என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேக் இன் இந்தியா"

    • இந்திய விமானப்படையின் காலாவதியான MiG-21 ரக விமானங்களுக்கு மாற்றாக இருக்கும்.
    • இந்த விமானங்களில் 65%க்கும் அதிகமான பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.

    இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேஜஸ் LCA (Tejas Light Combat Aircraft ) Mark 1A போர் விமானங்களை வாங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.62,000 கோடி மதிப்பீட்டில் 97 விமானங்களை வாங்க இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் இந்த விமானங்களை தயாரிக்கிறது.

    முன்னதாக ஏற்கனவே ரூ. 48,000 கோடி மதிப்பீட்டில் 83, LCA Mark 1A போர் விமானங்களுக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய ஆர்டர், இந்திய விமானப்படையின் காலாவதியான MiG-21 ரக விமானங்களுக்கு மாற்றாக இருக்கும்.

    இந்த புதிய LCA Mark 1A போர் விமானங்கள் மேம்பட்ட ரேடார் மற்றும் மின்னணு அமைப்புகளைக் கொண்டிருக்கும். இந்த விமானங்களில் 65%க்கும் அதிகமான பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.

    இது உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை மேம்படுத்தும் ஒரு முக்கியமான படியாகும்.

    • 2014 முதல், நமது பொருளாதாரத்தில் உற்பத்தி 14% ஆகக் குறைந்துள்ளது.
    • நாம் இறக்குமதி செய்கிறோம், ஆனால் உற்பத்தி செய்வதில்லை, இதனால் சீனா லாபம் அடைகிறது.

    மோடி தீர்வுகளை முன்வைப்பதில் அல்ல, முழக்கங்களை எழுப்புவதில் தான் திறமை வாய்ந்தவர் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

    டெல்லியில் சிவம் மற்றும் சைஃப் ஆகியோரை ராகுல் காந்தி சந்தித்து பேசினார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "மேக் இன் இந்தியா திட்டம் தொழிற்சாலை உற்பத்தி அதிகரிக்கும் என்று உறுதி அளித்தது. அப்படியானால் உற்பத்தி ஏன் மிகக் குறைவான அளவில் உள்ளது. இளைஞர்களின் வேலையின்மை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது. மேலும் சீனாவிலிருந்து இறக்குமதிகள் ஏன் இரட்டிப்பாகியுள்ளன?

    மோடி தீர்வுகளை அல்ல, முழக்கங்களை எழுப்புவதில் தேர்ச்சி பெற்றுள்ளார். 2014 முதல், நமது பொருளாதாரத்தில் உற்பத்தி 14% ஆகக் குறைந்துள்ளது.

    உண்மை அப்பட்டமானது: நாம் உதிரிபொருட்களை அசெம்பிள் செய்கிறோம், இறக்குமதி செய்கிறோம், ஆனால் உற்பத்தி செய்வதில்லை. சீனா லாபம் அடைகிறது.

    புதிய யோசனைகள் எதுவும் இல்லாமல், மோடி சரணடைந்துவிட்டார். மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (PLI) திட்டம் கூட இப்போது அமைதியாகத் திரும்பப் பெறப்படுகிறது.

    நேர்மையான சீர்திருத்தங்கள் மற்றும் நிதி உதவி மூலம் லட்சக்கணக்கான உற்பத்தியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு அடிப்படை மாற்றம் இந்தியாவிற்குத் தேவை.

    நாம் மற்ற நாடுகளுக்கு ஒரு சந்தையாக இருப்பதை நிறுத்த வேண்டும். நாம் இங்கே உற்பத்தி செய்யவில்லை என்றால், உற்பத்தி செய்பவர்களிடம் இருந்து நாம் வாங்கிக் கொண்டே இருப்போம். நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். 

    • மேக் இன் இந்தியா திட்டம் உற்பத்திக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.
    • மேக் இன் இந்தியா திட்டத்தில் நம்பிக்கை வையுங்கள் என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி அடைந்துவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    இதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசியதாவது:

    மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி அடையவில்லை. ஆனால் உற்பத்திக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.

    மேக் இன் இந்தியாவில் நம்பிக்கை வையுங்கள், அது நல்ல பலன்களைத் தருகிறது.

    இந்தியாவின் வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரம் சில வளர்ந்த நாடுகளை விட மிகச் சிறந்தவை.

    மணிப்பூர் மற்றும் பிற மாநிலங்கள் மீது மோடி அரசாங்கம் அதிக அக்கறை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    • கம்ப்யூட்டர், லேப்டாப் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம்.
    • இந்தியா தற்போது 2-வது பெரிய சந்தையாக உள்ளது.

