாளர்கள் பயன் பெற உள்ளனர் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
- 1 Feb 2025 11:56 AM IST
கிக் பணியாளர்களின் நலுனுக்காக அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றும், இ-ஷ்ரம் இணையதளம் வாயிலாக பதிவு செய்து பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
- 1 Feb 2025 11:53 AM IST
அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை மைய வசதி. நடப்பாண்டில் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் சுமார் 2000 டே கேர் புற்றுநோய் மருத்துவ மையம் அமைக்கப்படும்- நிர்மலா சீதாராமன்.
- 1 Feb 2025 11:51 AM IST
ஐஐடிகளில் இந்தாண்டு கூடுதலாக 65 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை- நிர்மலா சீதாராமன்.
- 1 Feb 2025 11:51 AM IST
பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்காக ரூ.5 ஆயிரம் கோடியில் புதிய மையங்கள்- நிர்மலா சீதாராமன்.








