என் மலர்tooltip icon

    இந்தியா

    பட்ஜெட் 2025-26: ஸ்டார்ட்அப் தொழில் மேம்பாட்டுக்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு
    X

    பட்ஜெட் 2025-26: ஸ்டார்ட்அப் தொழில் மேம்பாட்டுக்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு

    • MSME-க்கு கடன் வழங்க 1.57 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • ரூ.5 லட்சம் வரம்புடன் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்துவோம்

    பாராளுமன்றத்தில் 2025- 26ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் இந்நிலையில் ஸ்டார்ட் அப் தொழில் வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    சிறு குறு தொழில் நிறுவங்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ. 5 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்த்தப்படும். மேலும் MSME-க்கு கடன் வழங்க 1.57 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    எஸ்.சி, எஸ்.டி பிரிவை சேர்ந்த 5 லட்சம் பெண்கள், முதல் தலைமுறை தொழில்முனைவோர்களுக்கு 2 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும்.சிறு குறு தொழில் உற்பத்தியைப் பெருக்க தேசிய உற்பத்தி இயக்கம் தொடங்கப்படும்.

    புதிதாக தொழில் தொடங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ. 10 கோடி முதல் ரூ.20 கோடி வரை கடன் உத்தரவாதம் வழங்கப்படும்.

    உதயம் போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட குறு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வரம்புடன் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

    ஸ்டார்ட்அப் இந்தியாவுக்கான செயல் திட்டம் ஜனவரி 16, 2016 அன்று வெளியிடப்பட்டது. அதே ஆண்டில், ஸ்டார்ட்அப்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, 10,000 கோடி ரூபாயில் ஸ்டார்ட்அப்களுக்கான நிதி (FFS) திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அதன் நிதிக்கு மேலும் ரூ.10,000 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்த மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) இதுவரை 1.5 லட்சத்திற்கும் அதிகமான ஸ்டார்ட்அப்களை அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×