    தைவான் நாட்டை சேர்ந்த 'ஏசர்' மற்றும் 'அசுஸ்' உலகின் மிகப்பெரிய கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்நாட்டு தொழிலுக்கு ஆதரவு அளிக்கும் முயற்சியில் இறக்குமதிக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தைவானின் ஏசர் மற்றும் அசுஸ் நிறுவனங்கள் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை தொடங்க திட்டமிட்டு உள்ளன. இதுகுறித்து ஏசர் தலைவர் ஜேசன் சென் கூறும் போது, "இந்தியாவில் இந்த ஆண்டு கம்ப்யூட்டர், லேப்டாப் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம்."

     


    "எங்களது ஏற்றுமதியில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா தற்போது 2-வது பெரிய சந்தையாக உள்ளது. கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு அதிகப்படியான கம்ப்யூட்டர், லேப்டாப்புகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்திய சந்தை மிகவிரைவாக விரிவடைந்து வருகிறது. ஆனாலும் இந்தியா கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது."

    "இந்தியாவில் உதிரிபாகங்களை இறக்குமதி செய்து அசெம்பிளி உற்பத்தி மட்டுமே நடக்கிறது. எனவே புதிதாக உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். மேலும் நேரடியாக தொழில் தொடங்க மத்திய அரசு முன்னுரிமை வழங்கி உள்ளது."

    "இதன் காரணமாக இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் புதிய உற்பத்தி ஆலை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஏசர் மற்றும் அசுஸ் டெக் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை இரு மடங்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளன," என்று தெரிவித்தார்.

    • வெற்றி அடைய செய்ய அயராது உழைக்கும் அனைவரையும் பாராட்டுகிறேன்.
    • பல்வேறு துறைகளில் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. திறன்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    'மேக் இன் இந்தியா' திட்டம் 2014-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி தொடங்கப்பட்டது. 10-வது ஆண்டு நிறைவையொட்டி பல்வேறு துறைகளில் ஏற்றுமதி அதிகரிப்பதற்கும், திறன்களை உருவாக்குவதற்கும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் இது வழிவகுத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறியதாவது:-

    மேக் இன் இந்தியா இன்று 10 ஆண்டுகளை கொண்டாடுகிறோம். இதை வெற்றி அடைய செய்ய அயராது உழைக்கும் அனைவரையும் பாராட்டுகிறேன். இந்தத் திட்டம் நாட்டின் உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்புகளின் அதிகார மையமாக மாற்ற 140 கோடி இந்தியர்களின் உறுதியை விளக்குகிறது.

    பல்வேறு துறைகளில் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. திறன்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதனால் பொருளாதாரம் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க சீன அரசு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக சீன ஊடகத்தில் வெளியான செய்தியை நிதி அமைச்சகம் மறுத்துள்ளது. #IndianCurrency #RBI #China #Congress
    புதுடெல்லி:

    சீனாவில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றில், ‘இந்தியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுடன் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சீன ரூபாய் நோட்டு அச்சடிப்பு கார்பரேஷனின் தலைவர் லியூ குயிஷெங் பேட்டியளித்திருந்தார். 

    இந்த செய்தியை மேற்கோள் காட்டி காங்கிரஸ் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில், சீன ஊடகத்தில் வெளியான செய்தி தவறானது என நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.

    இந்திய ரூபாய்கள் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள அச்சகங்கள் மூலமே அச்சடிக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
    இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க சீன அரசு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. #IndianCurrency #RBI #China #Congress
    புதுடெல்லி:

    பட்டுசாலை பொருளாதார திட்டத்தின் கீழ் வெளிநாடுகளின் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை சீனாவில் உள்ள அரசு நிறுவனம் தற்போது தொடங்க உள்ளது. சீனாவின் ரூபாயான யுவானை அதிகளவில் அச்சடிப்பதற்காக நாடு முழுவதும் பல புதிய அச்சகங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

    ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றில் சீன ரூபாய் நோட்டு அச்சடிப்பு கார்பரேஷனின் தலைவர் லியூ குயிஷெங், “அண்டை நாடுகள் மற்றும் மிக நெருக்கமான நட்புறவில் உள்ள நாடுகளுக்கு ரூபாய் நோட்டு அச்சடிக்க ஒப்பந்தம் செய்துள்ளோம்” என அவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    இந்தியா, வங்காளதேசம், இலங்கை, நேபாளம், தாய்லாந்து, மலேசியா, பிரசில், போலந்து ஆகிய நாடுகளுடன் ரூபாய் நோட்டு அச்சடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். 

    இந்த தகவலை இந்திய ரிசர்வ் வங்கி மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மேற்கண்ட செய்தியை கொண்டு மத்திய அரசை காங்கிரஸ் கட்சி தாக்கியுள்ளது. ‘இந்திய ரூபாய் நோட்டையே வெளிநாட்டில் அச்சடிப்பதுதான் மேக் இன் இந்தியாவா’ என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    பிராந்திய நாடுகளில் சீனாவின் கரம் வலுவாக இறங்குவதை இந்தியா ஏன் எதிர்க்கவில்லை எனவும் அவர் தனது கேள்வியில் குறிப்பிட்டுள்ளார். 
    ×